Wednesday, October 9

பூரண குணமடைந்து தாய் மண்ணிற்கு திரும்பும் டி ராஜேந்தர்

இலட்சிய திமுக தலைவரும் பன்முக கலைஞருமான டி ராஜேந்தர் உடல்நல மேல் சிகிச்சைக்காக ஜூன் 14 அன்று அமெரிக்கா சென்றார்.

அங்கு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து, குடும்பத்தினருடன் ஜூலை 22 அன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார்.

டி ஆர் தாயகம் திரும்பும் அதே நாளில் தான் அவரது மகன் சிலம்பரசன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பூரண நலம் பெற்றதை தொடர்ந்து வட அமெரிக்கா தமிழ் சங்கத்தை சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும், கால்டுவெல் ஆகியோர் டி ஆரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

டி ஆரின் இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ், பேரன் ஜேசன் ஆகியோர் அவருடன் நாடு திரும்புகின்றனர்.

சென்னை வந்த பின் முதலில் தனது சிகிச்சைக்காக உதவி செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து டி ஆர் நன்றி கூறுகிறார்.

தான் முழு உடல் நலம் பெற்று மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் துடிப்புடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள், குடும்ப நண்பர்கள், கலையுலக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் டி ஆர் நன்றியை தெரிவித்தார்.

இலட்சிய திமுக தொண்டர்கள் டி ஆருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளார்கள்.

*

 

Spread the love