டெஸ்ட் -திரை விமர்சனம்
சித்தார்த் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இருக்கிறார், சமீப காலமா நடக்கக்கூடிய கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அளவில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தாமல் உள்ள அவர் ,சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடக்கிற போட்டியில் தன்னோட விளையாட்டு திறமையை நிரூபிக்க கூடிய சூழ்நிலையில் இருக்காரு, மற்றொரு புறத்தில் விஞ்ஞானியான மாதவன், மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கிற தன்னுடைய இலட்சித்துக்காக நிறைய கடன் வாங்கி இருக்காரு, அவரோட மனைவி நயன்தாரா குழந்தை இன்மையால மனவேதனையில இருக்காங்க, அவுங்களோட கருத்தரித்தல் சிகிச்சைக்கு நிறைய பணமும் தேவைப்படுது, இப்படிப்பட்ட மூன்று மனிதர்களுடைய வாழ்வியலும், வாழ்வியல் சூழலும் வேறு திசையில் பயணித்தாலும் இறுதியில் ஒரே இடத்தில் ஒன்றிணையுது, சித்தார்த் தனது லட்சியத்தில் வெற்றி அடைந்தாரா? மாதவன் தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளிவந்து தன்னுடைய கண்டுபிடிப்புக்காக அங்கீகாரம் பெற்றாரா ? நயன்தாராவின் ஆசை கனவு பூர்த்தியானதா? என்பதே டெஸ்ட் படத்தின் மீதி கதை.
படத்தில் கிரிக்கெட் வீரராக சித்தார்த் நடிச்சு இருக்காரு, கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியினையும் தோற்றத்தோடையும் இவர் இருக்கிறது, அவரடோ கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிற வகையில இருக்கு . எடுத்துக்கிட்ட லட்சியத்தில உறுதியாக நின்னு, அதை நிறைவேத்திக்க துடிக்கிற விஞ்ஞானி கதாபாத்திரத்தில மாதவன் நல்ல நடிச்சு இருக்காரு , கதையின் நாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா ,குழந்தையோட மேல அன்பு வச்சு இருக்கற, நிறைஞ்ச தாய்மை பாசத்தைது காட்டுற கதாபாத்திரத்தில தன்னோட நேர்த்தியான நடிப்பை நல்லா வெளிப்படுத்தி இருக்காங்க .குழந்தையோட தாயாக மீரா ஜாஸ்மின் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏத்த வகையில இயல்பான நடிப்பினை கொடுத்து சின்ன இடைவெளிக்கு பிறகு ரசிகர்களோட மனதில இடம் பிடிக்கிறாங்க , இவங்க மட்டுமில்லாம ஆடுகளம் முருகதாஸ் , ஷாம் ,காளி வெங்கட் போன்றங்களும் அவுங்களோட கதாபாத்திரங்களில குறைவில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க.
விராஜ் சிங் கோஹிலின் ஒளிப்பதிவும் , பி எஸ் சுரேஷின் படத்தொகுப்பும் , கிரிக்கெட் விளையாட்டு காட்சிகள் சிறப்பா வருவத்துக்கு பெரிய அளவில உறுதுணையாக அமைஞ்சு இருக்கு, சக்தி ஸ்ரீ கோபாலனின் இசையில பாடல்கள் பெரிதாக மனதில் தாக்கங்களை ஏற்படுத்தலேன்னாலும் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கு .
கனவுகள் ,லட்சியங்கள், ஆசைகள் இந்த மூன்றையும் அடையத் துடிக்கிற மனிதர்களின் உணர்வுகள், உணர்ச்சி போராட்டங்கள் இதையெல்லாம் மையமாக வைச்சு கதைக்களத்தை அமைச்சு ,ஸ்போர்ட்ஸ் பேக்ரவுண்டில படத்தை இயக்கி இருக்காரு இயக்குனர் சசிகாந்த்.
ஸ்போர்ட்ஸ் பேக்ரவுண்டில் நிறைய படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், அதில் சில சொல்லப்படாத விஷயங்களையும் வெளிப்படுத்தி கதை பயணிச்சாலும், இன்னமும் பல லாஜிக் மீறல்களையும் தவிர்த்து இருந்திருந்தா, இந்த டெஸ்ட் , தி பெஸ்ட் அப்படின்னு பேரு எடுத்திருக்கும்.
