Monday, April 27

Author: admin

பாராட்டுகளை குவித்து ட்ரெண்டிங்கில் இருக்கும் அமலா பாலின் ‘தி டீச்சர்’

பாராட்டுகளை குவித்து ட்ரெண்டிங்கில் இருக்கும் அமலா பாலின் ‘தி டீச்சர்’

சினிமா
நட்மெக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நெட்ப்ளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியான நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'தி டீச்சர் ' எனும் திரைப்படம் இணையவாசிகளிடம் பாராட்டை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தினை பிடித்திருக்கிறது. இயக்குநர் விவேக் இயக்கத்தில் தயாராகி மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, நெட்ப்ளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் டிசம்பர் 23ஆம் தேதியன்று 'தி டீச்சர்' வெளியானது. நடிகர்கள் ஹக்கீம் ஷாஜகான், செம்பன் வினோத், கல்யாணி, மஞ்சு பிள்ளை, நந்து, மாலா பார்வதி, தினேஷ் பிரபாகர், கால்பந்தாட்ட வீரரும், நடிகருமான ஐ. எம். விஜயன், அனுமோல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் 'தி டீச்சர்' படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிஷெட்டி, ப்ருத்வி ராஜ் ...
பிரைம் வீடியோ தனது ‘மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்’’இன் புதிய அமர்வை வெளியிடுகிறது; பொழுதுபோக்குதுறையிலுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேலும் ஆழமாக ஊடுருவிச்சென்று காட்சிப்படுத்துகிறது.

பிரைம் வீடியோ தனது ‘மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்’’இன் புதிய அமர்வை வெளியிடுகிறது; பொழுதுபோக்குதுறையிலுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேலும் ஆழமாக ஊடுருவிச்சென்று காட்சிப்படுத்துகிறது.

சினிமா
பிரைம் வீடியோ தனது ‘மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்’’இன் புதிய அமர்வை வெளியிடுகிறது; பொழுதுபோக்குதுறையிலுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேலும் ஆழமாக ஊடுருவிச்சென்று காட்சிப்படுத்துகிறது. இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த 9 வலிமைமிக்க பெண்கள்; பார்வதி திருவோத்து மற்றும் ரீமா கல்லிங்கல் போன்ற வெள்ளித்திரையில் மின்னும் திறமையாளர்கள், மற்றும் இந்து VS, ரத்தீனா பிளாத்தோட்டத்தில், இலாஹேஹிப்தூலா, ஸ்ரேயா தேவ் துபே, நேஹா பார்திமதியானி போன்ற வெள்ளித் திரைக்கு அப்பாலான துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களிலிருந்து, தொடங்கி அபர்ணா புரோஹித் மற்றும் நெறியாளர் ஸ்மிருதி கிரண் போன்ற நிறுவனத் தலைவர்கள் வரை இதில் பங்குபெறுகிறார்கள். இந்த ஆண்டு முடிவுக்கு வரும் இந்தத் தருணத்தில், இதன் பங்கேற்பாளர்கள் கடினமான கேள்விகளை எழுப்புகிறார்கள், மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கவும் , அ...
சர்வதேச திரைப்பட விருதை வென்ற ‘ஆதார்’

சர்வதேச திரைப்பட விருதை வென்ற ‘ஆதார்’

சினிமா
சென்னையில் நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பிற்கான விருதினை‌ நடிகர் கருணாஸ், நடிகர் அருண் பாண்டியன், நடிகை இனியா, நடிகை ரித்விகா, நடிகர் ‘பாகுபலி’ பிரபாகர் நடிப்பில் வெளியான 'ஆதார்' திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. வெண்ணிலா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் திருமதி சசிகுமார் வழங்க, இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'ஆதார்'. எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்திருந்த இந்தத் திரைப்படம், வெளியாகி விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சென்னையில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் 'ஆதார்' உள்ளிட்ட 12 திரைப்படங்கள் திரையிடத் தேர்வு பெற்றன. இதில் 'ஆதார்' திரைப்படத்தை...
ட்ரம்ஸ் சிவமணி ‘Quotation Gang’ படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்

ட்ரம்ஸ் சிவமணி ‘Quotation Gang’ படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்

சினிமா
விவேக் கே கண்ணன் இயக்கத்தில் சன்னி லியோன், ப்ரியாமணி, ஜாக்கி ஷெராப் மற்றும் சாரா நடிக்கும் 'Quotation Gang' படத்தில் மியூசிகல் ஐகான் ட்ரம்ஸ் சிவமணி இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த 2021-ம் 'Quotation Gang' அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. பான் இந்திய திரைப்படமான இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்கள் இதுவரை பார்த்திடாத கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஜாக்கி ஷெராப் மற்றும் 'தெய்வத்திருமகள்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்த சாரா இவர்கள் இருவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரதீப், விஷ்னோ வாரியர், அக்ஷயா, கியாரா, சோனால், சதீந்தர் &a...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – எல். ராமசந்திரன் இணையின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் – “தி ஆர்டிஸ்ட்”

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – எல். ராமசந்திரன் இணையின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் – “தி ஆர்டிஸ்ட்”

சினிமா
சர்வதேச அளவில் புகழ்பெற்ற படைப்பாளியான புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பிரமிக்கத்தக்க வகையில் சர்வதேச தரத்திலான ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி, அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர். முந்தைய ஆண்டுகளில் “ஹூயூமன்”, “கலைஞன்” ஆகிய தலைப்புகளில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தனித்துவமாகக் காட்சிப்படுத்திய எல். ராமசந்திரன் இந்த ஆண்டும், தொடர்ந்து மூன்றாம் முறையாக அவரோடு இணைந்து, ஒரு படைப்பாளியை பின்புலமாகக் கொண்ட “தி ஆர்டிஸ்ட்” என்ற தலைப்பில் காட்சிகளை வடிவமைத்து, அதனை 2023-ம் ஆண்டுக்கான மாதந்திர நாட்காட்டியாய் வடிவமைத்திருக்கிறார். ஓவியர், சிற்பி, கிராபிடி ஆர்டிஸ்ட் என பல பரிமாணங்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை புகைப்படம் எடுத்து, அதனை வண்ணமயமான நாட்காட...
நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகும் ‘பிச்சைக்காரன்2’ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் பெற்றுள்ளது

நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகும் ‘பிச்சைக்காரன்2’ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் பெற்றுள்ளது

சினிமா
விஜய் ஆண்டணி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி வழங்கும் நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகும் 'பிச்சைக்காரன்2' படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் பெற்றுள்ளது நடிகராக தொடர்ச்சியான வெற்றிப் படங்கள் கொடுத்ததன் மூலம் நடிகர் விஜய் ஆண்டனி மிகப் பிரபலமான பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வலம் வருகிறார். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உட்பட அனைவரும் விஜய் ஆண்டனியை லாபம் தரக்கூடிய மற்றும் அனைத்து தரப்பு பார்வையாளர்களும் விரும்பக்கூடிய ஒரு நாயகன் என்பதை ஏற்றுக் கொள்வார்கள். அடுத்த வருடம் 2023-ல் அவர் ஒப்பந்தமாகியுள்ள  படங்கள் அனைத்தும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது. குறிப்பாக அவர் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் 'பிச்சைக்காரன் 2' படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. மேலும் 'பிச்சைக்...
அருள்நிதி- பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் ‘டிமாண்டி காலனி2’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது!

அருள்நிதி- பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் ‘டிமாண்டி காலனி2’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது!

சினிமா
ஞானமுத்து பட்டறை & ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மெட் வழங்கும் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி- பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் ‘டிமாண்டி காலனி2’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது! அஜய் ஞானமுத்து தயாரித்து இயக்கும் ‘டிமாண்டி காலனி2’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு ஒசூரில் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. 40%  படப்பிடிப்பு தற்போது முடிந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. அஜய் ஞானமுத்து ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் சாதனை படைத்தது.  ஹாரர் ஜானரில் இந்தத் திரைப்படம் புதிய பென்ச் மார்க்கை உருவாக்கி தமிழ் சினிமாவில் அதுவரை இருந்த வழக்கமான மற்றும் பழமையான விஷயங்களை உடைத்தது. திறமையான நடிப்பைக் கொடுத்திருந்த நடிகர் அருள்நிதிக்கு இன்னொரு மகுடமாக இந்தப் படம் அமைந்தது....
மஹா மூவிஸ் தயாரிப்பில் அனில் கட்ஸ் இயக்கத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிக்கும் ‘சபரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

மஹா மூவிஸ் தயாரிப்பில் அனில் கட்ஸ் இயக்கத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிக்கும் ‘சபரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

சினிமா
டோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது  தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். தற்போது ‘சபரி’ படத்திலும் இதற்கு முன்பு ஏற்றிடாத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மஹா மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தை மகேந்திரநாத் கொண்டலா தயாரிக்க அறிமுக இயக்குநர் அனில் கட்ஸ் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். மஹரிஷி கொண்டலா இந்தப் படத்தை வழங்குகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என உருவாகி வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக முடிந்திருக்கிறது. இந்த நிலையில் படக்குழு, படம் பற்றி பல விஷயங்களை பேசியுள்ளது. படத்தின் கதாநாயகி வரலக்‌ஷ்மி சரத்குமார் கூறுகையில், “எங்கள் ‘சபரி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மகேந்திரன் போன்ற தயாரிப்பாளர் எங்களு...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

சினிமா, செய்திகள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று 21.12.2022 சென்னையில் நடைபெற்றது. மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினர். துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எஸ். சந்திரபிரகாஷ் ஜெயின் நன்றியுரை ஆற்றினார். இவர்களோடு சங்கத்து செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவினில் வரவேற்புரை வழங்கிய செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் பேசியதாவது… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 25 வருடங்கள் இருக்கும் மூத்த தயாரிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் செய்தித்துறை அமைச்சர் திரு....
#லத்தி படத்தை போல் இன்னொரு படத்தில் நடிப்பேனா என்று தெரியவில்லை;விஜய்-ஐ வைத்து நிச்சயம் இயக்குவேன் – நடிகர் விஷால்

#லத்தி படத்தை போல் இன்னொரு படத்தில் நடிப்பேனா என்று தெரியவில்லை;விஜய்-ஐ வைத்து நிச்சயம் இயக்குவேன் – நடிகர் விஷால்

சினிமா
வருகிற 22ஆம் தேதி வெளியாகும் #லத்தி படத்தில் தன்னுடைய அனுபவம் குறித்து நடிகர் விஷால் கூறியதாவது  நான் ஏற்கனவே காவல்துறை உயரதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் அதுபோன்ற கேரக்டர் இருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பேன். ஆனால், இது ஒரு கான்ஸ்டபிள் கதாபாத்திரம். உயர் அதிகாரிகள் கட்டளையிடுவதை செய்வதுதான் கான்ஸ்டபிள்-ன் வேலை. கதை கூறும் போது எனக்கும் இது புதிதாக இருந்தது. அதேபோல் டைரக்டர் வினோத்குமார் என்னிடம் கதை சொல்லும் போது, படத்தில் 7வயது பையனுக்கு அப்பாவாக நடிக்கிறீர்கள் என்று தயங்கி தயங்கி கூறினார். அதில் எனக்கு பிரச்சனை இல்லை நீங்கள் கதையைக் கூறுங்கள் என்றேன். படத்தில் நடித்த சிறுவன் இரண்டாவது கதாநாயகன் மாதிரிதான். கடைசி 45 நிமிடங்கள் ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதிலும் பூர்த்தியாகாத கட்டிடத்திற்குள் நடக்கும் காட்சிகள். 45 நிமிடம் ஒரே இடத்தில் நடக்கும் க...