Saturday, April 25

‘பாம்’-திரை விமர்சனம்

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ள  படம் ‘பாம்’. இப்படத்தில் நாயகியாக ஷிவாத்மிகா நடித்துள்ளார் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட், அபிராமி, நாசர், சிங்கம் புலி, பால சரவணன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஊர்மக்களிடையே ஏற்பட்ட பிரிவினைவாதம் காரணமாக  இரண்டாக பிரிந்துபோகுற கிராமத்தை மீண்டும் ஒன்று சேர்க்க விரும்பும் நண்பர்களாக அர்ஜுன் தாசும், காளி வெங்கட்டும் அந்த ஊர் மக்கள்கிட்ட பல முயற்சிகள் எடுக்கிட்டு இருக்கற நிலையில,காளி வெங்கட் திடீரென இறந்து போய் விடுகிறார். இந்த நிலையில் காளி வெங்கட்டின் உடலில் சாமி வந்து இறங்கியிருப்பதாக ஊர் பூசாரி சொல்ல இரண்டு ஊர்மக்களும் அவரை தெய்வமாக நினைத்து வழிபடுகிறார்கள். இதற்கிடையில் அந்த சாமியை சொந்தம் கொண்டாடி ஊர்மக்களிடையே மீண்டும் பிரச்சனை வெடிக்கிறது.இதன் பின் என்ன நடந்தது ? பிளவுபட்ட ஊர் மக்கள் ஒன்று சேர்ந்தார்களா ? ,அவர்களை இணைக்கும் முயற்சியில் அர்ஜுன் தாஸுக்கு வெற்றி கிடைத்ததா ? என்பதே படத்தின் மீதி கதை 

இந்த படத்தில் கதையின் நாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார், அவர் இந்த படத்தில் ஒரு சராசரி கிராமத்து இளைஞனின்  கதாபாத்திரத்திற்கு ஏற்ப, இயல்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி, புதிய பரிமாணத்தில் பரிமளித்துள்ளர்,தன்னுடைய முந்தைய படங்கள் வாயிலாக தனக்கென்று உருவாக்கி உள்ள இமேஜை உடைத்து,சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தன்னை வெளிப்படுத்த முடியும் என இந்த படத்தில் நிருபித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக ஷிவாத்மிகா நடித்துள்ளார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பை அவர் நன்கு வெளிபடித்தியுள்ளார், மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட் மிகவும் அரிதான கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார், மற்றும் அபிராமி, நாசர், சிங்கம் புலி, பால சரவணன் என பிற கலைஞர்களும் படம் முழுக்க பவனி வந்து அவரவர் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள். .

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து உள்ளார். பாடல்களும் பின்னணி இசையும் கதையோடு நன்கு பயணிக்கும் வகையில் அமைந்து படத்துக்கு பலமாக உள்ளது .  கதைக்கு பொருத்தமான காட்சி அமைப்பில் ,நேர்த்தியான படத்தினை ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் விஷால் வெங்கட்.

மொத்தத்தில் இந்த பாம் -கருத்தும் காமெடியும் கலந்த சரவெடி

Spread the love