Monday, April 27

விடுதலை திரைப்பட விமர்சனம்

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவனை அடிப்படையாக கொண்டு விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ராட் குமார் தயாரித்து உள்ள இப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார்.

வெளிநாட்டைச் சேர்ந்த சுரங்க நிறுவனத்துக்கு அருமபுரி மலையின் கனிம வளத்தை அழித்து தொழிற்சாலை அமைக்க அரசு ஒப்புதல் அளிக்கிறது. ஆனால் காடுகளில் உள்ள வளங்களை எடுக்க ‘மக்கள் படை’ என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது.அவர்களை பிடிக்க ’ஆபரேஷன் கோஸ்ட்’ என்ற திட்டம் கையில் எடுக்கப்படுகிறது. இதற்கிடையில் அந்த ஊருக்கு கடைநிலை காவலராக சூரி பணியில் சேர்கிறார் . அங்கு சூரிக்கும் மலைவாழ் பெண்மணியான பவானி ஸ்ரீ க்கும் காதல் ஏற்படுகிறது . அவர் அந்த ஊர் மக்களுக்கு உதவி செய்வதால் உயரதிகாரியாக உள்ள சேத்தனுடன் மோதல் ஏற்படுகிறது. இதன் பின் ராஜீவ் மேனனின் உத்தரவின் படி விசாரணை நடத்த டிஎஸ்பி கௌதம் மேனன் விசாரணை நடத்த அந்த கிராமத்திற்கு வருகிறார். அவரின் விசாரணையின் போது நீண்ட நாள்களாக தேடப்பட்டு வரும் தலைவர் விஜய் சேதுபதி பற்றி அறியப்படுகிறது .இறுதியில் அங்கு சூரி என்ன செய்கிறார், மக்கள் போராளியான விஜய் சேதுபதியின் நிலைமை என்ன ?.என்பது தான் மீதிக்கதை.

குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் சூரி நேர்மை தவறாத கான்ஸ்டபிளாக நடித்திருக்கிறார். இதுவரை நடித்த படங்களிலிருந்து மாறுபட்டு ,யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பை இயக்குனர் துணையுடன் நன்கு பயன்படுத்தியுள்ளார் , மக்கள் படை தலைவன் வாத்தியாராக விஜய் சேதுபதியும் தனது பண்பட்ட நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

உயர் அதிகாரிக்கான உருவ பொருத்துடன் ராஜீவ் மேனனும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள கவுதம் மேனனும் தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ள கதாபாத்திரங்களுடன் ஒன்றி நடித்துள்ளார்கள் பழங்குடி பெண்ணாக வரும் பவானி கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப இயல்பாக நடித்துள்ளார்.

சமூகத்துடன் இணைந்த வாழ்வியலில் மனிதர்கள், சார்ந்துள்ள பிரச்சனைகள் அதை எதிர்த்து அவர்கள் எழுப்ப வேண்டிய உரிமைக்குரல்கள், இவற்றை தனது படங்களில் தவறாது பதிவிட்டு வரும், இயக்குனர் வெற் றிமாறன் இந்த முறையும் தனது கலைப்படைப்பில் கருத்துச்சிதறல்களை வீசி, ரசிகர்ளின் இதயங்களில் இடம்பிடித்துள்ளார்.

முதன்முறையாக வெற்றிமாறனுடன் இளையராஜா கூட்டணி என்றவுடன் ரசிகர்களுக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பில் முழு நிறைவை படம் பார்த்த ரசிகர்கள் கண்டார்கள், படத்தின் பின்னணி இசையால் காட்சி அமைப்புகள் மேலும் உயிரோட்டம் கொண்டன.

இயற்கையுடன் இயைந்த மலைகள்,அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வியலை கதையோடு பயணித்து கலைநயத்தோடு பதிவு செய்துள்ளது வேல்ராஜின் ஒளிப்பதிவு.

முழுமையாக விடுதலை படத்தை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய எதிர்பார்ப்புகள் இன்னமும் அதிகரித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை .

Spread the love