Thursday, April 23

Author: admin

பிரைம் வீடியோ தமிழ் ஒரிஜினல் தொடர், சுழல் – தி வோர்டெக்ஸின் உலகளாவிய பிரீமியரை அபுதாபியில் நடைபெற்று வரும் IIFA வீக் எண்ட் 2022, 22வது பதிப்பில் பிரைம் வீடியோ  அறிவித்தது.

பிரைம் வீடியோ தமிழ் ஒரிஜினல் தொடர், சுழல் – தி வோர்டெக்ஸின் உலகளாவிய பிரீமியரை அபுதாபியில் நடைபெற்று வரும் IIFA வீக் எண்ட் 2022, 22வது பதிப்பில் பிரைம் வீடியோ  அறிவித்தது.

சினிமா
இந்த தொடர் ஜூன் 17 ஆம் தேதி பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் திரையிடப்படும் புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி படைத்துள்ள சுழல் - தி வோர்டெக்ஸ் தொடரில் ராதாகிருஷ்ணன் பார்த்திபனுடன் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இயக்கத்தில் வெளிவரும் சுழல் – தி வோர்டெக்ஸ் தொடர், தமிழ், ஹிந்தி,கன்னடம், மலையாளம் தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளுக்கு மேலாக பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய மொழி, போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கிய மொழி போன்ற கூடுதல் வெளிநாட்டு மொழிகளில் டயலாக் உடன் வெளிவரும் முதல் தொடராகும். ஜூன் 17 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் சுழல் - தி வோர்டெக்ஸ் வெளியிடப்படும் என புஷ்கர் & காயத்ரியுடன் இணைந்து அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியா ...
எஸ்.பி.பி.யின் குரல் எங்கள் வாழ்வின் ஓர் அங்கம்… டாக்டர் ஆர்.பாலாஜி

எஸ்.பி.பி.யின் குரல் எங்கள் வாழ்வின் ஓர் அங்கம்… டாக்டர் ஆர்.பாலாஜி

சினிமா
பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் பல தலைமுறை இசையமைப்பாளரை கடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக்குரலால் ரசிகர்களை வசீகரித்த இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அப்படி எண்ணிலடங்காத ரசிகர்களை தன் வசப்படுத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியம் இப்பொழுது நம்மோடு இல்லை என்றாலும், அவர் பாடிய பாடல் மூலம் நம்முடன் வாழ்ந்து வருகிறார். ஜூன் 4 ஆம் தேதி இவரது பிறந்தநாள். கடந்த ஆண்டு இவரது பிறந்தநாளுக்கு பல பிரபலங்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில், எஸ் பி பி யின் தீவிர ரசிகரும், டாக்டருமான ஆர்.பாலாஜி, சிறப்பு ...
நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள்

நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள்

சினிமா
நடிகை ஸ்ருதிஹாசன், பல்ப் எனும் நிறுவனத்துடன் இணைந்து தோல் பராமரிப்பிற்கான புதிய தயாரிப்புகளை PXS Line எனும் பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பல்ப் எக்ஸ் ஸ்ருதி என்ற பெயரில் தோல் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை தொழிலதிபர்கள் கௌதம் உப்பலூரி மற்றும் தீப்தி அலபதி ஆகியோர் ஏற்படுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக மேலும் அவர்கள் பேசுகையில், '' பல்ப் எக்ஸ் ஸ்ருதி வரிசைக்காக நடிகை ஸ்ருதிஹாசனுடான எங்களுடைய ஒத்துழைப்பு தொடர்ந்து நீடிக்கிறது. இதன் பின்னணியில் எளிய குறிக்கோள் ஒன்று தான் அமைந்திருக்கிறது. அவை தோல் பராமரிப்பு என்றால் என்ன? என்பதையும், அதனை பாரம்பரிய தரநிலைகளுடன் தோல் பராமரிப்பிற்கான தயாரிப்புகளை உருவாக்குவதுதான். எங்களுடைய தயாரிப்புகள்= உங்களுடைய சருமம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்பதை பற்றியதல்ல. ஒரு பிரபலத்தை நீங்கள் எவ்வளவு தூரம் நேசிக்கிறீர்கள் என்பதை பற்றியதும் அல்ல. உங்கள...
’கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு இன்று பிறந்தநாள்

’கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு இன்று பிறந்தநாள்

சினிமா
பிரஷாந்த் நீல். இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவின் டாப் டென் இயக்குநர்களில் தவிர்க்க முடியாத பெயர். இந்த ஒரே காரணத்துக்காக இன்றைய அவரது 41வது பிறந்த நாளை சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்து மழைகளால் பொழிந்துகொண்டிருக்கின்றனர். 1980 ஜூன் 4ம் தேதி பிறந்த பிரஷாந்த் நீல் இன்று எட்டிப்பிடித்திருக்கும் வெறுமனே மூன்றே படங்களில் நிகழ்ந்தது என்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். அவரது முதல் படமான ‘உக்கிரம்’ வெளியான ஆண்டு 2014. அதுவே மாபெரும் ஹிட் அடித்த நிலையில்தான் அவரை இந்தியா முழுக்க பேச வைத்த ‘கேஜிஎஃப்’ படத்தை 2018ல் இயக்கினார். அடுத்து சுமார் 50 தினங்களுக்கு முன்பு வெளியாகி அகில உலகத்தையும் அதிர வைத்த ‘கேஜி எஃப்’ 2’வின் வெற்றியும் அது ஈட்டிய 1200 கோடி தாண்டிய வசூலையும் இன்னும் வியந்துகொண்டே இருக்கிறோம். அடுத்து அவரது இயக்கத்தில் தயாராகும் ‘சலார்’படத்துக்கும் விண்ணைத் தொட...
குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கலப்புத் திருமண கலாட்டா ‘அடடே சுந்தரா’

குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கலப்புத் திருமண கலாட்டா ‘அடடே சுந்தரா’

சினிமா
நானி - நஸ்ரியா இணைந்து கலக்கும் 'அடடே சுந்தரா' முன்னோட்டம் வெளியீடு தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் முனனோட்டம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.‌ இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி நஸ்ரியா, இயக்குநரும், நடிகருமான அழகம்பெருமாள், நடிகை ரோகிணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகர் நானி பேசுகையில், ''அடடே சுந்தரா படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஷ்யாம் சிங்கார ராய் போன்ற ஆக்சன் படங்களில் நடித்துவிட்டு, ‘அடடே சுந்தரா’ போன்ற நகைச்சுவையும், காதலும் கலந்த திரைக்கதையில் நடிப்பது பொருத்தமான தேர்வு என நினைக்கிறேன். ரசிகர்களுக்கும் நிச்சயம் இது பிடிக்கும். படத்தின் கதை, தெலுங்கு, தமிழ்,...
எந்த நிமிடத்திலும் வாழ்க்கை கவிதையாகி விடும் என்பதை இந்த மேடை எனக்கு உணர்த்தியுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் கனிமொழி பேச்சு

எந்த நிமிடத்திலும் வாழ்க்கை கவிதையாகி விடும் என்பதை இந்த மேடை எனக்கு உணர்த்தியுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் கனிமொழி பேச்சு

இலக்கியம், செய்திகள்
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2022   கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நினைவாக ஹைக்கூ கவிதை போட்டி இந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது முதல் பரிசு 25000 இரண்டாவது பரிசு 15,000 மூன்றாவது பரிசு 10,000 மேலும் ஐம்பது கவிதைகளுக்கு தல ஆயிரம் ரூபாய் இந்த ஐம்பத்தி மூன்று கவிதைகளும் தொகுக்கப்பட்டு ஆண்டுதோறும் நூலாக வெளியிடப்படும் இந்த ஆண்டு வாடியது கொக்கு என்ற தலைப்பில் நூல் வெளியாகிறது முதல் பரிசு பெற்ற கவிதைகள் ஒரு வரியில் ஒவ்வொரு ஆண்டும் நூலின் தலைப்பாக வைக்கப்படும். இவ்வாண்டு முதல் பரிசை பெறுபவர் மலேசியாவைச் சேர்ந்த நடா. இரண்டாம் பரிசு ஆரணி இரா. தயாளன். மூன்றாம் பரிசு சென்னையைச் சேர்ந்த ஜி. கஜபதி *நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் பரிசுகள் வழங்கி நூலை வெளியிடுகிறார். எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிற...
அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’ – படத்தின் டீசருடன் ரிலீஸ் தேதி வெளியீடு

அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’ – படத்தின் டீசருடன் ரிலீஸ் தேதி வெளியீடு

சினிமா
அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’ - படத்தின் டீசருடன் ரிலீஸ் தேதி வெளியீடு ரெட்சில்லிஸ்எண்டர்டெயின்மெண்ட், நிறுவனதயாரிப்பில்மெகா ஸ்டார்ஷாருக்கான்நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகும்பிரமாண்டமான ஆக்‌சன்எண்டர்டெயினர் திரைப்படம் “ஜவான்”. திரைத்துறைகண்டிராத வகையில், உயர்தரஆக்சன்காட்சிகளுடன், இந்திய சினிமாவின் பெரும்கலைஞர்கள் இணைந்து பணியாற்ற, பிரமாண்ட பொருட்செலவில் அற்புதமான படைப்பாக இப்படம்உருவாகிறது. ராஜாராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தென்னிந்தியாவில் வெற்றிகரமானபிளாக்பஸ்டர் படங்களை தந்த இயக்குனர் அட்லீ, தற்போது இந்திய அளவில் மிகவும்எதிர்பார்க்கப்படும்‘ஜவான்’ மூலம் மீண்டும் தனது மேஜிக்கை மீண்டும்நிகழ்த்தவுள்ளார். ரசிகர்களின் அனைத்து யூகங்களுக்கும்முற்றுப்புள்ளிவைத்து, ஷாருக்கான் ஒரு முரட்டுத்தனமான பின்னணியில், காயம் மற்றும்கட்டுகளால்மூடப்பட்டிருக்கும...
பிரசன்னா- ரெஜினா கசாண்ட்ரா – அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியுள்ள ஃபிங்கர்டிப் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5-ல் ஒளிபரப்பாகிறது.

பிரசன்னா- ரெஜினா கசாண்ட்ரா – அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியுள்ள ஃபிங்கர்டிப் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5-ல் ஒளிபரப்பாகிறது.

சினிமா
ZEE5 பார்வையாளர்களை மகிழ்விக்க மற்றொரு ஒரிஜினல்களுடன் மீண்டும் வந்துள்ளது. "ஃபிங்கர்டிப்" க்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் தற்போது இரண்டாவது சீசனுடன் மீண்டும் வந்துள்ளனர், இந்த இரண்டாவது சீசன் ஜூன் 17, 2022 முதல் ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன், கண்ணா ரவி மற்றும் ஷரத் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), மாரிமுத்து மற்றும் ஹரிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஃபிங்கர் டிப் இரண்டாவது சீசன் ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர் ஆகும். டிஜிட்டல் தளம் மற்றும் டிஜிட்டல் யுகத்தின் சக்தி, நம் விரல் நுனியில் எப்படி இருக்கிறது என்பதைச் சுற்றி வரும் ஒரிஜினல் சீரிஸ் இது. டிஜிட்டல் உலகில் முக்கியமாக இருக்கும் ஆபத்துகளை இந்தக் கதை ஆராய்கிறது. குறிப்பிடத...
திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த திரு.சி.வி.குமார் தற்போது புதிதாக ’ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக்.

திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த திரு.சி.வி.குமார் தற்போது புதிதாக ’ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக்.

சினிமா
திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த திரு.சி.வி.குமார் தற்போது புதிதாக ’ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக்.இதில் கலையரசன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். இயக்குனர்கள் பாலா, சுதா கொங்காரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய M.ஜானகிராமன் கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி கோயமுத்தூர் கொடைக்கானல் பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் பிற முன்னனி கதாப்பாத்திரங்களில் காளி வெங்கட், ஆஷ்னா ஷவேரி, ‘ஜாங்கிரி’ மதுமிதா, ராகவ் விஜய், சேத்தன், தேவதர்ஷினி, சுதா ஆகியோர் நடித்துள்ளனர். . மேலும் இப்படத்தில் ‘இயக்குனர்’ பாலாஜி மோகனும், நட...
இசைஞானி இளையராஜா அவர்களின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு உலகளவில் வெளியிடப்பட்ட அர்ப்பணிப்பு பாடல்

இசைஞானி இளையராஜா அவர்களின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு உலகளவில் வெளியிடப்பட்ட அர்ப்பணிப்பு பாடல்

சினிமா
இசைஞானி இளையராஜா அவர்களின் 80அது பிறந்த நாளை முன்னிட்டு உலகளவில் முதல் முறையாக அர்ப்பணிப்பு பாடல் ஒன்றை எழுதி இசையமைத்து வெளியிடப்பட்டது பெங்களூரை சேர்ந்த பார்த்திபன் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இசையமைத்துள்ளார் பார்த்திபன் அவர்கள் பாடல் எழுதி தயாரித்து வெளியிட்டுள்ளார். Director திரு பாரதிராஜா அவர்கள் வெளியிட இசையமைப்பாளர்கள் திரு S A Rajkumar மற்றும் திரு தினா இருவரும் பெற்றுக்கொண்டனர். இசைஞானி இளையராாவின் தீவிர பக்தரான பெங்களூரை சார்ந்த பார்த்திபன் Global Institute of Fine Arts எனும் இசைப்பள்ளியை நடத்திவரும் இசையாசிரியர் composer மற்றும் பாடல் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் இசையின் இறைவன் இளையராஜா எனும் தலைப்பிலும் மற்றும் இளையராஜா anthem எனும் தலைப்பிலும் அனைத்து வலைதளங்களிலும் தமிழ் மற்றும் தெலுங்கில் இளையராஜா anthem எனவும் வெளியிடப்பட்டுள்ளது....