தக்ஸ் – விமர்சனம்
சிறைகளத்தை கதைக்களமாக கொண்ட கதை
2005ஆம் ஆண்டில் நாகர்கோவிலின் சிறைச்சாலையில் பணத்தை கொள்ளை அடித்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக ஹிருது ஹாரூன் சிறையில் அடைக்கப்படுகிறார். தன்னுடைய காதலி அனஸ்வரா ராஜனுக்காக சிறையில் இருந்து தப்பிக்க அவர் முடிவு செய்கிறார், அதே சிறையில் உள்ள பிற ஆயுள் தண்டனை கைதிகளையும் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொண்டு சிறையிலிருந்து தப்பிக்க பிளான் போடுகிறார் ,அவரது திட்டம் கை கூடியதா? சிறையிலிருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதையாகும்.
கதையின் நாயகன் ஹிருது ஹாரூன் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப சிறந்த நடிப்பை சீரிய முறையில் வழங்கி ரசிகர்களின் பாராட்டைப் பெறுகிறார்.அடுத்த மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹாவும் தன் பங்குக்கு குறைவு இல்லாமல் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார், மற்றும் அனஸ்வரா ராஜன், சிறை அதிகாரியாக வரும்...









