Sunday, April 19

Author: admin

இயக்குநர் சுசீந்திரன் இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி 7 வது முறையாக புதிய படமொன்றில் இணைகிறது

இயக்குநர் சுசீந்திரன் இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி 7 வது முறையாக புதிய படமொன்றில் இணைகிறது

சினிமா
இயக்குநர் சுசீந்திரன் இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி 7 வது முறையாக புதிய படமொன்றில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சுசீந்திரன், பிரபல இசையமைப்பாளர் D.இமான் உடன் இணைந்து பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் பணிபுரிந்துள்ளனர். நேற்று, இசையமைப்பாளர் D.இமான் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூறியுள்ள இயக்குநர் சுசீந்திரன், தான் 7 வது முறையாக டி.இமானுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், பாடல் கம்போசிங் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். மிகப் பெரிய பட்ஜட்டில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, மே 1 ஆம் தேதி துவ...
உலகளவில் Prime Video-இல் பிப்ரவரி-10 அன்று மகான் வெளியிடப்படுகிறது

உலகளவில் Prime Video-இல் பிப்ரவரி-10 அன்று மகான் வெளியிடப்படுகிறது

சினிமா
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி-10 முதல் Prime உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம். லலித் குமார் தயாரித்துள்ள இத்திரைப்படம் ஒரு சாதாரண மனிதனின் முழுமையான வாழ்க்கையையும், அவர் தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றியமைக்கும் தொடர் நிகழ்வுகளின் கதைத் தொகுப்பாகும். மகான் படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், நிஜ வாழ்க்கையில் தந்தை-மகனான சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 10 முத...
குடியரசு தினத்தை முன்னிட்டு 12 சுதந்திர போராட்ட வீரர்களாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர்  சேத்தன் சீனுவின்  புதுமையான முயற்சி

குடியரசு தினத்தை முன்னிட்டு 12 சுதந்திர போராட்ட வீரர்களாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் சேத்தன் சீனுவின் புதுமையான முயற்சி

சினிமா
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 'கருங்காலி' மற்றும் 'நான் சிகப்பு மனிதன்' புகழ் நடிகர் சேத்தன் சீனு, 12 விடுதலை வீரர்களின் வேடங்களில் பிரமாண்ட போட்டோஷூட் செய்துள்ளார். சுதந்திரத்திற்காக பாடுபட்ட நாயகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குடியரசு தினமான ஜனவரி 26 அன்று காலை 10.05 மணி முதல் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். ஜனவரி 23 முதல் முன்னோட்டம் வெளியிடப்படும். இந்த முயற்சியைப் பற்றி பேசிய சேத்தன் சீனு, சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரியிடம் இந்த யோசனையை பற்றி கூறியதாக தெரிவித்தார். "இந்த முயற்சி ஒரு திரைப்படத்திற்காக தொடங்கப்பட்டது. சில சுதந்திர போராட்ட வீரர்களை திரையில் பிரதிபலிக்க நான் விரும்பினேன், அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். ஆனால் விவாதத்தின் போது இந்த முயற்சியை திரைப்படமாக மாற்ற பெரும் பொருட்செலவு ஆகும் என்பத...
மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும்  K.T.குஞ்சுமோனின்  #ஜென்டில்மேன்2 படத்திற்கு இசையமைக்கிறார்  MMகீரவாணி

மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் K.T.குஞ்சுமோனின் #ஜென்டில்மேன்2 படத்திற்கு இசையமைக்கிறார் MMகீரவாணி

சினிமா
தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன் ' K.T.குஞ்சுமோன். சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். #ஜென்டில்மேன்2 படத்திற்கு இசை அமைப்பாளர் யார் என்பதை, ரசிகர்களுக்கு ஒரு போட்டியாக நேற்று அறிவித்திருந்தார். இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படும் என்ற செய்தி சோசியல் மீடியா முழுவதும் பரபரப்பானது. இந்நிலையில் படத்தின் முதல் அறிவிப்பாக படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்று அறிவித்துள்ளார்கள். உ...
ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில்  பங்கேற்கும்   ஸ்ருதி ஹாசன்

ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்கும் ஸ்ருதி ஹாசன்

சினிமா
  தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார், இந்த ஆண்டு, ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளில், நமது சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார். இதனையொட்டி மனநலம், திரைப்படம் மற்றும் ஊடகங்களில் பெண்கள், ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில், சமூக வலைதள பக்கத்தில் ஜனவரி 27 முதல் அவர் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்தவுள்ளார். இந்த நேரலை நிகழ்வுகள் மூலம், ஸ்ருதிஹாசன், பொதுவாக சமுகத்தில் விவாதிக்க மறுக்கப்படும், பல தலைப்புகளில் விவாதங்களை, உரையாடலை மேற்கொண்டு, அந்த விசயங்களின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகிறார். இந்த நேரலை அமர்வுகளில் ஸ்ருதிஹாசன் பல்வேறு செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்களுடன் இணைந்து, இந்த...
“ஒன் 2 ஒன்” படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் C

“ஒன் 2 ஒன்” படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் C

சினிமா
  24 HRS புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் படம் "ஒன் 2 ஒன்".இந்த படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கிறார் ,ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.சுந்தர் C பிறந்த நாளை முன்னிட்டு ஒன் 2 ஒன் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சுந்தர் C கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி வாழ்த்து கூறிய அனைருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.   பல ஆண்டுகளுக்கு பிறகு தனது பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் சுந்தர் C கொண்டாடியது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்....
பன்மொழி இந்திய படமான  “மைக்கேல்”  படத்தில் இணைந்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்

பன்மொழி இந்திய படமான “மைக்கேல்” படத்தில் இணைந்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்

சினிமா
  சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவன தயாரிப்பில் உருவாகும், பன்மொழி இந்திய படமான “மைக்கேல்” படத்தில் இணைந்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற தனித்துவமான நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் சந்தீப், அவரது சிறப்புமிக்க திரைக்கதை தேர்வுகள் அவரை சிறந்ததொரு நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது. தற்போது சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய பாத்திரத்தில் நடிக்கும், ஒரு பிரமாண்டமான ஆக்ஷன் எண்டர்டெய்னரான “மைக்கேல்” படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். பன்மொழி இந்திய திரைப்படமாக உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்குகிறார். மி...
தமிழர் திருநாளில் ‘மாயோன்’ படக்குழுவினர் வழங்கும் இசைப் பரிசு

தமிழர் திருநாளில் ‘மாயோன்’ படக்குழுவினர் வழங்கும் இசைப் பரிசு

சினிமா
தமிழ் திரையிசை ரசிகர்களிடையே ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயோனே..’ எனத் தொடங்கும் முதல் பாடலுக்கு பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், இந்த படத்தில் இடம்பெறும் 'சிங்கார மதன மோகனா..' எனத்தொடங்கும் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இதில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜா எழுதி, இசை அமைத்த ...
சூர்யாவின் ‘ஜெய் பீம்’  படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்தது.

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்தது.

சினிமா
சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்', கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது 'ஜெய் பீம்' படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கில், படத்தின் மைய கரு உள்ளிட்ட அனைத்தையும் படத்தினை இயக்கிய இயக்குநர் தா.செ. ஞானவேல் விளக்கியுள்ளார். 'சீன் அட் த அகாடெமி' என்ற பிரிவின் கீழ் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஆஸ்க...
பலரின்  பாராட்டுகளை  பெற்ற  அமேசான் ஒரிஜினல் தொடர் ‘புத்தம் புது காலை விடியாதா..’வின் இயக்குநர்களின் கருத்துக்கள்

பலரின் பாராட்டுகளை பெற்ற அமேசான் ஒரிஜினல் தொடர் ‘புத்தம் புது காலை விடியாதா..’வின் இயக்குநர்களின் கருத்துக்கள்

சினிமா, செய்திகள்
  'புத்தம் புது காலை' என்ற தமிழ் தொடர் வெளியான பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் 2022 ஜனவரி 14ஆம் தேதியன்று 'புத்தம் புது காலை விடியாதா' என்ற அதன் இரண்டாம் பாகம் வெளியானது. இந்தத் தொடரை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்து வெற்றி அடைய செய்திருக்கிறார்கள். லாக்டவுன் சமயத்தில் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட அனுபவத்துடன் மிகவும் தொடர்புபடுத்தக் கூடியதாக படைப்புகள் இருந்ததால் பார்வையாளர்களுக்கு, கதைகளை காட்சிப்படுத்துவதில் இயக்குநர்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. எதிர்மறையான விளைவுகளை மட்டும் சிந்திக்காமல், லாக்டவுனை நேர்மறையான முறையில், அனைத்து கதைகளும் விவரிக்கிறது. சமீபத்தில் வெளியான தொகுப்புகளில் சிறந்ததாக புத்தம் புது காலை விடியாதா குறிப்பிட்டு பாராட்டப்படுவது தொடர்பாகவும், இயக்குநர்கள் கதைகள் மற்றும் அவற்றை படமாக்குவதில் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் பேசுகிறார்கள். தலைசிறந்...