உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” இனிதே பூஜையுடன் துவங்கியது !!
Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் Viyan ventures சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” பூஜையுடன் இன்று நவம்பர் 28, 2022 இனிதே துவங்கியது.
அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இருக்கை நுனியில் ரசிகர்களை இருத்தி வைக்கும் பரபரப்பான திரில்லராக உருவாகும் இப்படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்குகிறார். இப்படதில் முக்கியமான வேடத்தில் நடிகர் சார்லி கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர் நடிகை தாரணி மற்றும் நடிகை பிரானா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.
படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடந்தேறியது. இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் இராம்நாடு பகுதிகளில் இரண்டு கட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு நிறுவனம் – Arabi production & Viyan ventures
தயாரிப்பாளர் – ரஜீஃப் சுப்பிரமணியம்
இயக்கம் – வினோத் ராஜேந்திரன்
ஒளிப்பதிவு – பிரசாந்த் வெள்ளிங்கிரி
எடிட்டர் – தமிழ்குமரன்
கலை இயக்கம் – அஜய் சம்பந்தம்
இசை – சூர்ய பிரசாத்
மக்கள் தொடர்பு – ராஜா