Tuesday, April 28

வெள்ளிமலை: திரை விமர்சனம்

சித்தமருத்துவரான அகத்தீசன் (சூப்பர் குட் ஆர்.சுப்ரமணியன்) மலை கிராமமான வெள்ளிமலையில் தன் மகளுடன் வசித்து வருகிறார்.ஒரு சூழ்நிலையில் ஊர்மக்கள் சுப்பிரமணி குடும்பத்திடம் வைத்தியம் பார்ப்பதை நிறுத்தி விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கிராமத்துக்குள் ஒருவித தோல் அரிப்பு நோய் வேகமாக பரவுகிறது. பலர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்க்கு அந்த நோய் தீவிரம் அடைகிறது, அதில் ஒருவருக்கு சுப்பிரமணி வைத்தியம் பார்த்து குணமாக்கியதால் மக்களின் நம்பிக்கையை அவர் பெறுகிறார். இதன் பின் ஊர்மக்கள் சுப்பிரமணியிடம் வைத்தியம் பார்க்க வரும்போது தன்னிடம் அந்த வைத்தியத்திற்கான மருந்து இல்லை ஆனால் அது மலை உச்சியில் இருக்கிறது என்று சொல்லி நோயைத் தீர்க்கும் மூலிகைக்காக அவர் கிராமத்தினருடன் மலையேறுகிறார், அதன் பின் சுப்பிரமணியால் அந்த மூலிகையை கண்டுபிடிக்க முடிந்ததா? பாதிக்கப்பட்ட மக்களை அவர் காப்பாற்றினாரா ? என்பதுபடத்தின் மீதி கதை

சித்த மருத்துவத்தின் மகத்துவத்தினை ஒரு குடும்பக்கதையுடன் இணைத்து பிரிச்சார நெடி இல்லாது படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஓம்.விஜய்.தேனி மாவட்டத்தின் எழில்மிகு மலைகாட்சிகளை மணிபெருமாளின் ஒளிப்பதிவு சிறப்பாக பதிவு செய்து, கதைக்கான பின்புலத்துடன் பயணிக்கிறது ,என்.ஆர்.ரகுநந்தனின் இசையும் கதையின் நகர்வுக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது

கதையின் மைய கதாபாத்திரமாக ,அகத்தீசனாக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்ரமணியன் நடிப்பு மிகவும் பாராட்டும் வகையில் உள்ளது மேலும் நாயகி அஞ்சு கிருஷ்ணாவின் எளிமையான நடிப்பு கதாபாத்திரத் துக்கு வலு சேர்த்துள்ளது மற்றும் கிரிஜா, விஜயகுமார், சார்லஸ், பாண்டியன், கவிராஜ் உள்ளிட்ட பலரும் த ங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப நன்கு நடித்துள்ளார்கள்

பண்டைய மருத்துவத்தின் மகத்துவத்தை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்து சொல்லும் படம் .

Spread the love