Monday, April 27

Author: admin

ஒரு படத்திற்கு 77 விருதுகளா? ; ‘சஷ்தி’ குறும்பட விழாவில் ஆச்சர்யப்பட்ட கே.பாக்யராஜ்

ஒரு படத்திற்கு 77 விருதுகளா? ; ‘சஷ்தி’ குறும்பட விழாவில் ஆச்சர்யப்பட்ட கே.பாக்யராஜ்

சினிமா
குறும்படங்கள் சினிமாவில் நுழைவதற்கான விச்ட்டிங் கார்டு என்று சொல்வார்கள். அந்தவகையில் ஒரு சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆக 30 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவரான ஜூட் பீட்டர் டேமியான், டைரக்சன் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவில் நுழையும் முதல்படியாக சஷ்தி என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள இந்த குறும்படம். 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர் SK காயத்ரி, ஹாரிஸ், மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த ‘சஷ்தி’ குறும்படம் கிட்டத்தட்ட 35 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 77 விருதுகளை வென்றுள்ளது. இந்த குறும்பட திரையிடலுடன் கூடிய பத்திரிக்கையாளர் சந்திப்பும் விருது பெற்ற கலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்வும் நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிர...
 ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவைத் தொடர்ந்து சென்னையை வந்தடைந்த ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா (JIFF) பிரச்சார சுடர்

 ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவைத் தொடர்ந்து சென்னையை வந்தடைந்த ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா (JIFF) பிரச்சார சுடர்

சினிமா
ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவின் (JIFF) 15-வது பதிப்பை விளம்பரப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட 'பிரச்சார சுடர்' பயணத்தின் மூன்றாவது நிகழ்ச்சி சென்னையில் உள்ள பிரசாத் பிரிவியூ தியேட்டர் லேப்ஸில் நடைபெற்றது.இசையமைப்பாளர், பாடகர், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இந்திய மற்றும் தமிழ் சினிமாவிற்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்பதில் சந்தேகமில்லை என்று கங்கை அமரன் தெரிவித்தார்.முதன்முறையாக, ஒரு திரைப்பட விழா பிராந்திய சினிமாவை உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தும் நோக்கில் செயல்படத் தொடங்கியுள்ளது, என்றார் அவர். "ஹனு ரோஜ் மற்றும் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவின் இந்த சிறந்த முயற்சிக்கு எனது பாராட்டுகள். இது வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஒரு முயற்சியாகும். இந்திய சினிமா ஒரு புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது. திரைப்பட விழ...
தெற்கில் உள்ள விநியோகஸ்தர்கள் ‘அவதார் 2’ படத்திற்கு மிகப் பெரிய விலைக் கொடுக்க முன்வந்துள்ளதாக அறிக்கைத் தெரிவிக்கிறது!

தெற்கில் உள்ள விநியோகஸ்தர்கள் ‘அவதார் 2’ படத்திற்கு மிகப் பெரிய விலைக் கொடுக்க முன்வந்துள்ளதாக அறிக்கைத் தெரிவிக்கிறது!

சினிமா
தெற்கில் உள்ள விநியோகஸ்தர்கள் ‘அவதார் 2’ படத்திற்கு மிகப் பெரிய விலைக் கொடுக்க முன்வந்துள்ளதாக அறிக்கைத் தெரிவிக்கிறது! தெற்கு எப்போதுமே VFX-ல் வரக்கூடிய மிகப் பிரம்மாண்டமான எண்டர்டெயினர் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்குத் தவறுவதில்லை. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் காட்சிகள் சினிமா சந்தையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவில் பல இடங்களில் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதியுடன் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் விநியோகஸ்தர்கள் மற்றும் எக்ஸிபிட்டர்ஸ் (exhibitors) அனைவரது கவனமும் படத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வசூலின் மீதே உள்ளது. ஐந்து நாட்களுக்கு முன்புத் தொடங்கிய இந்தப் படத்தின் முன்பதிவுகள் எதிர்பார்த்ததை விடவும் குறிப்பாக தெற்கில் நன்றாகவே உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாத் துறையைச் சேர்ந்த விநியோகஸ...
நடிகர் சார்லி முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” இனிதே பூஜையுடன் துவங்கியது !!

நடிகர் சார்லி முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” இனிதே பூஜையுடன் துவங்கியது !!

சினிமா
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” இனிதே பூஜையுடன் துவங்கியது !! Arabi production  சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும்  Viyan ventures சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க,  உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” பூஜையுடன் இன்று நவம்பர் 28, 2022 இனிதே துவங்கியது. அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில்  இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இருக்கை நுனியில் ரசிகர்களை இருத்தி வைக்கும் பரபரப்பான திரில்லராக உருவாகும் இப்படத்தை, இயக்குநர் ...
பாம்பாட்டம்  படத்தின் கதைக்காக மூன்று வருடங்கள் உழைத்தேன்-இயக்குனர் வி.சி.வடிவுடையான்

பாம்பாட்டம் படத்தின் கதைக்காக மூன்று வருடங்கள் உழைத்தேன்-இயக்குனர் வி.சி.வடிவுடையான்

சினிமா
‘ஓரம்போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள ‘பாம்பாட்டம்.’ வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகிகளாக மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இனியன் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் ஆர்யா டிரைலரை வெளியிட்டார். விழாவில் இசையமைப்பாளர் அம்ரிஷ் பேசியபோது, “இந்தப் படத்தில் பெரிய அனிமேஷன் பாம்பு வருகிறது. பாம்பு வரும் காட்சிக்கான பின்னணி இசையை அமைத்தபோது அந்த சத்தத்தை கேட்டுவிட்டு என ஸ்டுடியோவுக்குள் நிஜமான பாம்பே வந்துவிட்டது. இந்த படத்தின் இயக்குனர் வடிவுடையானுடன் ...
விறுவிறுப்பையும் பரபரப்பையும் பற்ற வைக்கும் ‘தெற்கத்தி வீரன்’டிசம்பர் 2 ம் தேதி வெளியாகிறது

