Friday, April 24

Author: admin

“பேய காணோம்” டிரெய்லர் வெளியீட்டு விழா

“பேய காணோம்” டிரெய்லர் வெளியீட்டு விழா

சினிமா
ரிலீஸுக்கு முன்பாக வெற்றி விழா கொண்டாடிய " பேய காணோம்" படக்குழு ! குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் R. சுருளிவேல் தயாரிப்பில் இயக்குநர் செல்வ அன்பரசன் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் " பேய காணோம் ". தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே படத்திற்கு வெற்றிவிழாவினை படக்குழு கொண்டாடியுள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. கோரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இப்படம், பல இன்னல்கள் தடைகளை கடந்த நிலையில் தற்போது படப்பிடிப் முடித்துள்ளது. பல சிக்கல்களை கடந்து படப்பணிகள் முடிக்கப்பட்டதை படக்குழு வெற்றி விழாவாக கொண்டாடியது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் R. சுருளிவேல் கூறியதாவது… இயக்குநரை பல காலமாக ...
IMDB கொடுத்த ரேட்டிங்…. “மாமனிதன்” படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.!

IMDB கொடுத்த ரேட்டிங்…. “மாமனிதன்” படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.!

சினிமா
தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாமனிதன்”. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது YSR நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். தமிழகம் மற்றும் கேரளாவில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட்டிருக்கிறார். படத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பை கொடுத்தனர். குடும்பம் சகிதமாக முக்கியமாக பெண்கள் இப்படத்தை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தை வாழ்த்தி இயக்குனருக்கு பாராட்டுகள் தெரிவித்தனர். சிறந்த படங்களுக்கு மதிப்பீடு கொடுக்கும் IMDB நிறுவனம் மாமனிதன் படத்திற்கு 8.1 /10 கொடுத்துள்ளது. கடந்...
ரசிகர்களின் கைதட்டல்களே மாயோன் படத்திற்கான பாராட்டு – சத்யராஜ் பெருமிதம்

ரசிகர்களின் கைதட்டல்களே மாயோன் படத்திற்கான பாராட்டு – சத்யராஜ் பெருமிதம்

சினிமா
தமிழக திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சிபி சத்யராஜ் நடித்த 'மாயோன்' தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது. 'மாயோன்' திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டுகளித்த சத்யராஜ், படத்தின் இறுதியில் ரசிகர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, அரங்கம் அதிர கரவொலி எழுப்பி, 'மாயோன்' படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதனை நேரில்பார்த்து வியந்த சத்யராஜ், 'ரசிகர்களின் கைத்தட்டல்கள் தான் மாயோன் படத்திற்கு கிடைத்த பாராட்டு' என்றார். டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, தயாரித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'மாயோன்'. யாரும் எளிதில் யூகிக்க இயலாத காட்சிகளை அமைத்து படத்தை நேர்த்தியாக அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கி இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி, படத்தை வெற்றி பெறச் செய்தி...
போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் ( War On Drugs) ‘போதைக்கு எதிரான போர்’ என்ற தலைப்பில், * வேலூர் காவல்துறை டிஐஜி டாக்டர் Z ஆனி விஜயா. ஐபிஎஸ் & டாக்டர் K.S. பாலகிருஷ்ணன், BVSc ஆகியோர் வெளியிட்டனர்

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் ( War On Drugs) ‘போதைக்கு எதிரான போர்’ என்ற தலைப்பில், * வேலூர் காவல்துறை டிஐஜி டாக்டர் Z ஆனி விஜயா. ஐபிஎஸ் & டாக்டர் K.S. பாலகிருஷ்ணன், BVSc ஆகியோர் வெளியிட்டனர்

சினிமா, செய்திகள்
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட குறும்படங்கள் சமூகத்தில் மக்களிடமும் பார்வையாளர்களிடமும் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, பல்துறைகளில் சிறந்து விளங்கும் முன்னணி நட்சத்திரங்கள், நம்பிக்கைக்குரிய திறமையாளர்கள் கொண்ட குழுவிலிருந்து அப்படிப்பட்ட படைப்பு வரும்போது, அது கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது உறுதி. ‘போதைக்கு எதிரான போர்’ என்ற குறும்படமும் அப்படித்தான். போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்த இந்த குறும்படத்தை வேலூர் இன்று காலை தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை டிஐஜி டாக்டர் Z ஆனி விஜயா ஐபிஎஸ் & டாக்டர் கே.எஸ். பாலகிருஷ்ணன் BVSc ஆகியோர் அறிமுகப்படுத்தினர். போதைப்பொருள் பழக்கம் நம் இளைய சமுதாயத்தை முற்றிலுமாக அழித்து கொண்டிருக்கிறது. சிறிதாக ஆரம்பமாகும் இப்பழக்கம் ந...
ரசிகர்களை வியக்கவைத்த ‘ரோஹிணி’யின் ‘மாயோன்’ பட கட்அவுட்

ரசிகர்களை வியக்கவைத்த ‘ரோஹிணி’யின் ‘மாயோன்’ பட கட்அவுட்

சினிமா
'மாயோனைக் காணச் சென்ற ரசிகர்களுக்கு கிடைத்த கிருஷ்ணர் வேட வரவேற்பு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'மாயோன்' திரைப்படத்தைப் பற்றி திரையுலக ஆர்வலர்கள், ரசிகர்கள் என பலரும் நேர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்ததால், பொது விடுமுறை தினமான ஞாயிறன்று சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கத்திற்கு இப்படத்தைக் காண அதிகளவிலான ரசிகர்கள் சென்றனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ண பகவானின் பிரம்மாண்டமான கட்அவுட்டிற்கு அருகே சில குழந்தைகள் கிருஷ்ணனின் வேடத்தை அணிந்து, வருகைத்தந்த ரசிகர்களை உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பாக இப்படத்தைக் காண வந்த ரசிகர்கள் சிலர் பேசுகையில்,“இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கத்தில் திரையிடப்பட்டிருக்கும் ‘மாயோன்’ படத்தைக் கண்டு ரசிக்க எங்கள் குடும்பத்துடன் வருகைத்தந்தோம். இங்கு வந்தபிறகு இந்த வளாகத்தில் அமைக்கப்...
பிரபுதேவா, ரம்யா நம்பீசன் நடித்துள்ள குழந்தைகளுக்கான ஃபேண்டசி திரைப்படமான ‘மை டியர் பூதம்’ பார்த்து இயக்குநர் N ராகவனை வெகுவாக புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

பிரபுதேவா, ரம்யா நம்பீசன் நடித்துள்ள குழந்தைகளுக்கான ஃபேண்டசி திரைப்படமான ‘மை டியர் பூதம்’ பார்த்து இயக்குநர் N ராகவனை வெகுவாக புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

சினிமா
அபிஷேக் பிலிம்ஸ் பேனரில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்து மஞ்சப்பை மற்றும் கடம்பன் புகழ் N ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் குழந்தைகளுக்கான முழுநீள ஃபேண்டசி திரைப்படமான 'மை டியர் பூதம்' திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஜூலை மாதம் ‘மை டியர் பூதம்’ வெளியாகவுள்ள நிலையில், வெளியீட்டு தேதி ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது. சமீபத்தில் திரைப்படத்தை சிறப்பு காட்சி ஒன்றில் பார்த்த முன்னணி நடிகர்-தயாரிப்பாளரும், திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குநர் ராகவனை தொலைபேசியில் அழைத்து வெகுவாக பாராட்டினார். ‘மை டியர் பூதம்’ படத்தை தான் வெகுவாக ரசித்து மகிழ்ந்ததாகவும், திரைப்படத்தோடு உணர்வுப்பூர்வமாக ஒன்ற முடிகிறது என்றும், அனைத்து தரப்பு ரசிகர்களி...
மாயோன்- விமர்சனம்

