Sunday, April 26

Author: admin

மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்தும் இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா

மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்தும் இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா

செய்திகள்
மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கலா பிரதர்ஷினி சார்பாக இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா மேற்கொண்டுள்ளார். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு மற்றும் மத்திய சுற்றுலா, கலாச்சாரம், வடகிழக்கு பகுதி மேம்பாடு அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் டிசம்பர் 4 அன்று சென்னை மியூசிக் அகாடெமியில் இந்நிகழ்வை துவக்கி வைக்கின்றனர். இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக தேசிய மற்றும் மாநில அளவில் விருதுகள் வென்ற முன்னணி கலைஞர்களோடு பணியாற்றும் வாய்ப்பு அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும். தமது கடைசி படைப்பை தலைசிறந்ததாக கண்டசாலா வழங்கினார். அதற்காக அவர் பகவத் கீதையில் இருந்து கவனமாக 100 வசனங்களைத் தேர்ந்தெடுத்தார். கண்டசாலாவின் பகவத் கீதை இசைப் படைப்ப...
”10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிப்பது மகிழ்ச்சி” -ப்ரியாமணி

”10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிப்பது மகிழ்ச்சி” -ப்ரியாமணி

சினிமா
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசியவிருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி, பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்க வரும் படம் " DR 56 " ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னடா மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்தும் பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் " DR 56 " படத்தை தமிழ், தெலுங்கில் ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் A.N. பாலாஜி வெளியிடுகிறார். இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி தயாரித்ததுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார் பிரவீன் ரெடி. ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் படத்தின் நாயகி ப்ரியாமணி பேசியதாவது:- “ ‘சாருலதா’ படத்திற்கு பிறகு தமிழில் நான் நடித்து...
பிரைம் வீடியோவின் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” வலைதளத் தொடர் முன்னோட்டம் வெளியீடு

பிரைம் வீடியோவின் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” வலைதளத் தொடர் முன்னோட்டம் வெளியீடு

சினிமா
அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான 'சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வெளியாகவிருக்கும் அசல...
தயாரிப்பாளர் டாக்டர் G. தனஞ்ஜெயன் அவர்களின் மகள் ரேவதி- அபிஷேக் திருமணத்திற்கு 100க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பட பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

தயாரிப்பாளர் டாக்டர் G. தனஞ்ஜெயன் அவர்களின் மகள் ரேவதி- அபிஷேக் திருமணத்திற்கு 100க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பட பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

சினிமா
டாக்டர். G. தனஞ்ஜெயன் அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர். தற்போது நடிகர் விஜய் ஆண்டணியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் ஓரு பார்ட்னராக தயாரித்து வருகிறார். தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் பதவியில் இருக்கிறார்.  சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை அவரது எழுத்திற்காக வென்றிருக்கிறார். G. தனஞ்ஜெயனின் இரண்டு மகள்களும் தங்களது மேல் படிப்பை (M.S. in Computers)  USA -வில் முடித்துவிட்டு அங்கே தற்போது முன்னனி நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இரண்டு மகள்களது திருமணமும் இந்த வருடம் நவம்பர் - டிசம்பர் என ஒரு மாத இடைவெளியில் குடும்பத்தினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.G. தனஞ்ஜெயன் அவரது மூத்த மகளான ரேவதியின் திருமணம் நவம்பர் 20, 2022 அன்று அபிஷேக் குமாருடன் அம்பத்தூரில் உள்ள PSB கன்வென்ஷஸ் ஹால...
NC22 ப்ரீ லுக்: நாக சைதன்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிரட்டல்

NC22 ப்ரீ லுக்: நாக சைதன்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிரட்டல்

சினிமா
இயக்குநர் வெங்கட்பிரபுவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'NC22'-ல் அக்கினேனி நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி இந்தக் கதையில் கதாநாயகியாக நடிக்கிறார். பைலிங்குவல் கதையாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரவிந்த் சுவாமி, பிரியாமணி, சரத்குமார் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாக சைதன்யாவின் பிறந்தநாள் நவம்பர் 23ம் தேதி வருவதை ஒட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'கேப்டன் கூல்' இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இருவரும் படத்தின் ப்ரீ-லுக் வெளியீட்டு தேதியை காணொளியில் அறிவித்துள்ளனர். பார்வையாளர்களை கவரும் விதமான இந்த ப்ரீ-லுக் இன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரீ லுக்கில் நாக சைதன்யா தீவிரமான காவல் துறை அதிகாரியாக வருகிறார். அவரது வேகத்தையும் தீவிரத்தையும் மட...
இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது !

