‘கஸ்டடி’ படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ராஜூ (எ) ராசு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
முன்னணி இயக்குநரான வெங்கட்பிரபு இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகி இருக்கும் 'கஸ்டடி' படத்தில் நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான க்ளிம்ப்ஸ் பலருக்கும் பிடித்திருந்தது மற்றும் கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திர போஸ்டர் படம் குறித்தான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. திறமையான நடிகரான அரவிந்த் சுவாமியின் கேரக்டர் போஸ்டரை இன்று தயாரிப்புத் தரப்பு வெளியிட்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்படத்தில் ராஜு என்ற ராசு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிகவும் வலுவான கதாபாத்திரம் மற்றும் பாரில் கைவிலங்குடன் இந்த போஸ்டரில் அரவிந்த் சுவாமி இருக்கிறார். இந்த அச்சுறுத்தும் தோற்றம் இந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் மீதான எதிர்பார்...









