Monday, April 27

Author: admin

இயக்குநர் மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்’-  Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்

இயக்குநர் மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்’-  Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்

சினிமா
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான  மாரிசெல்வராஜ் 'நூடுல்ஸ்'- Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா ராஜ்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மதன் தக்‌ஷிணாமூர்த்தி இந்தப் படத்தை எழுதி இயக்கியதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். ரெளடிபேபி புகழ் S.J. ஆழியா, அருவி படப்புகழ் திருநாவுக்கரசு, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜூக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்: T. வினோத் ராஜா MFI உடன் இணைந்து ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிவி பிரகாஷூடன் ராபர்ட் சற்குணம் இணைந்து பின்னணி இசை அமைத்துள்ளார். ரமேஷ் கிருஷ்ணன் MK படத்தின் பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். படத்தொகுப்பு:...
ராங்கி- பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

ராங்கி- பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

சினிமா
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'ராங்கி'. இந்தத் திரைப்படம் டிசம்பர் 30,2022 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (27.12.2022) சென்னையில் நடைபெற்றது. படத்தொகுப்பாளர் சுபாராக் பேசியதாவது, “சரவணன் சாருடன் தொடர்ந்து மூன்று படங்கள் நான் வேலை பார்த்து இருக்கிறேன். இதை நான் ஸ்பெஷலாக பார்க்கிறேன். இயக்குநர் சரவணனுடன் இது ஹாட்ரிக் தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் பல வெர்ஷன்கள் நாங்கள் வேலை பார்த்துக் கொண்டே இருந்ததால் இந்தப் படம் எங்களுக்கு ஸ்பெஷல் என்றுதான் சொல்ல வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக நிறைய கற்றுக் கொள்வதற்கான இடத்தையும் இந்த படம் எங்களுக்கு கொடுத்தது. அதை பெரிய திரையில் பார்க்கும்போது கூடுதல் சந்தோஷமாக இருந்தது. இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ...
இறப்பு கம்பீரமானது என சொல்லும் படம் ‘டியர் டெத்’

இறப்பு கம்பீரமானது என சொல்லும் படம் ‘டியர் டெத்’

சினிமா
SNR பிலிம்ஸ் சார்பில் சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியர் டெத்’. சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதியுள்ளார். இயக்குனர் பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் சாவு என்பது பயப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அது கம்பீரமானது.. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. அன்றாடம் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி அதேசமயம் நிஜத்தில் நடந்த நிகழ்வுகளையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் பற்றி தயாரிப்பாளர் சதீஷ் நாகராஜன் கூறும்போது, “என்னுடைய தாத்தா பி.எஸ் மூர்த்தி கன்னட திரையுலகில் பிரபல இயக்குனராக இருந்தவர். தமிழில் போலீஸ்காரன் மகள், மாலையிட்ட மங்கை உள்ளிட்ட நூற்றுக்க...
உடன்பால்- திரைப்பட விமர்சனம்

உடன்பால்- திரைப்பட விமர்சனம்

சினிமா
இந்த conceptல பல படங்கள் வந்து இருந்தாலும் எப்பவும் நடை முறைக்கு ஒத்துப்போற கருதான் ..இந்த படத்தோட கதை,  எந்த அளவுக்கு ரசிக்கும்படியாகவும், சிந்திக்கும்படியாகவும் சொல்லப்படுகிறதோ அந்த கதை வெற்றிஅடையும்  ,உடன்பாலும் அதில் உள்ளடங்கும்.... கடன் பிரச்சினை கழுத்தை நெறிக்கிற சூழ்நிலையில இருக்குற அண்ணன் தங்கச்சி ...தங்களோட பிரச்சனை தீர வீட்டை வித்துடலான்னு அப்பா(சார்லி )கிட்ட சொல்லுறாங்க அதுக்கு அவர் முடியாதுனு சொல்லிட்டு போறாரு..அதை மறுக்கும் அப்பா வழக்கமாக செல்லும் ஒரு complexக்கு செல்கிறார்..அங்கு அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த complex இடிந்து விழுந்துடிச்சினு பிளாஷ் நியூஸ் வருது...அந்த நியூஸில இறந்தவங்க குடும்பதுக்கு 20 இலட்சம் தருவதாக அரசாங்கம் அறிவிக்குது .......தங்களோட அப்பா அந்த விபத்துல சிக்கிடாருன்னு நினச்சு வருத்தப்படுறதா, இல்ல வரபோற பணத்தை எப்படி பங்கு போடுறதான்னு நினைக்கும் பசங்க ஒ...
சேரன் – ‘மிகமிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் தமிழ்க்குடிமகன்

