Sunday, December 28

வெப் சீரிஸ்

சட்டமும் நீதியும்- இணைய தொடர் விமர்சனம்

சட்டமும் நீதியும்- இணைய தொடர் விமர்சனம்

சினிமா, வெப் சீரிஸ்
பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் சரவணன் ,நம்ரிதா நடிப்பில் வெளியாகி உள்ள சட்டமும் நீதியும் இணைய தொடருக்கு, இசை விபின் பாஸ்கர் வழக்கறிஞர் சரவணன் சாதாரணமான ஒரு நோட்டரியாக புகார்களை தட்டச்சு செய்து கொடுக்கும் பணியினை செய்து வருகிறார், அவரிடம் உதவியாளர் பணிக்கு சேர நம்ரிதா முயற்சி செய்கிறார். தன்னிடம் அவர் உதவியாளராக சேர்வதை விட வேறு ஒரு வழக்கறிஞரிடம் நம்ரிதா சேருவது நல்லது என சரவணன் நினைக்கிறார். இந்த சமயத்தில் குப்புசாமி என்பவர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே தீக்குளித்து இறந்து போகிறார், இறந்து போன குப்புசாமிக்கு எப்படியாவது நீதியை பெற்றே தீர வேண்டும் என்று நினைக்கும் சரவணன், அதற்கான பொதுநல வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்கிறார். தீக்குளித்து உயிரிழந்த குப்புசாமியின் மகள் காணாமல் போய்விட்டதால், அது பற்றி காவல்துறையிடம் அவர் முறையிட்டிருந்தார், ஆனால் அது குறித்து காவல்துறையினர் எந்த வழக்கையும் ...
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘தி குட் வைஃப்’ வெப்சீரிஸில் தனது திறமையான நடிப்பிற்காக நடிகை ப்ரியாமணி விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்று வருகிறார்!

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘தி குட் வைஃப்’ வெப்சீரிஸில் தனது திறமையான நடிப்பிற்காக நடிகை ப்ரியாமணி விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்று வருகிறார்!

சினிமா, வெப் சீரிஸ்
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘தி குட் வைஃப்’ வெப்சீரிஸில் தனது திறமையான நடிப்பிற்காக நடிகை ப்ரியாமணி விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்று வருகிறார்! நடிகை ப்ரியாமணி தனது ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்து பாராட்டுகள் பெற்று வருகிறார். பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணி ரத்னம், ராம் கோபால் வர்மா மற்றும் அமீர் என தமிழ் சினிமாவின் திறமைமிக்க இயக்குநர்களுடன் பணிபுரிந்தது மட்டுமல்லாது வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற 'பருத்திவீரன்' படத்தில் இருந்து, 'தி ஃபேமிலி மேன்' வெப்சீரிஸில் அவரது துணிச்சலான மற்றும் உணர்ச்சிகரமான கதாபாத்திரம் என பல கதைகளில் தன்னை நிரூபித்துள்ளார். தற்போது, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ’தி குட் வைஃப்’ இணையத்தொடரில் தனது கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் ஒருமு...
ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ வரும் ஜூலை 18 முதல் ஸ்ட்ரீமாகிறது !

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ வரும் ஜூலை 18 முதல் ஸ்ட்ரீமாகிறது !

சினிமா, வெப் சீரிஸ்
இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், விலங்கு, அயலி, கூசே முனுசாமி வீரப்பன், ஐந்தாம் வேதம் போன்ற ஹிட் தமிழ் ஓரிஜினல்களுக்குப் பிறகு, தனது அடுத்த அதிரடி கோர்ட் டிராமா சீரிஸான *‘சட்டமும் நீதியும்’* சீரிஸை வரும் ஜூலை 18, 2025 அன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, சென்னை மாநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. திரையுலகில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் நடிகர் சரவணன், தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் அவரது சாதனை இந்நிகழ்வினில் கொண்டாடப்பட்டது. முன்னாள் ஹீரோவாகவும், பின்னர் பல வலிமையான கேரக்டர் ரோல்களால் ரசிகர்களின் மனங்களில் தனி இடம் பிடித்தவர் சரவணன், தற்போது தீவிரமும், உணர்வுகளும் கலந்த நுணுக்கமான நடிப்புட...
“நான் திரையில் மட்டும் டாக்டர் இல்லை. நிஜத்திலும் தான்” -‘ஹார்ட்பீட்’ வெப் தொடரில் டாக்டராக நடித்த நடிகை தீபா

