சில படத்தோட கதைகளை பாக்குறப்ப யாருக்கோ எங்கேயோ நடக்கிற ஃபீலிங்ன்னு அதை ஒரு கதையா தான் நாம பார்ப்போம், ஆனால் சில படத்தோட கதைகளை பார்க்கிறப்ப அட, இது நம்ம கதையா இருக்கே, அட, நம்ம வீட்டு கதையா இருக்கே, நமக்கு தெரிஞ்சவங்களோட கதையா இருக்கே அப்படின்னு நினைக்க தோணும் இதுல இரண்டாவது வகையான கதைதான் இந்த EMI (மாத தவணை) படத்தோட கதை.
படத்தின் கதையோட நாயகன் சதாசிவம் சின்னராஜ், நாயகி சாய் தன்யா இரண்டு பேரும் காதல் திருமணம் பண்ணிக்கிட்டவங்க ,திருமணத்துக்கு அப்புறம் அவங்க வாழ்க்கை சந்தோஷமா தான் போயிட்டு இருக்கு, அப்படிப்பட்ட சூழ்நிலையில் சதாசிவம் சின்னராஜிக்கு வேலை போயிடுது, அதனால அவருக்கு எந்த மாத வருமானமும் இல்லாம இருக்கு ஆனாலும் பல EMI-களை கட்ட வேண்டிய நெருக்கடியில் மாட்டிக்கிறாரு, இஎம்ஐ மூலமா பொருட்கள் கொடுத்தவங்க சும்மா இருப்பாங்களா? அவர்கிட்ட பணம் கேட்டு தொல்லை பண்றாங்க, ஆனா எப்படியோ சதாசிவம் சின்னராஜ் சமாளிச்சுக்கிட்டே இருக்காரு ,ஒரு பக்கம் பணம் நெருக்கடி அதனால வீட்ல குழப்பம் ,மன உளைச்சல் இந்த மாதிரி பல தரப்பட்ட சிக்கல்களில் உலவும் கதாநாயகன் கடைசியில் தன்னுடைய பொருளாதார சிக்கல்களில் இருந்து வெளியே வந்தாரா ?இல்லையா அப்படிங்கறத EMI (மாத தவணை) படத்தினுடைய மீதி கதை.
படத்தோட கதாநாயகனா நடிக்கிறதோட விட படத்தை இயக்கவும் செஞ்சிருக்காரு சதாசிவம் சின்னராஜ், முதல் படத்திலேயே நடுத்தர குடும்பத்து மக்கள் தகுதிக்கு மீறி மாத தவணை மூலமாக பொருட்கள் வாங்கி குவிக்க கூடிய வாழ்வியல் சூழல கதையின் களமா எடுத்துக் கொண்டு படத்தை இயக்கியிருக்கிறது பாராட்டக்கூடியது . இது மாதத் தவணை கட்ட முடியாம இப்ப தவிச்சுக்கிட்டு இருக்கிறவங்க, எப்படியோ கஷ்டப்பட்டு மாதத் தவணை எல்லாம் கட்டி முடிச்சிட்டு கொஞ்சம் ரிலீஃபா இருக்கிறவங்க என எல்லாருக்குமே அவர்களுடைய மனசுக்கு ரொம்ப நெருக்கமான கதையா இருக்கு அப்படிங்ககறது உண்மை. புதுசா மாத தவணையில் பொருட்கள் வாங்கணும் அப்படிங்கிற திட்டத்துல இருக்குறவங்களுக்கும் இந்த படம் ஒரு எச்சரிக்கை மணியா ஒலிச்சி இருக்குன்னு சொல்லலாம், கதையின் நாயகி நடிச்சிருக்கிற சாய் தன்யா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் குறை இல்லாமல் நடிச்சிருக்காங்க.மற்றும் கதாநாயகனோட அம்மாவா செந்தி குமாரி நடிச்சிருக்காங்க ,நாயகனோட நண்பனாக அங்காடித்தெரு பிளாக் பாண்டி நடிச்சிருக்காரு ,இவங்க மட்டும் இல்லாம ஓ. ஏ. கே. சுந்தர், லொள்ளு சபா மனோகர், இயக்குனர் பேரரசு போன்றவர்களும் நடிச்சிருக்காங்க, அவுங்க எல்லாருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு, ஏற்ற அளவுல தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்துகிற வகையில் நடிச்சிருக்காங்க.
சிம்புவோட குரல்ல வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற என் நண்பனே அப்படிங்கற மியூசிக் ஆல்பத்துக்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சைதான் இந்த படத்துக்கு இசையமைத்து இருக்காரு ,டைரக்டர் பேரரசு, கவிஞர் விவேக் போன்றவர்களுடைய பாடல்களுக்கு இனிமையான இசையை கொடுத்திருக்காரு, படத்தின் ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் கதையின் காட்சிகள் ஏற்ற பின்பலத்தை கொடுக்கும் வகையில் சிறப்பான பணியை செஞ்சிருக்காரு.

மொத்தத்தில் விரலுக்கேத்த வீக்கம் ,வரவுக்கேத்த செலவு என்ற குடும்பம் சார்ந்த சமூக கருத்துக்களை கதைக்களமா கொண்டிருக்கிறபடம் என்பதால நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, இந்த மாதத் தவணை படம் நிச்சயம் கவரும் அப்படின்னு உறுதியா சொல்லலாம் .
