Wednesday, April 29

Author: admin

‘அயோத்தி’ பட இயக்குனரை பாராட்டிய மன்சூர் அலிகானின் “சரக்கு” படக் குழுவினர்!

‘அயோத்தி’ பட இயக்குனரை பாராட்டிய மன்சூர் அலிகானின் “சரக்கு” படக் குழுவினர்!

சினிமா
மன்சூர் அலிகான் தயாரித்து, கதாநாயகனாக நடித்துவரும் படம் "சரக்கு". நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில்... சரக்கு படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்ததால், சற்று தாமதமாக அயோத்தி படத்தை குடும்பத்தோடு பார்த்தேன். உலகமே கொண்டாடப் படவேண்டிய படம் அயோத்தி! திறமை வாய்ந்த நடிகரான சசிகுமாரை வைத்து, மூர்த்தி இயக்கியிருந்தார். தமிழ் நாட்டினர், தமிழர்கள் எவ்வளவு மனிதநேயம் மிக்கவர்கள் என்பதை நெஞ்சை தொடும் வகையில், இயக்குனர் மூர்த்தி எடுத்திருந்தார். அயோத்தி இயக்குனர் மூர்த்தியை, எங்களது சரக்கு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து, நடிகர் நடிகைகள், 'சரக்கு' பட இயக்குனர் ஜெயக்குமார் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பாராட்டினோம்! தொடர்ந்து மக்கள் கொண்டாடும் வகையில், நல்ல கருத்தாழம் மிக்க படங்கள் எடுப்பதற்கு, படக் குழுவினரோடு வாழ்த்தினேன் என்றார் மன்சூர் அலிகான்!...
பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் உலகளாவிய துப்பறியும் த்ரில்லரான ‘சிட்டாடல்’, எனும் இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது.

பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் உலகளாவிய துப்பறியும் த்ரில்லரான ‘சிட்டாடல்’, எனும் இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது.

சினிமா
பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் உலகளாவிய துப்பறியும் த்ரில்லரான ‘சிட்டாடல்’, எனும் இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதும் இந்த தொடரை விளம்பரப்படுத்துவதற்கான சுற்றுப்பயணத்தை படக்குழுவினருடன் நடிகர் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோர் இணைந்து தொடங்கியிருக்கின்றனர். ரூஸோ பிரதர்ஸின் AGBO மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் ஆகியோரால் சிட்டாடல் இணையத் தொடர் உருவாக்கப்பட்டது, ஆறு அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இந்த தொடரின் முதலிரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந...
ஆனந்த விகடன் விருதுகள் விழாவில் சிறந்த வசனத்திற்கான  விருதை வென்ற  தமிழரசன் பச்சமுத்து,”லேபிள்” வெப் சீரிஸின்  படக்குழுவினருடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

ஆனந்த விகடன் விருதுகள் விழாவில் சிறந்த வசனத்திற்கான விருதை வென்ற தமிழரசன் பச்சமுத்து,”லேபிள்” வெப் சீரிஸின் படக்குழுவினருடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

சினிமா
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் இப்படம் கொண்டாடப்பட்டது. இப்படத்திற்காக தமிழரசன் பச்சமுத்து எழுதிய வசனங்கள் படத்தின் வெற்றிக்கு பெரும் பாலமாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆனந்த விகடன் விருதுகள் விழாவில் சிறந்த வசனத்திற்கான ஆனந்த விகடன் விருதை வென்றார் தமிழரசன் பச்சமுத்து. இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் "லேபிள்" வெப் சீரிஸின் படப்பிடிப்பில் படக்குழுவனருடன் தனது மகிழ்ச்சியை தமிழரசன் பச்சமுத்து பகிர்ந்து கொண்டார்....
இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ள புதிய ஸ்டூடியோ, ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ !!

இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ள புதிய ஸ்டூடியோ, ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ !!

சினிமா, செய்திகள்
நடிகர் சூர்யா துவங்கி வைத்த, இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரியின் புதிய ஸ்டூடியோ, 'குட்லக் ஸ்டூடியோஸ்'  திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் திறம்பட செய்யும் புதிய குட்லக் ஸ்டூடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ளனர். தமிழின் பெரும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொண்ட இவ்விழாவில் நடிகர் சூர்யா, தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு எம்.அப்பாவு எம்.எல் .ஏ தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் mla, மாண்புமிகு பி.கே.சேகர் பாபு mla,மாண்புமிகு டி.மனோ தங்கராஜ் mla, டைரக்டர் ஹரி தந்தை கோபாலகிருஷ்ணன், ஹரியின் மாமனார் நடிகர் விஜயகுமார், ரிய ஹரி, ஶ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். புதிய ஸ்டூடியோவை தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு எம். அப்பாவு எம்.எல்.ஏ தலைமையில் நடிகர் சூர்யா ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்...
இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது

இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது

சினிமா
இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்குகிறது. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல நடிகர்கள் பலர் நடிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு...
கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் இன்று பார்வையிட்டனர்.

கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் இன்று பார்வையிட்டனர்.