“நான் திரையில் மட்டும் டாக்டர் இல்லை. நிஜத்திலும் தான்” -‘ஹார்ட்பீட்’ வெப் தொடரில் டாக்டராக நடித்த நடிகை தீபா

சினிமா, வெப் சீரிஸ்
'ஹார்ட்பீட்' வெப் தொடரில் டாக்டராக நடித்த நடிகை தீபா பாலு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்! கலைக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கலை மற்றும் திரைத்துறைக்கு பல திறமைகள் அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை சேர்ந்த தீபா பாலு திரைத்துறைக்கு தவிர்க்க முடியாத அறிமுகம். ஹாட்ஸ்டாரில் 'ஹார்ட்பீட்' வெப்தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்லூரியில் தீபா படித்துக் கொண்டிருந்தபோது, நாக்கவுட் யூடியூப் சேனலில் அவர் நடித்த 'தேன்மிட்டாய்' சீரிஸ் அனைவரையும் ரசிக்க வைத்தது. கோவிட் காலக்கட்டத்தில் ஹிட் ஆன இந்த சீரிஸ் மூலம் அவருக்கு ரசிகர்கள் உருவானதுடன் திரைத்துறையினர் கவனத்தையும் தீபா கவர்ந்தார். ஹாட்ஸ்டார் வெப்சீரிஸூக்காக எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் ஷியாம் தீபாவை தொடர்பு கொண்டதுதான் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய ...
“இது எனக்கு வெறும் ஒரு வேடம் மட்டுமல்ல; இது ஒரு அழைப்பு”.-Roshan Mathew

“இது எனக்கு வெறும் ஒரு வேடம் மட்டுமல்ல; இது ஒரு அழைப்பு”.-Roshan Mathew

சினிமா, வெப் சீரிஸ்
Sony LIV-இன் KanKhajura-வில் Ashu ஆக மாறிய Roshan Mathew: “சில கதாபாத்திரங்கள்தான் உங்களைத் தேர்ந்தெடுக்கின்றன” Sony LIV-இன் தரமான புதிய வெப் தொடரான KanKhajura-வில் Roshan Mathew, மௌனத்தில் புதைந்து கிடந்தும், கடந்தகால சம்பவங்களால் பயந்து கிடந்தும், யாராவது நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்று  ஏங்கும் Ashu என்ற கதாப்பாத்திரத்தில் களமிறங்குகிறார். இது பற்றி Roshan Mathew கூறும் பொழுது, "இது எனக்கு வெறும் ஒரு வேடம் மட்டுமல்ல; இது ஒரு அழைப்பு". “இந்தக் கதாப்பாத்திரம் எளிதில் கிடைக்கக் கூடியது அல்ல என்பது எனக்குத் திடீரெனத் தெரிந்தது. என்னைச் சார்ந்த Ashu எப்படி இருப்பார் என்பதை கண்டுபிடிக்க அந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை,” என்கிறார் Mathew.மேலும் கண்களுக்கு புலப்படாத உணர்வுச் சிக்கல்களுக்கு அடியில் இருக்கிற Ashu-வின் கேரக்டர்தான் Roshan-ஐ இழுத்தது. மேலும் இந்தக் கதாபாத்திரம் பற்ற...
‘ஹார்ட்பீட் சீசன்2’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது…ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புதிய எபிசோட் வெளியாகும்!

‘ஹார்ட்பீட் சீசன்2’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது…ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புதிய எபிசோட் வெளியாகும்!

சினிமா, வெப் சீரிஸ்
 ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ’ஹார்ட்பீட் சீசன் 2’, இப்போது ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. ரசிகர்களின் விருப்பமான இந்தத் தொடரின் முதல் நான்கு எபிசோடுகள் இப்போது ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புது எபிசோட் ஒளிபரப்பாகும். இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள இரண்டாவது சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். இரண்டாவது சீசன் பல முக்கிய தருணங்கள், முரண்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையைத் தரும்.சீசன் 2 இல், பழைய பதட்டங்களைத் தாண்டி தற்போது சீனியராக பதவி உயர்வு பெற்ற ரீனா (தீபா பாலு) மற்றும் குணா (சர்வா) ஆகியோர் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆர்.கே. மருத்துவமனையின் தூணான டாக்டர் ரதி (அனுமோல்) தனது தனிப்பட்ட வாழ்க்கையை...
ZEE5-இன் “அய்யனா மானே” சீரிஸ், 5 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !

ZEE5-இன் “அய்யனா மானே” சீரிஸ், 5 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !

சினிமா, வெப் சீரிஸ்
நடிகை குஷி ரவி கலக்கும் “அய்யனா மானே” சீரிஸ், ஓடிடி உலகில் சாதனை படைத்து வருகிறது !! ~ இயக்குநர் ரமேஷ் இந்திரா இயக்கத்தில், குஷி ரவி, அக்ஷயா நாயக் மற்றும் மானசி சுதீர் நடிப்பில் உருவான ZEE5-இன் அய்யனா மானே – கர்நாடகத்தின் பெருமையாகவும், ஓடிடி உலகின் அடுத்த பிளாக்பஸ்டர் சீரிஸாகவும், சாதனை படைத்து வருகிறது ~ இளைஞர்களின் இதயம் கவர்ந்த நடிகை குஷி ரவி நடிப்பில், சமீபத்தில் வெளியான ZEE5 இன் முதல் கன்னட ஓரிஜினல் வெப் சீரிஸான “அய்யனா மானே” பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸ் தற்போது 5 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மக்களின் உள்ளார்ந்த கலாச்சார அம்சத்தோடு, நவீனத்தை இணைக்கும் ZEEயின் கதைகளில் இது ஒரு சிறந்த படைப்பாக அமைந்துள்ளது. ஆறு எபிசோடுகளைக் கொண்ட இந்த திரில்லர் சீரிஸை, இயக்குநர் ரமேஷ் இந்திரா இயக்க, ஸ்ருதி நாயுடு புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ...
மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் புரோமோ தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது!

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் புரோமோ தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது!

சினிமா, வெப் சீரிஸ்
தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வெப் சீரிஸ் 'ஹார்ட் பீட்'. இதன் இரண்டாவது சீசன் புரோமோ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள இரண்டாவது சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். பல எமோஷனலான தருணங்கள், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மருத்துவமனை வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்புடன் இருப்பதால் 'ஹார்ட் பீட்'டுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. வரவிருக்கும் இரண்டாவது சீசன் பல முக்கிய தருணங்கள், முரண்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையைத் தர இருக்கிறது.ஆர்கே மருத்துவமனையில் மூத்த மருத்துவராக ரீனா 2.0 இருக்கும்படியாக இந்த புரோமோ தொடங்குகிறது. தனது புதிய அணியை மிகவும் கட்டுபாடுடனும் அமைதியாகவும் வழிநடத்துகிறார். ஆனால், இந்த மருத்துவர் உலகத்திற்கு அப்பால் ரீ...
ZEE5 தளம் வழங்கும் “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் முன் திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !!

ZEE5 தளம் வழங்கும் “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் முன் திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !!

சினிமா, வெப் சீரிஸ்
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸை வெளியிட்டுள்ளது. S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீரிஸின் முன் திரையிடல் பத்திரிகை ஊடக நண்பர்களுக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன் பேசியதாவது... கடந்த அக்டோபரில் ஐந்தாம் வேதம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது, அந்த சீரிஸுக்கு நீ...
“ஓம் காளி ஜெய் காளி’ வெப் சீரிஸின்  கதை கேட்கும்போதே என் கதாபாத்திரத்தின் சுவாரஸ்யத்தை அறிந்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். -சீமா பிஸ்வாஸ்

“ஓம் காளி ஜெய் காளி’ வெப் சீரிஸின் கதை கேட்கும்போதே என் கதாபாத்திரத்தின் சுவாரஸ்யத்தை அறிந்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். -சீமா பிஸ்வாஸ்

சினிமா, வெப் சீரிஸ்
"ஓம் காளி ஜெய் காளி' வெப் சீரிஸில் என்னைக் கவர்ந்ததே அதன் புராணங்களும் சடங்குகளும்தான் " - நடிகை சீமா பிஸ்வாஸ்!இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான நடிகை சீமா பிஸ்வாஸ் மிகவும் கவனமாகத்  தனது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ’பண்டிட் குயின்’, ’காமோஷி’ மற்றும் பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் பான்-இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், 2003 ஆம் ஆண்டில் வெளியான ‘இயற்கை’ படம் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, 2006 இல் வெளியான ‘தலைமகன்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்ச் 28 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும்  'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸில் நடித்திருக்கிறார். இந்த வெப்சீரிஸில் பணிபுரிந்த அனுபவம் பற்றி நடிகை சீமா பிஸ்வாஸ் பகிர்ந்து கொண்டதாவது, "புராணங்கள், சடங்குகள் என இந்த வெப்சீரிஸின் கதை மிக...