Thursday, April 23

Author: admin

“ரங்கோலி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

“ரங்கோலி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

சினிமா
வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள ரங்கோலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”. இயக்குனர் வஸந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருகின்றனர். இதில் ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்க்கு கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைப்பாளராகவும், மருதநாயகம் ஒளிப்பதிவாளராகவும், ரா.சத்திய நாராயணன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர்....
உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்துள்ள லெஜண்ட் சரவணன்

உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்துள்ள லெஜண்ட் சரவணன்

சினிமா
லெஜண்ட் சரவணன் நடிக்கும் தி லெஜண்ட்'  உலகெங்கும் ஜூலை 28 அன்று வெளியாகிறது' தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்துள்ளனர். 'தி லெஜண்ட்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார். 'தி லெஜண்ட்’ படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கி உள்ளார்கள் ஜேடி-ஜெர்ரி. இளமை ததும்பும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளார். உலகெங்கும் ஜூலை 28 அன்று வெளியாகும் 'தி லெஜண்ட்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் பெற்றுள்ளார். தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தை அவர் வெளியிடுகிறார். எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அள...
லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட் திரைப்படம் உலகெங்கும் 28 ஜூலை அன்று ஐந்து மொழிகளில் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட் திரைப்படம் உலகெங்கும் 28 ஜூலை அன்று ஐந்து மொழிகளில் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது

சினிமா
லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர், 'மொசலோ மொசலு' பாடல், 'வாடிவாசல்' பாடல் ஆகியவை பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான 'பொ பொ பொ' பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என அழுத்தமாக தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன். எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சினிமா பாணியில் சொல்வதென்றால் ரிபீட் ஆடியன்ஸை வரவழைக்கும் ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட...
பூரண குணமடைந்து தாய் மண்ணிற்கு திரும்பும் டி ராஜேந்தர்

பூரண குணமடைந்து தாய் மண்ணிற்கு திரும்பும் டி ராஜேந்தர்

சினிமா
இலட்சிய திமுக தலைவரும் பன்முக கலைஞருமான டி ராஜேந்தர் உடல்நல மேல் சிகிச்சைக்காக ஜூன் 14 அன்று அமெரிக்கா சென்றார். அங்கு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து, குடும்பத்தினருடன் ஜூலை 22 அன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார். டி ஆர் தாயகம் திரும்பும் அதே நாளில் தான் அவரது மகன் சிலம்பரசன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள 'மஹா' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. பூரண நலம் பெற்றதை தொடர்ந்து வட அமெரிக்கா தமிழ் சங்கத்தை சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும், கால்டுவெல் ஆகியோர் டி ஆரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.   டி ஆரின் இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ், பேரன் ஜேசன் ஆகியோர் அவருடன் நாடு திரும்புகின்றனர். சென்னை வந்த பின் முதலில் தனது சிகிச்சைக்காக உதவி செய்த மாண்புமிகு தமிழ...
* பாட்ஷா கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’  படத்தின் 7 நிமிட சிங்கிள் ஷாட் க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தும்*

* பாட்ஷா கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’  படத்தின் 7 நிமிட சிங்கிள் ஷாட் க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தும்*

சினிமா
 பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியிருக்கும் “விக்ராந்த் ரோணா”   திரைப்படத்தினை  தயாரிப்பாளர்கள் பிரமாண்டமாக விளம்பரப்படுத்தி வருகின்றனர். இப்படம் ஜூலை 28, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் புரமோக்கள், விளம்பரங்கள் ஏற்கனவே ரசிகர்களிடம்  பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தியப் பார்வையாளர்களின் விருப்பப் பட்டியலில்  இப்படம் முதலிடம் பிடித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ள நிலையில், பார்வையாளர்கள் படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். குறிப்பாக, அபாரமான அட்வென்சர், அதிரடி சண்டை காட்சிகள் என இப்படம் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்குத் தள்ளியுள்ளது. இந்த நேரத்தில், க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் எபிசோட் 7 நிமிட சிங்கிள்-ஷாட் காட்சியாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் ஒரு அற்புதமான தகவலை வெளி...
மாய சாகச உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ‘கார்த்திகேயா 2’

மாய சாகச உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ‘கார்த்திகேயா 2’

