.அறிமுக இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் . கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள ரகு தாத்தா பட விமர்சனம்.

படத்தில் கதையின் நாயகியாக உள்ள கயல்விழி பாண்டியன் (கீர்த்தி சுரேஷ்) வள்ளுவன் பேட்டைஎன்னும் இடத்தில் ,தன்னுடைய தாத்தாவுடன் வாழ்த்து வரும் ஒரு வங்கி ஊழியர். இந்தித் திணிப்புக்கு எதிரான கொள்கை நிறைந்த அவர் , க.பாண்டியன் என்னும் புனை பெயரில் புரட்சிகரமான கதைகளை எழுதியும் வருபவர். திருமணத்தில் ஈடுபாடு இல்லாத கயல்விழி .தனது தாத்தாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு .திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லுகிறார். தன்னுடைய எழுத்துகளை ரசிக்கும் தமிழ்ச்செல்வனை (ரவீந்திர விஜய்),மணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார். ஆனால் தமிழ்ச்செல்வனும் பிற ஆண்களைப் போலவே பிற்போக்கு சிந்தனை கொண்டவராகவே உள்ளதை அறியும் கயல், அதன்பின் எடுக்கும் முடிவுகள் என்ன?.என்பதுவே படத்தின் மீதி கதை.
கயல் என்னும் கதையின் நாயகியாக, பெண்ணியம் பேசுபவராகவும், எழுத்தாளராகவும் கீர்த்திசுரேஷ் இயல்பாக நடித்துள்ளார். மேலும் ரகோத்தமன் என்னும் கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல, தன் அனுபவ நடிப்பில் முத்திரை பதிக்கிறார். தமிழ் செல்வன் என்னும் கதாபாத்திரத்தில் ரவீந்திர விஜய் நடித்துள்ளார், இவர் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் குறைவின்றி நடித்துள்ளார். மற்றும் தேவதர்ஷினியின் நடிப்பும் கவரும் வண்ணம் உள்ளது.
கதை நிகழும் கால கட்டத்தினை வெளிப்படுத்தும் விதமாக பின்புலங்கள், ஆடை ,ஒப்பனை கலைப்பொருட்கள் பொருத்தமாக அமைக்கப்ட்டுள்ளன. .எடுத்துக்கொண்ட கதைக்கு, இணக்கமான திரைக்கதை காட்சிகளையும் , நேர்த்தியான நடிகர்களையும் கொண்டு அறிமுக இயக்குநர் சுமன் குமார் படத்தை நன்கு உருவாக்கியுள்ளார். அவருக்கு பெரிய உறுதுணைகளையாக இசை அமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையும், ஒளிப்பதிவாளர் யாமினி யக்ஞமூர்த்தியின் காட்சிப் பதிவுகளும் ஒருங்கே சிறப்பான முறையில் சேர்ந்துள்ளது.
ரகு தாத்தா -குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.
