Tuesday, January 21

கணேஷ் மூர்த்தி சௌந்தர்யா வழங்கும்,அறிமுக இயக்குநர் IP முருகேஷ் இயக்கத்தில், லட்சுமி மேனன் – யோகி பாபு நடிக்கும்,  D இமான் இசையில் உருவாகும் படம் “மலை”

இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் இயக்குனர் சுசீந்திரனின் உதவியாளராக இருந்த IP முருகேஷ் முதன் முறையாக இயக்குநராக  “மலை” என்ற ஒரு படத்தை இயக்கவுள்ளார், இதில் லட்சுமி மேனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இயக்குனர் IP முருகேஷ் கூறியதாவது.. , இந்தப் படம் மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை மையமாக கொண்டு உருவாகவுள்ளது, மலை படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே இருக்கும். இந்தப் படத்தில் நடிகை லட்சுமி மேனன் நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வரும் ஒரு மருத்துவராக நடிக்கிறார், அந்த கிராமத்தில் அவருக்கு நடக்கும் நிகழ்வுகள் அவரது வாழ்க்கையை மாற்றி விடுகிறது , நடிகர் யோகி பாபு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார், லட்சுமி மேனன், யோகிபாபு இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்வு இப்படத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது, மேலும் காளி வெங்கட் கதாபாத்திரம் அனைவராலும் பெரிதும் பேசப்படும்,  சிங்கம்புலி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரிடன் மேலும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

மேலும் இயக்குநர் கூறுகையில்..  இந்தப் படத்தில் நடிகை லட்சுமி மேனன், நடிகர் யோகி பாபு ஜோடியாக நடிக்கவில்லை என்பதை உறுதி படுத்தினார், ஆனால் இருவரின் கதாபாத்திரம் திரையில் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது என்றார்.  

தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், இப்படத்திற்கு D இமான்  இசையமைக்கிறார், யுக பாரதி பாடல் எழுதுகிறார், S ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தை கவனிக்க, ராஜசேகர் ஒலிப்பதிவு செய்கிறார், எடிட்டிங் பணிகளை காசி விஸ்வநாதன் மேற்கொண்டுள்ளார், வசனம் பாஸ்கர் சக்தி எழுதியுள்ளார் , எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக A சுந்தர் பணி புரிகிறார்.

Lemon Leaf Creation P LTD சார்பில் R கணேஷ் மூர்த்தி சௌந்தர்யா மலை படத்தை தயாரிக்கிறார்.

Spread the love