பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் வழங்கும் வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ முதல் ஆல்பம் – லோகோ & தலைப்பு வெளியீடு!
பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் வழங்கும் வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ முதல் ஆல்பம் – லோகோ & தலைப்பு வெளியீடு!
எழுத்தாளர் மற்றும் பாடகர் வாகீசன் ராசையாவுடன் இணைந்து, பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் அவரது முதல் ஆல்பமான ‘தமிழ் கிறுக்கன்’ லோகோ மற்றும் தலைப்பை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இது அவரது கலைப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும்.
இந்த ஆல்பத்தின் லோகோ மற்றும் தலைப்பு, இன்று யூடியூப் தளத்தில் பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சிகளுடன், டிரெய்லர் வடிவில் இந்த வெளியீடு இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு கதையைப் பேசும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த டிரெய்லர், ‘தமிழ் கிறுக்கன்’ ஆல்பத்திற்கான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த...









