Tuesday, April 28

Author: admin

“அரியவன்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

“அரியவன்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

சினிமா
“அரியவன்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!! எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் "அரியவன்". மார்ச் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் கதாசிரியர் மாரிச்செல்வன்.சு பேசியதாவது… இப்படத்தில் வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. நான் ஒரு கதையில் எந்த கருத்தும் சொல்லக்கூடாது, அட்வைஸ் பண்ணக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதியது தான் இந்தக்கதை, ஆனால் இந்த...
6000 மாணவர்கள் முன்னிலையில், கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி” படத்தின், முதல் சிங்கிள் பாடல் !

6000 மாணவர்கள் முன்னிலையில், கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி” படத்தின், முதல் சிங்கிள் பாடல் !

சினிமா
ரசிகர்களிடம் வரவேற்பைக் குவிக்கும், “பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் “மதயானைக்கூட்டம்” !! Lights On Media வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி” இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மதயானைக்கூட்டம் பாடல் வித்தியாசமான முறையில் 6000 மாணவர்கள் மத்தியில், மாணவர்கள் கையால் வெளியிடப்பட்டது. Kpr institution coimbatore Fessta '23 கல்லூரி விழாவில், 6000 மாணவர்கள் மத்தியில், மாணவர்களின் உற்சாக கரவொலிகளுக்கு இடையில், மாணவர்கள் கைகளால் பருந்தாகுது ஊர் குருவி படத்தின் முதல் லிரிகல் பாடலான ‘மதயானைக்கூட்டம்’ பாடல் வெளியிடப்பட்டது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மதயானை...
கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையவழி தமிழ் வகுப்புகள்

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையவழி தமிழ் வகுப்புகள்

இலக்கியம், கல்வி
கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் 10 ஆண்டுகளாக மொழிக்கணிப்பீடு மற்றும் மொழி இலக்கியத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி வருகிறது. இந்த அறக்கட்டளையானது, புதிய மொழிக் கருவிகள் மற்றும் செயலிகளை வடிவமைப்பதோடு, பயில் வகுப்புகள் மூலம் இணைய வழியில் தமிழ் மொழியைத் தனித்துவமான அணுகுமுறையுடன் கற்பித்து வருகிறது. இவ்வகுப்புகளில், உலகம் முழுவதுமுள்ள தமிழார்வம் கொண்ட மாணவர்கள், வயதுவரம்பில்லாமல் ஒன்றாகச் சேர்ந்து தமிழ் கற்று வருகின்றனர். இணைய வழியில் நேரடி அமர்வுகளின் மூலம் கற்பிக்கப்பட்ட இப்பயில் வகுப்புகள், இப்போது பதிவு செய்யப்பட்ட காணொளிகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் உலகில் எங்கிருந்தும், எந்நேரத்திலும், எவ்விடத்திலும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தமிழைக் கற்கவியலும். முதற்கட்டமாக இந்த உலகத் தாய்மொழி நாளில், இரண்டு பயிற்சி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. - தமிழில் எழுத/ பட...
மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் படம் “சரக்கு”! படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை பலாப்பழம் வெட்டி, படக்குழுவினர்களோடு கொண்டாடினார்!

மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் படம் “சரக்கு”! படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை பலாப்பழம் வெட்டி, படக்குழுவினர்களோடு கொண்டாடினார்!

சினிமா
'பலாப்பழம்' வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய மன்சூர் அலிகான்! தன் பிறந்தநாளை கண்ட கண்ட ரசாயனங்கள், நச்சு வண்ணங்கள் கலந்த கேக்கை வெட்டாமல், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி, விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த உண்மையான 'தமிழ் தேசிய மாடல்' மன்சூர் அலிகான்! மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் படம் "சரக்கு"! படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை பலாப்பழம் வெட்டி, படக்குழுவினர்களோடு கொண்டாடினார்! 'சரக்கு' படத்தில் மன்சூர் அலிகான் ஜோடியாக வலினா நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், சேசு, கென்ஸ்லி, யோகி பாலா மற்றும் எழுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்! மன்சூர் அலிகானின் "சரக்கு"! இயக்கம் ஜே.ஜெயக்குமார், ஒளிப்பதிவு அருள் வின்சென்ட், இசை சித்தார்த் விபின், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்!...
வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை & சேவா பாரதி இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில்  ஏழை எளிய மக்களுக்காக  “நடமாடும் மருத்துவ முகாம் ஊர்தி” சேவையை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை & சேவா பாரதி இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்காக “நடமாடும் மருத்துவ முகாம் ஊர்தி” சேவையை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

செய்திகள்
வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை & சேவா பாரதி இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ வசதி இல்லாத, மிகவும் பின்தங்கிய கிராமப்புற, ஏழை எளிய மக்களுக்காக இன்று "நடமாடும் மருத்துவ முகாம் ஊர்தி" சேவையை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் தலைமை வகித்தார், தென் பாரத ஆர்.எஸ்.எஸ் மக்கள் தொடர்பு அமைப்பாளர் திரு பிரகாஷ் அவர்கள் சிறப்புரையாற்றினார், கனரா வங்கி இயக்குனர் திருமதி நளினி பத்மநாபன், சேவா பாரதி மாநில தலைவர் திரு ரபு மனோகர் உள்ளிட்டோர் வரவேற்புரையாற்றினர். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்....
டிரம்ஸ் சிவமணி இசையில், தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் வழங்கும், “புரடக்சன் நம்பர் 1”

