Saturday, June 27

வீராயி மக்கள் – விமர்சனம்

உடன்பிறந்தவர்களுக்குள் நெருடல் ஏற்பட்டு, உருவாகும் உரசலில் பிரியும் குடும்பங்களின்பிரச்சனைகள் ,அந்த பிரச்சனைகளை அதே குடும்பத்தை சேர்ந்த உறவு ஒன்று களைந்து, பிரிந்த உறவுகளை மறுபடியும் சுமூகமாக எப்படி ஒன்று சேர்க்கிறது என்பதை கிராமீய பின்னணியில் சொல்லும் படம்.
கிராமத்தில் வீராயின் வாரிசுகளாக வேலராமமூர்த்தி, மாரிமுத்து – ஜெரால்ட் மில்டன்- ஆகிய மூன்று மகன்களும் தீபா என்ற மகளும் உள்ளார்கள் இவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனையால் பெரிய பிரிவு ஏற்பட்டு, அவர்களுக்குள் உறவில் பிரிவு உண்டாகிறது இருக்கிறார்கள். வேல ராமமூர்த்தியின் இளைய மகனாக வரும் சுரேஷ் நந்தா முன்னின்று இந்தப் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து பிரிந்த உறவுகளை மறுபடியும் இணைக்கவேண்டும் என்ற அவரது எண்ணம் நிறைவேறியாதா ? என்பதுதான் படத்தின் கதை.

சுரேஷ் நந்தாபடத்தின் நாயகனாக அய்யனார் என்னும் கதாபாத்திரத்தில் எளிய கிராமத்து நாயகனின் இயல்பான உணர்வுகளை சித்தரிக்கும் வண்ணம் நன்கு நடித்துள்ளார் .வேல ராமமூர்த்தி மாரிமுத்து தீபா போன்றவர்களின் யதார்த்தமான நடிப்பை இந்த படத்திலும் பார்க்கலாம். மேலும் நந்தனா ,மாரிமுத்துவின் மனைவி கதாபாத்திரத்தில் வரும் செந்தி, வேல ராமமூர்த்தியின் மனைவியாக நடித்துள்ள ரமா போன்றோர்களின் நடிப்பும் குறைவின்றி உள்ளது
.
உறவுகளின் உணர்வு வெளிப்பாட்டினை சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாக தீபன் சக்கரவர்த்தியின் இசையும் எம். சீனிவாசனின் ஒளிப்பதிவும் இயக்குனர் நாகராஜ் கருப்பையாவுக்கு உறுதுணையாக இருந்துள்ளது .


எந்திர வாழ்க்கையில், உறவுகளின் தன்மையை மறந்து வாழும் இன்றைய கால கட்ட வாழ்வியலின், யதார்த்த உண்மைகளை அலசும் வண்ணம் இயக்குனர் நாகராஜ் கருப்பையா மண் மணத்துடன் இப்படத்தை இயக்கியுள்ளார்

வீராயி மக்கள் படம் – உறவுகளின் அருமையினை உணர்த்தும் பாடம்.

Spread the love