*நடிகர் சூரி, இயக்குநர் ஆர். ரவிகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் ‘Blood Followed The Flood’ எனும் டேக்லைன் கொண்ட புதிய படம் #சூரி07, #மைத்ரிதமிழ்03 அறிவிப்பு!*
*நடிகர் சூரி, இயக்குநர் ஆர். ரவிகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் ‘Blood Followed The Flood’ எனும் டேக்லைன் கொண்ட புதிய படம் #சூரி07, #மைத்ரிதமிழ்03 அறிவிப்பு!*
இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் #மைத்ரிதமிழ்03 என்ற தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
தீவிரமான களத்துடன் அதே சமயம் கண்ணைக் கவரும் வகையில் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. வெள்ள நீரில் இடுப்பு வரை நின்றிருக்கும் கதாநாயகனை பின்பிருந்து காட்டும் வகையில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரில் பிரதிபலிக்கும் அவரது உருவம...