செய்திகள்
கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர் கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தை தமிழ் மொழிக்கு இலக்கிய சேவையை இடையறாது செய்து வரும் நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, திருமதி ஜோதிகா சூர்யா, அவர்களின் வாரிசுகளான தேவ் மற்றும் தியா ஆகியோர்களும் பார்வையிட்டனர். இவர்களுடன் மதுரை மக்களவைத் தொகுதி ...
“பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு நடிகர் சூரி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

“பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு நடிகர் சூரி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சினிமா
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்”. தற்கால பள்ளிக்குழந்தைகளின் விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணரச்சிகரமான டிராமாவாக “பாபா பிளாக்‌ ஷீப்” உருவாகிறது. அயாஸ், நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, RJ விக்னேஷ்காந்த் சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'விருமாண்டி' அபிராமி நடிக்கின்றார். இப்பட குழுவினரை சமீபத்தில் பார்த்த நடிகர் சூரி “பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். “பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினரும் நடிகர் சூரிக்கு 'விடுதலை Part1' வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர். “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தின்...
விடுதலை திரைப்பட விமர்சனம்

விடுதலை திரைப்பட விமர்சனம்

சினிமா
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவனை அடிப்படையாக கொண்டு விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ராட் குமார் தயாரித்து உள்ள இப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார். வெளிநாட்டைச் சேர்ந்த சுரங்க நிறுவனத்துக்கு அருமபுரி மலையின் கனிம வளத்தை அழித்து தொழிற்சாலை அமைக்க அரசு ஒப்புதல் அளிக்கிறது. ஆனால் காடுகளில் உள்ள வளங்களை எடுக்க ‘மக்கள் படை’ என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது.அவர்களை பிடிக்க ’ஆபரேஷன் கோஸ்ட்’ என்ற திட்டம் கையில் எடுக்கப்படுகிறது. இதற்கிடையில் அந்த ஊருக்கு கடைநிலை காவலராக சூரி பணியில் சேர்கிறார் . அங்கு சூரிக்கும் மலைவாழ் பெண்மணியான பவானி ஸ்ரீ க்கும் காதல் ஏற்படுகிறது . அவர் அந்த ஊர் மக்களுக்கு உதவி செய்வதால் உயரதிகாரியாக உள்ள சேத்தனுடன் மோதல் ஏற்படுகிறது. இதன் பின் ராஜீவ் மேனனின் உத்தரவின் படி விசாரணை நடத்த டி...
தசரா” திரைப்பட விமர்சனம்

தசரா” திரைப்பட விமர்சனம்

சினிமா
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் ,கதாநாயகனாக நானி, கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி, வெளியாகியுள்ள திரைப்படம்தான் தசரா. பான் இந்திய திரைப்படமான இத்திரைப்படத்தின் கதையானது , நிலக்கரி சுரங்கம் சூழ்ந்த, வீர்லபள்ளி என்ற கிராமத்தில் தரணி(நானி)யும் சூரியும் (தீக்ஷித் ஷெட்டி) நண்பர்களாக உள்ளார்கள் ஆனால் இருவரும் அதே கிராமத்தில் இருக்கும் வெண்ணிலாவை (கீர்த்தி சுரேஷ்) காதலிக்கிறார்கள். வெண்ணிலாவின் மீது சூரிக்கு இருக்கும் காதலை அறியும் தரணி தன்னுடைய காதலை தியாகம் செய்கிறார்.சூரிக்கும் வெண்ணிலாவிற்கும் திருமணம் நடந்த அந்த இரவே, சூரி மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். சூரியை கொன்றது யார்? தனது உயிர் நண்பனின் இழப்புக்கு காரணமாக இருந்தவர்களை தரணி பழி வாங்கினாரா? அதன் பின் வெண்ணிலா என்ன ஆனார் ? போன்ற பல கேள்விகளுக்கு விடை தரும் விதமாக படத்தின் மீதி கதை செல்கிறது. இந்த படத்தில் தரணியாக நடி...
படப்பிடிப்பின் போதே அற்புதங்கள் நிகழ்ந்தன:’கன்னி’ பட இயக்குநர்!

படப்பிடிப்பின் போதே அற்புதங்கள் நிகழ்ந்தன:’கன்னி’ பட இயக்குநர்!

சினிமா
"கன்னி" படத்தில் மண்ணின் பெருமை, தொன்மை, பாரம்பரியம் ஆன்மீகம். அமானுஷ்யம், மர்மம், திகில் இயக்குனர் பெருமிதம். யாரும் செல்லத் தயங்கும் இடங்களில், யாரும் படப்பிடிப்பு நடத்தத் திணறும் இடங்களில் தேடித் தேடி, படப்பிடிப்பு நடத்தி ஒரு படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படம் தான் 'கன்னி'. இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாயோன் சிவா தொரப்பாடி. சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம். செல்வராஜ் தயாரித்துள்ளார்.அஷ்வினி சந்திரசேகர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். மணிமாறன், தாரா கிரீஸ் ,அறிமுகம் -ராம் பரதன் மற்றும் ஏராளமான புது முகங்கள், மண்ணின் மைந்தர்கள் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ராஜ்குமார் , இசை செபாஸ்டியன் சதீஷ் , பாடல்கள் உமாதேவி ,கலை சக்திவேல் மோகன், சண்டைப் பயிற்சி ரமேஷ் பாபு,எடிட்டிங்- சாம் RDX. திரைப்பட முயற்சிகளில் ஒரு நல்ல படைப்புக்கான கதை எப்போது மலரும் என்பதை அற...