விறுவிறுப்பையும் பரபரப்பையும் பற்ற வைக்கும் ‘தெற்கத்தி வீரன்’டிசம்பர் 2 ம் தேதி வெளியாகிறது

சினிமா
ஒரு திரைப்படத்தில் பல பொறுப்புகளை ஏற்று அதை திறம்படச் செய்யும் படைப்பாளனை தமிழ் சினிமா அஷ்டாவதானியாக அரவணைத்துக்கொள்ளும். அப்படியொரு கலைஞனாக தன்னை அடையாளப்படுத்த முனைந்து ‘தெற்கத்தி வீரன்’ படம் மூலம் அறிமுகமாகிறார் சாரத். சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் அறிமுக நாயகன் சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக அறிமுகம் ஆகும் படம் ‘தெற்கத்தி வீரன்’. இப்படத்தில் சாரத்தின் நண்பர்களாக ’முருகா’ அசோக், ‘நாடோடிகள்’ பரணி, ’மாரி’ வினோத் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனின் தந்தையாக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். மேலும் மதுசூதனன், கபீர் துஹான் சிங், பவன், ஆர்.என்.ஆர்.மனோகர், நமோ நாராயணா, ராஜசிம்மன், ஆர்யன், ரேணுகா, உமா பத்மநாபன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளதுடன் ஒரு பாடல் காட்சியில் ந...
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடரின் பிரத்யேக காட்சி

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடரின் பிரத்யேக காட்சி

சினிமா
கோவாவில் நடைபெற்று வரும் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் திரில்லர் வலைதள தொடரான 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி', வருகை தந்த பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான வதந்தி 'தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் எட்டு அத்தியாயங்கள் இந்தியாவிலும், 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வெளியாகிறது. இதனை வால் வாட்சர் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களுமான புஷ்கர்- காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த தொடரில் எஸ்.ஜே. சூர்யா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். தொடரின் முதன்மையான கதாபாத்திரமான வெலோனி எனும் வேடத்தில் புதுமுக நடிகை சஞ்சனா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர...
 கபிலன் வைரமுத்து எழுதிய “ஆகோள்” இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்

 கபிலன் வைரமுத்து எழுதிய “ஆகோள்” இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்

இலக்கியம், சினிமா
ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவு எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல் நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 1920 ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கிய பகுதியாக இடம் பெற்றிருக்கிறது. இயக்குநர் பாரதிராஜா நூலை அறிமுகம் செய்யும் சிறப்பு காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகோள் குறித்து கபிலன்வைரமுத்து கூறுகையில்: சங்க காலத்தில் சிற்றரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போர்களில் எதிராளிகளின் ஆடு மாடுகளை களவாடி வரும் செயலுக்கு ஆகோள் என்று பெயர். இது களவுச் செயலாகவு...
திருமணவாழ்வில் 10வது ஆண்டை கொண்டாடும் பிரபல நடன ஜோடி

திருமணவாழ்வில் 10வது ஆண்டை கொண்டாடும் பிரபல நடன ஜோடி

சினிமா
பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர்  மற்று லலிதா ஷோபி மாஸ்டர் திருமண வாழ்க்கையில் 10 வது ஆண்டை கடந்திருக்கிறார்கள். திரையுலகில் நடன இயக்குனர்களாக பலருக்கு முன்னுதாரமாக இருக்கும் இவர்கள் இல்லற வாழ்விலும் இன்பமான ஜோடியாக வலம் வருகிறார்கள். இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான உலக நாயகன் கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபி. திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பிரமாண்ட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். லலிதா ஷோபி அவர்களும் பிகில் போன்ற பல முன்னணி திரைப்படங்களில் பணிபுரிந்து பிரபலமானவர் ஷோபி மாஸ்டர், லலிதா ஷோபி மாஸ்டர் இருவரும் 2012 நவம்பர் 23 அன்று இல்லற வாழ்வில் இணைந்தனர். தற்போது 10 வருடங்கள் கடந்துள்ளதை இந்த ஜோடி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறத...
சுப்: ரிவெஞ்ச் ஆஃப் திஆர்ட்டிஸ்ட்(Chup: Revenge of the Artist) திரைப்படம் 24 மணி நேரத்தில் ZEE5 இல் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது.

சுப்: ரிவெஞ்ச் ஆஃப் திஆர்ட்டிஸ்ட்(Chup: Revenge of the Artist) திரைப்படம் 24 மணி நேரத்தில் ZEE5 இல் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது.

சினிமா
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, 'சுப்: ரிஜெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ் ட்' (Chup: Revenge of The Artist) இன் உலக டிஜிட்டல் பிரீமியர் நவம்பர் 25, 2022 அன்று நடைபெற்றது. டாக்டர் ஜெயந்திலால் கடாவின் பென் ஸ்டுடியோ, கௌரி ஷிண்டே, ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மற்றும் அனில் நாயுடுவின் Hope production தயாரிப்பில், R.பால்கி இயக்கத்தில், சன்னி தியோல், துல்கர் சல்மான், ஸ்ரேயா தன்வந்தரி, பூஜாபட், சரண்யா பொன்வண்ணன் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜீ-5-ல் இந்த படம்  கிடைக்கிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, ZEE5 இல் திரையிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த திரைப்படம் 30 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது....