Monday, April 20

Author: admin

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில்  நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும்  “மழை பிடிக்காத மனிதன்” படத்தின் படப்பிடிப்பு டையூ – டாமனில்    நிறைவு பெற்றது!

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “மழை பிடிக்காத மனிதன்” படத்தின் படப்பிடிப்பு டையூ – டாமனில் நிறைவு பெற்றது!

சினிமா
Infiniti Film Ventures வழங்கும்,இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “மழை பிடிக்காத மனிதன்” படத்தின் படப்பிடிப்பு டையூ - டாமனில் முழுமையாக நிறைவு பெற்றது! Infiniti Film Ventures தயாரிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆம், படக்குழுவினர் டையூ-டாமன் படப்பிடிப்பை முடித்துள்ளனர், இது படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், தனஞ்சயா, ப்ருத்வி அம்பர், முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன் உட்பட இன்னும் பல நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த ஷெட்யூலை முடித்த பிறகு, படக்குழுவினர் ஒரு சிறிய பேட்ச்-அப் வேலைகளை மட்டும் விட்டு வைத்துள்ளனர் அதனுடன் முழு படப்பிடிப்பையும் முடித்துவிடுவார்கள். விஜய் மில்டன்...
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ பட முன்னோட்டம் வெளியீடு

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ பட முன்னோட்டம் வெளியீடு

சினிமா
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது.   இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா. சத்யராஜ். வினய். சூரி, நடிகை பிரியங்ககா மோகன், இசையமைப்பாளர் டி இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களும் கலந்து ...
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்திருக்கிற  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசைப்பயணம்

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்திருக்கிற இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசைப்பயணம்

சினிமா
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இன்றைய இளைஞர்களுக்கு தனிமை, வலி, போதை, ஏக்கம், பரவசம், ஆறுதல் என யுவன் தான் அனைத்தும். தமிழ் சினிமாவில் கணக்கிலடங்கா வெற்றிப்பாடல்களை தந்த யுவன் சங்கர் ராஜா 25 ஆண்டுகளை கடந்ததையொட்டி, பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து அவர்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். இந்நிகழ்வில் "25 ஆண்டுகளாய் யுவன்"-நிகழ்ச்சியில் பாடகர்கள்: விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படத்தில் "ஆண்டிப்பட்டி கணவாக் காத்து" பாடலை பாடிய பாடகர் செந்தில்தாஸ் வேலாயுதம், சாம்.பி.கீர்த்தன், வேலு,சுஜாதா வெங்கட்ராமன்,லேகா( Lega sri),பேபி.அதிரா ஆகியோர் இளையராஜா மற்றும் யுவன் சங்கர்ராஜா பாடல்கள் அடங்கிய இசை நிகழ்வை அரங்கேற்றி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது…. இவ்வளவு நாள் என்னோட...
தமிழ்நாடு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு  நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த  டைரக்டர் மாரிசெல்வராஜ் மற்றும்  நடிகர் பஹத் பாசில்

தமிழ்நாடு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த டைரக்டர் மாரிசெல்வராஜ் மற்றும் நடிகர் பஹத் பாசில்

சினிமா, செய்திகள்
இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் பஹத் பாசில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
“தி வாரியர்” திரைப்படத்தில் நடிகர் ஆதியின் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

“தி வாரியர்” திரைப்படத்தில் நடிகர் ஆதியின் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

சினிமா
“தி வாரியர்” திரைப்படத்த்தில் நடிகர் ஆதி, குரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார், பயமுறுத்தும் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! நடிகர் ராம் பொதியேனி நடிக்கு “தி வாரியர்” ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் முதன்முறையாக பிரபல இயக்குனர் N லிங்குசாமியுடன் ஜோடி சேர்ந்துள்ளார், மேலும் இந்த படம், இருமொழிகளில் தயாராவதுடன், கோலிவுட்டில் ராமின் அறிமுக படமாகும். இப்படத்தில் நடிகர் ஆதி பினுஷெட்டி இதுவரை பார்த்திராத வலுவான வில்லன் வேடத்தில் நடிக்கின்றார். இன்று, மகா சிவராத்திரி அன்று, “தி வாரியர்” படத்தின் குழுவினர் ஆதியின் ஃபர்ஸ்ட் லுக் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். நடிகர் ஆதி, குரு என்ற கதாபாத்திரத்தில் தீய செயல்களுக்கே தலைவனாக இருக்கும் ஒரு மிரட்டலான பாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கடுமையான தோற்றம் மற்றும் மிரட்டும் லுக் படத்தின் மீதான எ...
R.கண்ணன் இயக்கும் science -fiction , fantasy, horror comedy திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார்

R.கண்ணன் இயக்கும் science -fiction , fantasy, horror comedy திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார்

