Tuesday, March 18

இன்று திருவள்ளுவர் தினம்

உலக பொது மறை நூலான திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார் . தனி சிறப்போடு திகழும் திருக்குறள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியதாக கருதப்படுகிறது.

திருக்குறளில் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. 133 அதிகாரங்கள் 1330 குறள்கள் கொண்ட திருக்குறள் உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, மேலும் திருக்குறளில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய குறிப்பு என்னவெனில் தமிழ் என்ற சொல் அதில் பயன்படுத்தபடவேயில்லை என்பதாகும் .

வாழ்வியல் நெறி முறைகளை வையகத்தில் வாழும் மாந்தர்க்கு ரத்னசுருக்கமாக உவமைகளுடன் விளக்கி சொல்லும் திருக்குறள் ,ஆங்கில மொழியில் முதன்முதலாக ஜி .யு . போப் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது .

மதம், மொழி, இனம் என்ற எந்த பாகுபாடும் இன்றி எல்லா மக்களுக்கும் பொதுவான முறையில் நல்ல சிந்தனைளை தரக்கூடிய திருக்குறளை தந்த வள்ளுவப்பெருமகனார்க்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தை மாதத்தின்இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது. அது மட்டுமின்றி திருவள்ளுவருக்கு மேலும் பெருமை தரும் விதமாக அவரது சிலை, 41-மீட்டர் (133 அடி) உயரத்தில் இந்திய தீபகற்பத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி நகருக்கு அருகில் ஒரு சிறிய தீவின் மீது அமைக்கப்பட்டுள்ளது இந்திய சிற்பி வி.கணபதி ஸ்தபதியால் செதுக்கப்பட்ட இச்சிலை 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

வாழ்வின் அனைத்து நெறிமுறைகளையும் அறிந்துகொள்ள தினம்தோறும் சிறுவர்கள் குறளை தவறாமல் படித்து மனப்பாடம் செய்து வந்தால் நற்பண்பு கொண்டவர்களாய் இந்த நானிலத்தில் சிறப்புற வாழலாம் .

Spread the love