சினிமா
People Media Factory மற்றும் Abhishek Agarwal Arts வழங்கும் ‘கார்த்திகேயா 2’ திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியான கார்த்திகேயா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இது தெலுங்கு மொழியில் வரவிருக்கும் (5 மொழிகளில் டப் செய்யப்படுகிறது) ஒரு சூப்பர்நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தினை இயக்குநர் சண்டூ மொண்டேட்டி எழுதி இயக்கியுள்ளார். TG விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் இணைந்து தயாரிக்கின்றனர். நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, விவா ஹர்ஷா, ஆதித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர், கார்த்திக் கட்டமனேனியின் ஒளிப்பதிவில், கால பைரவா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திகேயா மீண்டும் வந்துவிட்டார்; முன்னிருந்ததை விட சிறப்பான முறையில் திரும்பியுள்ளார். இந்த முறை எல்லாம் மனுஸ்மிருதியின் படி நடக்கும். தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதிரக்ஷிதஹ் தஸ்மாத் தர்மோ ...
துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

சினிமா
'சீதா ராமம்' படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சீதா ராமம்: எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார். மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந...
மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி இணைந்து நடிக்கும் ” பகாசூரன் ” படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது.

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி இணைந்து நடிக்கும் ” பகாசூரன் ” படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது.

சினிமா
மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி இணைந்து நடிக்கும் " பகாசூரன் " படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது. பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்திற்கு " பகாசூரன்" என்று பெயரிட்டுளார்.இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா ஆகியோர் நடித்துள்ளனர்.கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தமக்கென தனியிடத்தை தக்கவைத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துவரும் சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரா தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு...
* தி கிரே மேன் –  பார்வையாளர்களை மயக்கத்தில்  மூழ்கடிக்கும்  ஒரு  அதிசய உலகம் – ரூஷோ பிரதர்ஸ்*

* தி கிரே மேன் –  பார்வையாளர்களை மயக்கத்தில்  மூழ்கடிக்கும்  ஒரு  அதிசய உலகம் – ரூஷோ பிரதர்ஸ்*

சினிமா
* தி கிரே மேன் -  பார்வையாளர்களை மயக்கத்தில்  மூழ்கடிக்கும்  ஒரு  அதிசய உலகம் - ரூஷோ பிரதர்ஸ்* Netflix தயாரிப்பில் ரூஷோ சகோதரர்களின் அடுத்த அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படம் ‘தி கிரே மேன்’, உலகத்தின் மிகப்பெரும் நட்சத்திரங்களின் பங்களிப்பில், விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. ஒரு புத்தகத்திலிருந்து திரைப்படமாக,  தி கிரே மேன் படத்தை உருவாக்க, இந்தக்கதை அந்தளவு ஏன் ரூஷோ சகோதரர்களை  கவர்ந்தது என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பொதுவாக ஆக்‌ஷன் படங்களுக்கு பெயர் பெற்ற ரூஷோ சகோதரர்கள் இது குறித்து கூறுகையில்.., “எங்கள் பிஸியான ஷெட்யூலால்  இந்தப் படத்தைத் தயாரிக்க எங்களுக்கு ஒன்பது வருடங்கள் ஆனது. மார்க் க்ரேனியின் எழுத்து மற்றும் அவர் ஒவ்வொரு விசயம் குறித்து செய்யும் ஆராய்ச்சிகள் கண்டு நாங்கள் வியந்தோம். ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் சுவாரசியமான கதைகளை உருவாக்குவதற்கான தேடலில் தான்  ...
விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பலத்த பாராட்டு

விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பலத்த பாராட்டு

சினிமா
சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘ரெய்டு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. நடிகர் விக்ரம் பிரபு தேர்ந்தெடுக்கும் தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்கள்,  திரைப்பயணத்தில் அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கின்றன. அவரது முந்தைய படமான டாணாகாரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது அடுத்ததாக வரவிருக்கும் ‘ரெய்டு’ திரைப்படத்தின் முதல் பார்வை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பர்ஸ்ட் லுக்கில் விக்ரம் பிரபுவின் அட்டகாசமான தோற்றம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும் அசத்தலான தலைப்பு,  படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. ரெய்டு திரைப்படத்தை கார்த்திக் இயக்குகிறார்.  S.K.  கனிஷ்க், GK (எ) G.மணிகண்டன் தயாரிக்கிறார்கள். முதன்மை  கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார். ஸ்ரீ திவ்யா மற்றும...