சினிமா
Masala Pix நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் ஆர்.கண்ணண் - Focus Films நிறுவனத்துடன் இணைந்து “Production no 7” படத்தை டைரக்ட் செய்து தயாரிக்கிறார். #ஜெயம்கொண்டான், #கண்டேன்காதலை, #சேட்டை, #இவன்தந்திரன், போன்று எல்லா வகை கதைகளையும் டைரக்ட் செய்து அனைவருக்கும் பிடிக்கும் தரமான வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து வருபவர் இயக்குநர் R.கண்ணன். தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான #கிரேட்இந்தியன்கிச்சன் படத்தை தமிழில் டைரக்ட் செய்து ரிலீஸ் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளார். மும்பை தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதை தயாரித்துள்ளார்கள். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார்.இதை அடுத்து, மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் நடிக்கும் #காசேதான்கடவுளடா படத்தை டைரக்ட் செய்துள்ளார். அடுத்ததாக, இன்று குடும்பங்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் சயின்பிக்சன், ஃபேண...
வசந்தபாலன் இயக்கிய மக்களை தேடி மருத்துவம் குறும்படம் ; அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் வெளியிட்டார்

வசந்தபாலன் இயக்கிய மக்களை தேடி மருத்துவம் குறும்படம் ; அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் வெளியிட்டார்

சினிமா, செய்திகள்
திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன் திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடம் எளிதில் சேரும் வகையில் சில குறும்படங்களை அம்மா கிரேஷன்ஸ் சிவா அவர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கிட்டத்தட்ட 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார். அந்த வகையில் மிகவும் முக்கியமான திட்டமான 'மக்களை தேடி மருத்துவம்' என்கிற திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு குறும்படமாக தயாரித்துள்ளனர் தயாரிப்பாளர் டி சிவா மற்றும் சிங்கார வடிவேலன் இருவரும். நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் என்பதால் அதை சிறப்பிக்கும் விதமாக இந்த குறும்படத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி உருவா...
“கடலை போட பொண்ணு வேணும்” திரைப்பட இசை வெளியீட்டு விழா

“கடலை போட பொண்ணு வேணும்” திரைப்பட இசை வெளியீட்டு விழா

சினிமா
தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் “கடலை போட பொண்ணு வேணும்”. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில், காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று 27.02.2022 தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் ராபின் பேசியதாவது… ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டம் என்பதை இந்தப்படத்தில் தான் தெரிந்து கொண்டேன். நிறைய பேர் படமெடுத்து ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். இங்கு மேடையில் இருக்கும் பெரியவர்கள் அந்த கஷ்டங்களை அறிந்தவர்கள், அவர்கள...
 தமிழ் திரையுலகில் முதல் முறையாக, ரசிகர்கள் வெளியிட்ட “மாறன்” பட டிரெய்லர் !

 தமிழ் திரையுலகில் முதல் முறையாக, ரசிகர்கள் வெளியிட்ட “மாறன்” பட டிரெய்லர் !

சினிமா
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தியாவின் பெருமைமிகு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாறன்” படத்தின் டிரெய்லரை, தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடைய ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் போன்றவை பெரும் பிரபலங்களாலும், தயாரிப்பாளர்களாலும் வெளியிடப்படும், ஆனால் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்பட டிரெய்லரை, டிவிட்டர் தளத்தின் புதிய வசதியை பயன் படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். டிவிட்டரின் இந்த புதிய வசதியான Twitter Unlock மூலம், நடிகர் தனுஷ் உடைய தீவிர ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து ஒன்றிணைந்து, இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்திய முதல் படமாக “மாற...
பிரஜன் – அஜீத் நாயக் நடிக்கும் அரசியல் கலந்த் திரில்லர் படம், இன்று பூஜையுடன் துவங்கியது.

பிரஜன் – அஜீத் நாயக் நடிக்கும் அரசியல் கலந்த் திரில்லர் படம், இன்று பூஜையுடன் துவங்கியது.

சினிமா
ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் புரொடக்ஷ்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S.V.சூரியகாந்த் தயாரிப்பில், சித்தார்தா இணை தயாரிப்பில் சங்கர் - கென்னடி இருவரது இயக்கத்தில் பிரஜன் - அஜீத் நாயக் ,பிரகயா நயன், ரஷ்மி நடிக்கும் அரசியல் கலந்த் திரில்லர் படம் இன்று பூஜையுடன் துவங்கியது. ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் புரொடக்ஷ்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S.V.சூரியகாந்த் தயாரிப்பில், சித்தார்தா இணை தயாரிப்பில் சங்கர் - கென்னடி இருவரது இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த படத்தில் பழைய வண்ணாரப்பேட்டை, தீகுளிக்கும் பச்சை மரம், மணல் நகரம், மற்றும் தற்போது D 3, நினைவெல்லாம் நீயடா போன்ற படங்களில் நாயகனாக நடித்ததோடு, சின்னத்தம்பி சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரமாபலான பிரஜன் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஆஜீத் நாயக் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பிரகயா நயன், ரஷ்மி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெயபிரகா...