‘சிட்டாடல்’ இணையத் தொடரின் பிரத்யேக காட்சியைக் காண திரண்ட பாலிவுட் பிரபலங்கள்
'சிட்டாடல்' இணையத் தொடரை பாராட்டிய பாலிவுட் படைப்பாளிகள்
உலகளவிலான துப்பறியும் இணைய தொடரான 'சிட்டாடல்' இணையத் தொடரின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரத்யேக காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதன் போது ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் திரண்டனர்.
ரூஸோ பிரதர்ஸின் AGBO மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் துப்பறியும் திரில்லர் ஜானரிலான இணையத் தொடர் 'சிட்டாடல்'. இந்த இணையத் தொடரின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரத்யேக காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதன் போது இந்த இணைய தொடரில் நடித்த நடிகர் ரிச்சர்ட் மேடன், நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ப்ரைம் வீடியோவின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் வணிகப்பிரிவு தலைவரான கௌரவ் காந்தி, பிரைம் வீடியோவின் இந்திய நாட்டிற்கான இயக்குநர் சுஷாந்த் ஸ்ரீராம் ஆகியோருடன் இந்திய திரைப்படத்துறை, தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக...