டிரம்ஸ் சிவமணி இசையில், தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் வழங்கும், “புரடக்சன் நம்பர் 1”

Uncategorized
டிரம்ஸ் சிவமணி இசையில், தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் வழங்கும், “புரடக்சன் நம்பர் 1”புதுமையான ரொமாண்டிக் க்ரைம் திரில்லர்  ! தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் இயக்கும்,  முரளி ராம், தேவிகா கிருஷ்ணன் நடிப்பில், டிரம்ஸ் சிவமணி இசையில்,  உருவாகிறது புதுமையான ரொமாண்டிக் க்ரைம் திரில்லர் திரைப்படம்.   இப்படத்தின்  படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள,  எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் புதுமையான திரைக்கதையில் மாறுப்பட்ட ரொமாண்டிக் க்ரைம் திரில்லராக  இப்படத்தை உருவாக்குகிறார்.  உலகப்புகழ்பெற்ற இசை வித்தகர் டிரம்ஸ் சிவமணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிரமாத்து பின்னணியில், மாறுபட்ட ரொமாண்டிக் க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் புதிய அனுபவமாக இருக்கும். இப்படத்தில் நாயகனாக தொப்ப...
இயக்குனர் மோகன். G க்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து

இயக்குனர் மோகன். G க்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து

சினிமா
" பகாசூரன் " பட இயக்குனர் மோகன். G க்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கிய " பகாசூரன் " படம் கடந்த வெள்ளியன்று ( பிப்ரவரி 17) திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாராக்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சாம். CS இசையமைத்திருந்தார். இந்த படம் நேற்று தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இயக்குனர்கள் சங்க தலைவர் R. K. செல்வமணி மற்றும் செயலாளர் R.V. உதயகுமார், பொருளாளர் பேரரசு உட்பட சங்க உறுப்பினர்கள் அனைவரும் பார்த்து ரசித்தனர். படத்தின் இயக்குனர் மோகன். G க்கு ச...
வேகமாக வளர்ந்து வரும் L.G.M

வேகமாக வளர்ந்து வரும் L.G.M

சினிமா
விரைவான படப்பிடிப்பில் 'எல். ஜி. எம்' தமிழ் திரைப்படமான 'எல்.ஜி. எம்'மின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி வேகமாக நடைபெற்று வருவதாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி திருமதி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான டோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் 'எல். ஜி. எம்' (லெட்ஸ் கெட் மேரீட்) எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட வேகமாக நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி அன்று...
Ant-Man and the Wasp: Quantumania Review

Ant-Man and the Wasp: Quantumania Review

சினிமா
Ant-Man and the Wasp: Quantumania Review நடிகர்கள் மற்றும் குழுவினர் -பால் ராட், எவாஞ்சலின் லில்லி, ஜானதன் மேஜர்ஸ் Director: பீட்டன் ரீட் நடிகர்கள்: பால் ராட், எவாஞ்சலின் லில்லி, ஜானதன் மேஜர்ஸ் இசை: கிறிஸ்டோப் பெக் இயக்கம்: பீட்டன் ரீட். மகள் கேஸியினால் ஆன்ட் மேன், வாஸ்ப் உள்பட முழு குடும்பமும் குவாண்டம் ரியலத்துக்குள் மாட்டிக்கொள்கிறது . குவாண்டம் ரியலத்துக்குள் சாம்ராஜயத்தை மிகப்பெரிய அளவில் காங் உருவாக்கி ஆட்சி செய்து வருகிறார். ஆன்ட் மேன் மகள் மூலம் காங் அந்த குடும்பத்தை இந்த உலககிற்க்கு கொண்டு வருகிறார். அங்கே மகளை வழியாகவே ஆன்ட் மேன் மூலமாக தனக்கு வேண்டிய செயல்களை எடுத்துக் கொண்டு அங்கே இருந்து வெளியேற திட்டமிடுகிறார் காங். காங்கின் நிபந்தனையை ஏற்று அவருக்கு உதவியாக உலகங்களை அழிப்பதருக்கு ஆன்ட் மேன் உடன்பட்டாரா ? அதற்க்கு மாறாக தன் மகளையும் உலககினையும் காப்பாற்றும் செயலில் இற...
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது

சினிமா
சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல ஆண்டுகளாக தரமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிடுவதில் புகழ்பெற்றது மற்றும் இது தமிழ் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஓடிடி ப்ளாக்பஸ்டர் வெற்றியான ‘அன்பறிவு’ படத்திற்குப் பிறகு சத்யஜோதி ஃபிலிம்ஸ், ‘யங் சென்சேஷன்’ ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் மீண்டும் ‘வீரன்’ படத்தில் இணைந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பிறந்தநாளான இன்று இந்தப் படத்தில் அவரது அசத்தலான தோற்றத்துடன் வெளியாகி இருக்கும் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபேண்டசி மற்றும் வேக்கியான எலிமென்ட்ஸ் கலந்த அம்சத்துடன் ...