சேரன் – ‘மிகமிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் தமிழ்க்குடிமகன்

சினிமா
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை பெட்டிக்கடை, பகிரி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மிக மிக அவசரம் புகழ் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நடிகர்கள் லால், எஸ் ஏ சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொள்கிறார். தமிழ்க்குடிமகன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், 27 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து பல்வேறு தரப்பினர் இடமிருந்து மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பற்றி இயக்குனர் இசக்கி கார்வண்ணன் கூறும்போது, “இந்த சமூகத்தில் ...
ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’: தி வே ஆஃப் வாட்டர் உலகம் முழுவதும் பார்வையாளர்களின் நம்பர் 1 தேர்வாக இருந்து ரூ. 7000 கோடி வசூல் செய்துள்ளது;  இந்தியாவில் ரூ. 300 கோடி+ GBOC வெறும் பத்து நாட்களில் வசூல் செய்துள்ளது!

ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’: தி வே ஆஃப் வாட்டர் உலகம் முழுவதும் பார்வையாளர்களின் நம்பர் 1 தேர்வாக இருந்து ரூ. 7000 கோடி வசூல் செய்துள்ளது;  இந்தியாவில் ரூ. 300 கோடி+ GBOC வெறும் பத்து நாட்களில் வசூல் செய்துள்ளது!

சினிமா
ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’: தி வே ஆஃப் வாட்டர் உலகம் முழுவதும் பார்வையாளர்களின் நம்பர் 1 தேர்வாக இருந்து ரூ. 7000 கோடி வசூல் செய்துள்ளது;  இந்தியாவில் ரூ. 300 கோடி+ GBOC வெறும் பத்து நாட்களில் வசூல் செய்துள்ளது! இந்தத் தலைமுறை பார்வையாளர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றத் திரைப்படமாக ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’: தி வே ஆஃப் வாட்டர் உள்ளது. தொடர்ச்சியாக இந்த திரைப்படம் இந்தியாவில் வெளியான பத்தே நாட்களில் ரூ. 300 Cr+ GBOC வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ’அவென்ஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்திற்குப் பிறகு ‘அவதார்’ திரைப்படம் இரண்டாவது மிகப்பெரிய ஹாலிவுட் படமாக இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் இதுவரை எந்தவொரு ஹாலிவுட் திரைப்படத்திற்கும் கிடைத்திராத மிகப்பெரிய வகையில், குடும்பத்தினர் கொண்டாடும் பொழுதுபோக்குப் படமாகவும் பிரம்மாண்டமான காட்சிகளைக் கொண்ட படமாகவும் இரண்டாவது வாரத்திற்குள் நுழைந...
மலையாளத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக அறிமுகம் !விஷாலுக்கு வில்லனாக தமிழ்- தெலுங்கு சினிமாவில் அறிமுகம்* !கான்ஸ்டபிளின் அதிரடி நடிப்பு!!

மலையாளத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக அறிமுகம் !விஷாலுக்கு வில்லனாக தமிழ்- தெலுங்கு சினிமாவில் அறிமுகம்* !கான்ஸ்டபிளின் அதிரடி நடிப்பு!!

