Sunday, April 26

Author: admin

நடிகர் பிரபாசுக்கு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘ புராஜெக்ட் கே’ படக்குழு

நடிகர் பிரபாசுக்கு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘ புராஜெக்ட் கே’ படக்குழு

சினிமா
நடிகர் பிரபாஸின் 'புராஜெக்ட் கே' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. ரெபெல் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று, முன்னணி இயக்குநர் நாக் அஸ்வின் தலைமையிலான படக்குழு, பிரத்யேக போஸ்டரை கவனமீர்க்கும் வாசகங்களுடன் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது. திரைப்பட தயாரிப்புகளில் ஈடுபட்டு ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா படைப்பாக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கும் திரைப்படம் ' புரொஜெக்ட் கே'. இதில் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் அமிதாபச்சன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ...
பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தீபாவளி மலர் – 2022 வெளியிட்ட திரையுலக பிரபலங்கள் !!

பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தீபாவளி மலர் – 2022 வெளியிட்ட திரையுலக பிரபலங்கள் !!

சினிமா
68 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்' கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மலர் வெளியிடுவது வழக்கம்.அம்மலர் தமிழ் திரையுலகில் வெகு பிரசித்தமும் கூட ! அந்த வகையில் இந்த 2022ம் ஆண்டின் தீபாவளி பண்டிகையை ஓட்டி வெகு சிறப்பாக தயாராகி வந்த 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்' தீபாவாளி மலர் - 2022 புத்தகத்தை , பொக்கிஷத்தை ., ஒரு பக்கம் பிரமாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட அவரது மகன் இயக்குனர் கலா பிரபு பெற்றுக்கொள்ள., மற்றொரு பக்கம், திரைக்கதை மன்னன் எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் வெளியிட சினிமா பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள ., இன்னுமொரு பக்கம் மனதை வருடம் பாடல்களைத் தொடர்ந்து தந்து வரும் 'மெலோடி கிங்' இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட ஒட்டுமொத்த சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் சினிமா பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் D.R.பாலேஷ்வ...
நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ அப்டேட்

நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ அப்டேட்

சினிமா
கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட போஸ்டர் ‘பாகுபலி’ படப்புகழ் வசூல் சக்கரவர்த்தி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, 'ஆதி புருஷ்' பட குழுவினர் தெய்வீகம் ததும்பும் ராமரை போல் தோற்றமளிக்கும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். முன்னணி தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரிப்பில், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. கடின உழைப்பாளியும், விடா முயற்சியும் உள்ள நடிகரான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க படக்குழுவினர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர். ராமாயண காவியத்தில் நாயகனான ராமபிரானின் அனைத்து குணங்களின் குறைபாடற்ற கலவையாக இருக்கும் பிரபாஸை போற்றும் வகையில், அவர் ராமராக தோன்றும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு பிறந்த நாள் வ...
‘நித்தம் ஒரு வானம்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது.

‘நித்தம் ஒரு வானம்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது.

சினிமா
ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து Ra. கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன்- ரித்துவர்மா- அபர்ணா பாலமுரளி- ஷிவாத்மிகா நடிக்கும் 'நித்தம் ஒரு வானம்' நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது நல்ல கதையம்சம் கொண்ட ஃபீல் குட் படங்கள் எப்போதும் சினிமா பார்வையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முக்கியமான கதையாக 'நித்தம் ஒரு வானம்' உலகம் முழுவதும் திரையரங்குகளில் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தினை Ra. கார்த்திக் இயக்க, ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து தயாரித்து இருக்கிறது. படத்தில் அசோக்செல்வன், ரித்துவர்மா மற்றும் அபர்ணா பாலமுரளி & ஷிவாத்மிகா ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாழ்க்கையின் பயணத்தை மிகவும் பாசிட்டிவான முறையில் கையாண்டுள்ள இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் நேர்மறையான த...
 நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘வீர சிம்ஹா ரெட்டி’

 நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘வீர சிம்ஹா ரெட்டி’

சினிமா
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'வீர சிம்ஹா ரெட்டி' என பெயரிடப்பட்டு, பிரத்யேகமான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. நடசிம்ஹா நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்திற்கு 'NBK 107' என பெயரிடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது 'வீர சிம்ஹா ரெட்டி' என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக தொன்மை வாய்ந்த கர்னூல் கோட்டையின் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தலைப்பிற்கான போஸ்டரை தயாரிப்பாளர்கள் மற்றும் பட குழுவினர் வெளியிட்டனர். 'வீர சிம்ஹா ரெட்டி' எனும...
ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் படம் ‘தி ஐ’

ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் படம் ‘தி ஐ’

