Monday, January 20

மாயோன்- விமர்சனம்

தொல்லியல் துறையை அடிப்படையாக கொண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள அரிதான திரைப்படம் மாயோன் , நம் பண்பாடு, கலாச்சாரம், அரிய கலைசார்ந்த பொருட்கள் இவற்றின் அருமையினை அழகுற எடுத்துச்சொல்லுகிறது மாயோனின் கதை .

தொல்லியல் துறை சார்பாக ஒரு கோயிலை ஆய்வு செய்ய செல்லும் குழு ஒன்றுக்கு அதே கோவிலுக்குள் உள்ள ஒரு அறையில் புதையல் இருப்பதாக தெரிய வருகிறது. மேலும் இரவு நேரங்களில் அந்த கோவிலுக்குள் அபூர்வமான சக்தி இருப்பதாகவும், இரவில் கோவிலில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுபவதாகவும் மக்களிடையே ஒரு பேச்சும் இருக்கிறது. விசித்திரமான இந்த சூழ்நிலையில் தொல்லியல் குழு அந்த புதையலை எப்படி மீட்டு கொண்டு வந்தது போன்ற வினாக்களுக்கு விடையினை தருகிறது படத்தின் இந்த படத்தின் கதைக்களம்.

தொல்லியல் துறை ஆராய்ச்சியாளராக சிபிராஜ் கதையின் நாயகனாய் புதிய கதைகளத்தில் பயணித்துள்ளார் ,அவரது கேரக்டர் மீதுள்ள ட்விஸ்ட் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது தொல்லியல் துறை அதிகாரியாய் கே எஸ் ரவிக்குமார், ஊர் பெரியமனிதராக ராதாரவி வழக்கம்போல் தங்களது பங்களிப்பை நிறைவாய் செய்துள்ளார்கள்

படத்தின் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன்கிடைத்த காட்சிகளில் நிறைவாய் நடித்திருந்தாலும் அவருக்கும் சிபிக்குமான தனிப்பட்ட காட்சிகள் இன்னுமும் அமைக்கப்பட்டு இருக்கலாம் மற்றும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் வில்லன் ஹரிஷ் பெராடி அசத்தலான நடிப்பில் மிரட்டி இருக்கிறார். சக ஆராய்ச்சியாளராக வரும் பகவதி பெருமாளும் தன பங்குக்கு திறம்பட நடித்துள்ளார்

படத்திற்க்கு கூடுதல் பலம் கொடுத்திருப்பது இளையராஜாவின் பின்னணி இசையும் , குறிப்பாக மாயோனோ என்ற பாடலும் மனதில் நீங்கா இடம் பெருகிறது.

அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தை என் கிஷோர் இயக்கியுள்ளார். விறுவிறுப்பான திரைக்கதையோடு படம் நகருவதால் எப்பொழுது இன்டெர்வல் வருகிறது எப்பொழுது படம் கிளைமாக்ஸை நெருங்குகிறது என அறியாவண்ணம் speed ஆக உள்ளது . மாயோனின் ஒளிப்பதிவை ராம் பிரசாத் சிறப்பாக படமாக்கியுள்ளார் இப் படத்தை ராம் பாண்டியன் மற்றும் கொண்டலராவ் எடிட் செய்துள்ளனர். இப்படத்திற்கு திரைக்கதை அமைத்த அருண்மொழி மாணிக்கம் தனது டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் மூலம் மாயோனை தயாரித்துள்ளார்

அபூர்வங்கள் , அமானுஷய்ங்கள் அறிவியல்,ஆன்மீகம் என அத்தனையும் கலந்த இந்த மாயோன் அனைத்து தரப்பு மக்களையும் வசிகரிப்பான் என்று சொல்லலாம் நல்ல விஷயத்தை புதுமையான கதைக்களத்தோடு சிறப்பான முறையில் படமாக வெளிப்படுத்தியுள்ளமைக்கு பாராட்டுக்கள்

Spread the love