Thursday, June 12

 இந்திய திரையுலக பிரம்மாண்டங்களின் பாராட்டைக் குவித்து வரும் அமேசான் பிரைம் வீடியோவின் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

இந்திய திரை உலகத்தில் பிரம்மாண்டமான அடையாளங்களில் முதன்மையானவர்களான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் அசல் தொடரான ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடரை கண்டு ரசித்து ‘நம்ப இயலாத படைப்பு’ என வியந்து போற்றிப் பாராட்டி இருக்கிறார்கள்.

அமேசான் பிரைம் வீடியோவில், அதன் முதல் அசல் தமிழ் தொடரான ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் தொடர் வெளியான சில நிமிடங்களிலேயே பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் இதயங்களை வென்றிருக்கிறது. அத்துடன் திரைப்படத்துறையின் பிரபலங்களின் பாராட்டையும் தொடர்ச்சியாக குவித்து வருகிறது. படைப்பாளிகளான புஷ்கர் & காயத்ரி அவர்கள் உருவாக்கிய அசல் தொடரை இந்திய சினிமாவின் பிரம்மாண்ட அடையாளங்களில் ஒன்றான எஸ். எஸ், ராஜமவுலி, நடிகை பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் பார்வையிட்டு தங்களது சமூக வலைதளப் பக்கத்தில், ‘அவசியம் காண வேண்டியத் தொடர்’ என்ற பாராட்டுகளையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக ‘ஆர். ஆர். ஆர்’ பட புகழ் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி தன்னுடைய ட்விட்டரில், ” புஷ்கர் & காயத்ரி ஆகியோரிடமிருந்து நம்பமுடியாத படைப்பு சிறப்பாக வழங்கியதை கண்டு வியப்படைகிறேன். சுழல் தி வோர்டெக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ குழுவினருக்கு வாழ்த்துக்கள்.” என பதிவிட்டுள்ளார்.

முன்னணி நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ” சுழல் தி வோர்டெக்ஸ் தொடரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறப்பாக இருந்தது. குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.” சுழல் தி வோர்டெக்ஸ் தொடரின் தீம் பாடல் அதிர வைத்தது. இதுதொடர்பான ஒரு காட்சியை நடிகர் விக்கி கௌஷல் பகிர்ந்து கொண்ட பின்னர், ‘தற்போது பார்க்கிறேன்’ என ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டேன்.” என பதிவிட்டிருக்கிறார்.

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளரான விஷால், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ” அமேசான் பிரைம் வீடியோவில் ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடரை பார்த்தேன். தொடரின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். சாம் சி எஸ் அவர்களின் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது. என்னுடைய அன்பு நண்பர்களான புஷ்கர் & காயத்ரி மற்றும் அவரது குழுவினரின் இயக்கம் நேர்த்தியாக இருந்தது அவசியம் காணவேண்டிய தொடர்” என பதிவிட்டிருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ” அற்புதமான கிரைம் திரில்லர். ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடரை உருவாக்கிய புஷ்கர் & காயத்ரி மற்றும் அமேசான் பிரைம் வீடியோவிற்கு பாராட்டுகள். கதிர் தன்னுடைய சிறந்த நடிப்பால் கலக்கி இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஸ்ரேயா ரெட்டி தங்களின் வழக்கமான சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறீர்கள். ராதாகிருஷ்ணன் பார்த்திபன் சார் நீங்கள் எப்போதும் போல் அற்புதம். சாம் சி எஸ் அவர்களின் இசை, ஒவ்வொரு காட்சியையும் உயர்த்திப் பிடித்தது. சுழல் தொடர், உண்மையிலேயே ஆரம்பம் முதல் இறுதிவரை பார்க்கவேண்டிய கவர்ச்சியான நிகழ்ச்சி. இதில் நடித்த நடிகர் நடிகர்கள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவினருக்கு வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

நடிகை தமன்னா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ” நேற்றிரவு அமேசான் பிரைம் வீடியோவின் க்ரைம் த்ரில்லரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரைப் பார்த்தேன். முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் அற்புதமான நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தொடர். நான் சக்கரையாக நடித்திருக்கும் நடிகர் கதிரின் ரசிகை. இந்தப் தொடரிலும் அவர் தன்னுடைய அற்புதமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ” சுழல் தி வோர்டெக்ஸ் தொடர் அற்புதமான படைப்பு. தொடரின் டைட்டில் பாடலை இசையமைப்பாளர் சாம் சி எஸ் அற்புதமாக உருவாக்கியிருந்தார். அவரின் பின்னணி இசை கிரைம் திரில்லர் தொடர் முழுவதையும் காணவேண்டும் என்ற ஆவலையும், சிறப்பான அனுபவத்தையும் அளித்தது. அனைவரும் தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய தொடர் சுழல் தி வோர்டெக்ஸ். அமேசான் பிரைம் வீடியோவிற்கும், புஷ்கர் &காயத்ரி குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

பாலிவுட் நடிகை சானியா மல்ஹோத்ரா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ” தற்போது நான் அமேசான் பிரைம் வீடியோவில் புஷ்கர் & காயத்ரி உருவாக்கிய ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உண்மையில் அற்புதமான சுழல். என்னை முழுவதுமாக இருக்கையின் விளிம்பில் வைத்திருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் உள்ள திருப்புமுனை ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. கே. எல். ராகுல் வார இறுதியில் இந்த தொடரை விருப்பத்துடன் கண்டு ரசித்து வருகிறார். இதனை நாங்கள் முழுமையாக விரும்புகிறோம்.” என பதிவிட்டிருக்கிறார்.

அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் அசல் தொடரான ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடர், திரையுலகில் உள்ள நட்சத்திரங்களிடையேயும், திரையுலக பிரபலங்களிடையேயும் இருந்து தொடர்ந்து அலைஅலையாய் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதற்கு முன் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான ஹிருத்திக் ரோஷன், தனுஷ், வித்யா பாலன், சமந்தா, விக்ரந்த் மாஸே, பூமி பட்நாகர், இயக்குநர்கள் ஹன்சல் மேத்தா, அனுராக் காஷ்யப், எழுத்தாளர் சேத்தன் பகத், தயாரிப்பாளர் குனீத் மோங்கா, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த தொடர் குறித்த தங்களது விமர்சனங்களை பதிவு செய்து குழுவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.

புலனாய்வு பாணியிலான ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடர், அமேசான் பிரைம் வீடியோ வின் முதன் முதலான தமிழின் நீண்ட வடிவிலான வலைதள தொடர். இந்த தொடர் வெளியான பிறகு, உலகளவில் பார்வையாளர்களிடையே புயல் போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடர் மிகப்பெரிய வெற்றி என கூறுவது பொருத்தமானது. இந்த தொடர் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 30க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Spread the love