Tuesday, April 28

Ant-Man and the Wasp: Quantumania Review

Ant-Man and the Wasp: Quantumania Review

நடிகர்கள் மற்றும் குழுவினர் -பால் ராட், எவாஞ்சலின் லில்லி, ஜானதன் மேஜர்ஸ் Director: பீட்டன் ரீட் நடிகர்கள்: பால் ராட், எவாஞ்சலின் லில்லி, ஜானதன் மேஜர்ஸ் இசை: கிறிஸ்டோப் பெக் இயக்கம்: பீட்டன் ரீட்.


மகள் கேஸியினால் ஆன்ட் மேன், வாஸ்ப் உள்பட முழு குடும்பமும் குவாண்டம் ரியலத்துக்குள் மாட்டிக்கொள்கிறது . குவாண்டம் ரியலத்துக்குள் சாம்ராஜயத்தை மிகப்பெரிய அளவில் காங் உருவாக்கி ஆட்சி செய்து வருகிறார். ஆன்ட் மேன் மகள் மூலம் காங் அந்த குடும்பத்தை இந்த உலககிற்க்கு கொண்டு வருகிறார். அங்கே மகளை வழியாகவே ஆன்ட் மேன் மூலமாக தனக்கு வேண்டிய செயல்களை எடுத்துக் கொண்டு அங்கே இருந்து வெளியேற திட்டமிடுகிறார் காங். காங்கின் நிபந்தனையை ஏற்று அவருக்கு உதவியாக உலகங்களை அழிப்பதருக்கு ஆன்ட் மேன் உடன்பட்டாரா ? அதற்க்கு மாறாக தன் மகளையும் உலககினையும் காப்பாற்றும் செயலில் இறங்கினாரா? என்பது தான் ஆன்ட் மேன் குவாண்டமானியா படத்தின் கதை.ஆகும்

இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள் எல்லோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப நன்கு நடித்துள்ளார்கள், ஆன்ட் மேன் – பால் ரட், கேஸி- கேத்ரின் நியூட்டன், வாஸ்ப் – எவாஞ்சலின் லில்லி, ஜானட் – மிச்செல்லி பிஃபர், காங் – ஜானதன் மேஜர்ஸ் என அனைவருமே படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளார்கள் குறிப்பாக பால் ரட் ,குவான்டம் உலகில் சாகசப் பயணம்செய்யும் போதும் . மகளை மீட்க போராடும் பாசஉணர்வுகளிலும் தன் நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்

காங்காக வரும் ஜொனதன் மேஜர்ஸ்.தன் நடிப்பின் மூலம் ரசிகர்களின் தனி கவனத்தை பெறுகிறார் குவான்டம் அதிசய அற்புத உலகத்துக்குள் நடக்கும் விஷயங்கள் , அந்த உலகில் நிறைந்து உள்ள விதவிதமான உயிரினங்களின் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) 31வது படமாகவும், Phase 5-ன் முதல் படமாகவும் வெளியாகியிருக்கும் `Ant-Man and the Wasp: Quantumania’ இளம் வயதினரையும் குழந்தைகளையும்  வெகுவாக கவரும்.

 

Spread the love