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது !

சினிமா
Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.  தற்போது நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “மாமன்னன்” படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப...
சரிகம’வின் ஒரிஜினல்ஸ் ‘உச்சிமலை காத்தவராயன்’ எனும் சுயாதீன பாடலுக்கான காணொளி வெளியீடு

சரிகம’வின் ஒரிஜினல்ஸ் ‘உச்சிமலை காத்தவராயன்’ எனும் சுயாதீன பாடலுக்கான காணொளி வெளியீடு

சினிமா
இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான 'உச்சிமலை காத்தவராயன்..' எனும் பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் 'உச்சிமலை காத்தவராயன்'. இந்த பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார். ''பின்னால வந்த எவனும் வெளங்குனதில்ல..' என தொடங்கும் இந்த பாடலில் நடிகர்கள் மா. கா. பா. ஆனந்த், ஆர். ஜே. விஜய், நடிகை ஆஷ்னா ஜாவேரி ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள். இந்த பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார், இந்தப் பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'உச்சிமலை காத்தவராயன்' எனும் சுயாதீன பாடலை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்த, இந்தக் குழு, வெகுஜன மக்களிடத்தில் ஏகோபித்த ஆதரவுடன் இன்று...
பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியீடு

பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியீடு

சினிமா
இளம் நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹனு-மேன்' படத்தில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 'ஜோம்பி ரெட்டி' எனும் திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், திறமையான இளம் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் 'ஹனு-மேன்' எனும் பான் இந்திய அளவிலான சூப்பர் ஹீரோ திரைப்படம் தயாராகியிருக்கிறது.   இயக்குநர் பிரசாந்த் வர்மா அண்மையில் வெளியிட்ட 'ஹனு-மேன்' படத்தின் காட்சி துணுக்குகளில் நாயகன் தேஜா சஜ்ஜாவின் கதாபாத்திரத்தை பிரத்யேக பார்வை மூலம் அறிமுகப்படுத்தியிருந்தார். இதற்கு பார்வையாளர்களிடத்தில் பெரும் தாக்கத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசர், பார்வையாளர்கள் தங்களின் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திராத வகையில் அமைந்திருக்கிறது. ...
விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

சினிமா
உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி. கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம். பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்திய மொழிகளில் வெளியாகிறது. வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தி...
பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைந்தார்

பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைந்தார்

சினிமா, செய்திகள்
பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 91) இன்று மாலை 6:40 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார். நாளை (நவம்பர் 21, திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அவரது உடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும். நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடிப்பில் வெளிவந்த பாசமலர்,பார்த்தால் பசி தீரும் ,படித்தால் மட்டும் போதுமா ,அன்னை இல்லம், புதிய பறவை .தெய்வ மகன்,அன்புள்ள அப்பா மக்கள்திலகம் MGR அவர்கள் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன்,தாய் சொல்லை தட்டாதே , அன்பே வா,பரிசு,தொழிலாளி , மற்றும் சிவாஜி அவர்களும் ரஜினி அவர்களும் இணைந்த நடித்த நான் வாழ வைப்பேன்,விடுதலை ,மோகன் நடித்த விதி ,சிவகுமார் நடித்த பத்ரகாளி ,கமல் அவர்கள் நடித்த மங்கம்மா சபதம்,வடிவேலு நடித்த தெனாலிராமன் உள்ளிட்ட பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார், மேலும் ஜெமினி கணேசன், விஜயகுமாரி...