சினிமா
'தி ஐ' எனும் சர்வதேச திரைப்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன் உலக நாயகன் கமலஹாசனின் மகள், பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியை, நடிகை என பன்முக ஆளுமையுடன் உலா வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகும் புதிய ஹாலிவுட் திரைப்படத்திற்கு 'தி ஐ' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது கிரீஸ் நாட்டில் நடைபெறுகிறது. எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் தயாராகும் 'தி ஐ' எனும் படத்தினை ஃபிங்கர்பிரிண்ட் ஃபிலிம்ஸ் மற்றும் அர்கோனாட்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது கிரிஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் மற்றும் கோர்பு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டிருக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகம் முழுவதும் தன் திறமையை நிரூபித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், 'டிரெட்ஸ்டோன்' எனும் ஹாலிவ...
ஜிவி பிரகாஷ்குமார் – கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் “13” டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது

ஜிவி பிரகாஷ்குமார் – கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் “13” டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது

சினிமா
மெட்ராஸ் ஸ்டுடியோஸ் & அனுஷ் பிராபகர் ஃப்லிம்ஸ் வழங்கும் ஃபிலிம்மேக்கர் K விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் - கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் "13" டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது தனித்துவமான கருத்துகளுடன் புதிய கதையம்சத்துடன் கூடிய படங்கள் நிச்சயம் உலக சினிமா பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில், K விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார்- கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள "13" படத்தின் டீசர் நமக்குள் படம் குறித்தான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நிமிடம் 12 செகண்ட்ஸ் ஓடக்கூடிய இந்த டீசர் புதிரான காட்சி அமைப்புகள், இசை மற்றும் ஒலியுடன் அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஸ்டைலிஷான கெளதம் வாசுதேவ் மேனன் என இருவரும் தங்கள் நடிப்பின் மூலம் கதைக்கு வலுவூட்டி உள்ளனர். இவர்கள் இருவரும் திரையில் இணைந்து வருவதை பார்வையாளர்கள் தவற விடக்கூடாது என...
நடிகர் நாகசைதன்யா அக்கினேனி, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் ’NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூலின் படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்துள்ளது.

நடிகர் நாகசைதன்யா அக்கினேனி, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் ’NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூலின் படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்துள்ளது.

சினிமா
‘NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூல் மைசூரில் முடிந்துள்ளது! நடிகர் நாகசைதன்யா அக்கினேனி, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் ’NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூலின் படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்துள்ளது. ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகி வரக்கூடிய இந்தப் படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்தான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் முக்கியமான ஷெட்யூல் மைசூரில் முடிவந்துள்ளது. இதில் நடிகர் நாகசைதன்யாவும் பங்கேற்றிருக்கிறார். மைசூரின் அழகிய இடங்கள் பலவற்றில் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இந்தப் படத்தில் நடித்து வருகிறார் நாகசைதன்யா. மேலும், அவரது சினிமா பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வரக்கூடிய படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இசையில் ம...
 சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியீடு

 சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியீடு

சினிமா
நடிகர் தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் 'மைக்கேல்' பட டீசர் 'நம்பிக்கை நட்சத்திரம்' சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரம்மாண்ட முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி, கரண் சி புரொடக்‌ஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்திய படைப்பாக தயாரித்து வரும் திரைப்படம் 'மைக்கேல்'. இதில் நடிகர் சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பரத் சௌத்ரி மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இதனை மறைந்த ஸ்ரீ நாராயண்தாஸ் கே நரங் வழங்குகிறார். :மைக்கேல்' படத்தின் தமிழ் பதிப்பின் டீசரை நடிகர் தனுசும், தெலுங்கு பதிப்பின் டீசரை நட...
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை திரைப்படமான “பெடியா” டிரைலர் வெளியீடு

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை திரைப்படமான “பெடியா” டிரைலர் வெளியீடு

சினிமா
பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கும் பான்-இந்தியா திரைப்படமான 'பெடியா' டிரைலர் பற்றிய அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது படத்தின் டிரைலர் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் வருண் தவானின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக பெடியா டிரைலரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரம்மியமான காடுகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தில் வருண் தவானுடன் கீர்த்தி சனோன் நடித்துள்ளார். புராண கதைகளில் வரும் ஓநாய் (பெடியா) ஒன்றினால் கடிப்பட்டு ஓநாய் மனிதனாக மாறிய பாஸ்கர் என்பவரை பற்றிய கதை இது. இந்த நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களின் தேடலில் பல திருப்பங்கள் நிறைந்திருக்கின்றன. ஓநாய் மனிதனாக வருண் தவான் செய்யும் விஷயங்கள் சுவா...