சினிமா
கோட்டயம் கிழக்கு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த P.N.சன்னி சினிமா நடிகரானது சுபாரஸ்யமானது.பத்ரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றிப்பெற்ற படம் " ஸ்படிகம் " . இப்படத்தில் மோகன்லாலுக்கு சவால் விடும் பயில்வான் போன்ற உடல்வாகுள்ள நடிகரை தேடியிருக்கிறார் இயக்குனர். அந்த சமயத்தில் தான் அதில் முக்கிய வில்லனாக நடித்த ஜார்ஜ்,அன்றைய மிஸ்டர் கேரளா பட்டத்தில் 2- ம் பரிசு பெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் சன்னியை பற்றி சொல்ல.. டைரக்டரின் ஒரே பார்வையில் ஓக்கே ஆனார் பெருச்சாளி பாஸ்டின் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி மலையாள மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றார் அதன் பிறகு நிறைய மலையாள படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். முதல் படத்திலேயே இவர் பெருச்சாளி பாஸ்டின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். " ஜோஜி " என்ற படத்தில் பஹத் ஃபாசிலின் தந்தையாக நடித்து அசத்தியது விஷாலின் " ல...
“ அருவா சண்ட ” படத்திற்கு தேசிய விருது நிச்சயம்- தயாரிப்பாளர் கேயார் நம்பிக்கை

“ அருவா சண்ட ” படத்திற்கு தேசிய விருது நிச்சயம்- தயாரிப்பாளர் கேயார் நம்பிக்கை

சினிமா
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அருவா சண்ட’. 'சிலந்தி', ரணதந்த்ரா( கன்னடம்), இளையராஜா இசையில் 'நினைவெல்லாம் நீயடா' ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் ஆதிராஜன் பாடல்களை எழுத, தரண்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி தானு பாடல்களை வெளியிட, தயாரிப்பாளர்கள் முரளி இராமநாராயணன், கேயார், கே.ராஜன், அசோக்சாம்ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய படத்தின் தயாரிப்பாளர் வி.ராஜா பேசியதாவது:- “இந்தப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். உயிரை கொடுத்து இந்த விழாவை நடத்துகிறோம். தயாரிப்பாளர் அண்ணன் கே.ராஜன் சினிமா விழாக்களில் பேசும்போது “படத்தின் ஹீரோ...
மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தில் டைட்டில் லுக் வெளியீடு

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தில் டைட்டில் லுக் வெளியீடு

சினிமா
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மலைக்கோட்டை வாலிபன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மலையாள திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மலைக்கோட்டை வாலிபன்'. 'ஆமென்' படத்தின் கதாசிரியரான பி. எஸ். ரஃபிக் திரைக்கதை எழுதியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் கதையின் நாயகனாக நடிக்கிறார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆ...
நயன்தாரா நடித்திருக்கும் ‘கனெக்ட்’ திரைப்படம்

நயன்தாரா நடித்திருக்கும் ‘கனெக்ட்’ திரைப்படம்

சினிமா
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வணிகரீதியாக மற்றும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைக் கொடுத்து பார்வையாளர்கள் மத்தியில் வெற்றிப் பெற்று வருகிறார். அந்த வகையில், ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட ‘கனெக்ட்’ திரைப்படம் நேற்று (டிசம்பர் 22, 2022) வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய ஓப்பனிங்கை கொடுத்துள்ளது. மேலும் படம் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த உற்சாகத்தோடு நடிகை நயன்தாரா ‘கனெக்ட்’ படத்தில் பணிபுரிந்தது பற்றியும் தன்னுடைய 20 வருட திரையுலக பயணம் பற்றியும் பகிர்ந்திருக்கிறார். சினிமாவில் தனது இருபது வருட பயணம் பற்றி பக்ரிந்து கொள்ளும்போது, ‘இந்த மிகப்பெரிய திரையுலகில் நான் ஒரு சிறு அங்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக நான் தீவிரமாக உழைத்தேன். இன்று, கடவுள் எனக்கு ஒரு அற்புதமான வாழ்க்கையை கொடுத்திருப்பதில் நான் மகிழ்ச்சி அ...