மாயோன்- விமர்சனம்

சினிமா
தொல்லியல் துறையை அடிப்படையாக கொண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள அரிதான திரைப்படம் மாயோன் , நம் பண்பாடு, கலாச்சாரம், அரிய கலைசார்ந்த பொருட்கள் இவற்றின் அருமையினை அழகுற எடுத்துச்சொல்லுகிறது மாயோனின் கதை . தொல்லியல் துறை சார்பாக ஒரு கோயிலை ஆய்வு செய்ய செல்லும் குழு ஒன்றுக்கு அதே கோவிலுக்குள் உள்ள ஒரு அறையில் புதையல் இருப்பதாக தெரிய வருகிறது. மேலும் இரவு நேரங்களில் அந்த கோவிலுக்குள் அபூர்வமான சக்தி இருப்பதாகவும், இரவில் கோவிலில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுபவதாகவும் மக்களிடையே ஒரு பேச்சும் இருக்கிறது. விசித்திரமான இந்த சூழ்நிலையில் தொல்லியல் குழு அந்த புதையலை எப்படி மீட்டு கொண்டு வந்தது போன்ற வினாக்களுக்கு விடையினை தருகிறது படத்தின் இந்த படத்தின் கதைக்களம். தொல்லியல் துறை ஆராய்ச்சியாளராக சிபிராஜ் கதையின் நாயகனாய் புதிய கதைகளத்தில் பயணித்துள்ளார் ,அவரது கேரக்டர் மீதுள்ள ட்வி...
தமிழ்க்காரியின் கவிதைகள் இலையுதிர்காலத்திலும் நறுமணம் வீசும் – தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்

தமிழ்க்காரியின் கவிதைகள் இலையுதிர்காலத்திலும் நறுமணம் வீசும் – தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்

இலக்கியம், செய்திகள்
அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளரான தமிழ்க்காரி என்கிற சித்ரா மகேஷ் அவர்களின் 2 நூல்கள் வெளியீட்டு விழா 23.06.2022 அன்று லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை பறை சாற்றும் வகையில் ஓவியர் மருதுவின் தூரிகையில் தமிழ்க்காரியின் எழுத்தில் உருவான காதல் கதை சொல்லட்டுமா? மற்றும் பூக்கள் பூக்கும் தருணம் ஆகிய 2 நூல்களும் அந்தரி பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டன. இவ்விழாவில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்புரை வழங்க, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மதுரை நகைச்சுவை மன்ற தலைவரும் பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தமிழ் வளர் மைய இயக்குனர் முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினர். விழாவில் கலந்து கொண்ட...
தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்களின் நலனுக்காக நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்களின் நலனுக்காக நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

சினிமா, செய்திகள்
அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் கலைஞர்கள் தங்களது உடல் நலன் குறித்து அவ்வளவாக கவலைப்படுவதில்லை. இதை கருத்தில் கொண்டு, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மூத்த நடிகரும் டப்பிங் சங்கத் தலைவருமான ராதாரவி சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றுக்கு இன்று ஏற்பாடு செய்தார். இன்று காலை 10 மணிக்கு சங்க வளாகத்தில் தொடங்கிய இந்த சிறப்பு மருத்துவ முகாம் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். பிரபல உடல்நல நிபுணரும் பேராசிரியருமான டாக்டர் ஆதிஜோதிபாபு மூலமாக பஞ்சபூத மருத்துவமுறையினால் மருந்தில்லா மருத்துவமுறையை அறிமுகப்படுத்தி இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவமுகாம் காலை முதல் மாலை ...
தமிழகத்தில் மாயோன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு.. தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு.!!

தமிழகத்தில் மாயோன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு.. தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு.!!

சினிமா
தமிழகத்தில் மாயோன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் மாயோன். அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பதை மையக் கருவாகக் கொண்டு உருவாக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இடம் பிடித்துள்ளது. மேலும் பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படம் வெளியாகியதும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. தமிழகத்தில் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த படத்தை வரும் ஜூலை 7ஆம் தேதி தெலுங்குவில் மிக பிரம்மாண்டமா...