’29’ – திரைப்பட விமர்சனம்
எளிய மனிதர்களின் யதார்த்தமான காதலை , புதிய கோணத்தின் வாயிலாக திரைமொழியில் பதிவு செய்துள்ளது இந்த ’29’ படம் .
29 வயசுல கம்ப்யூட்டர் கம்பெனி வேலைக்காக சேலத்தில் இருந்து சென்னைக்கு வரும் இளைஞன் விது,அங்க பணி புரியும் ப்ரீத்தி அஸ்ரானிய காதலிக்கிறார். காதலே பிரதானம் அப்படின்னு வாழ்ந்து கொண்டிருக்கிற விதுவும் வாழ்க்கையில காதல தாண்டி லட்சியம் முக்கியம் என்று நினைக்குற ப்ரீத்தியும் பிரியக்கூடிய நிலைமை ஏற்படுகிறது கடைசில அவங்க மீண்டும் ஒன்று சேர்ந்தாங்களா ?இல்லையா? அப்படிங்கறத சொல்றதுதான் 29 படத்தோட மீதி கதை .
இந்தப் படத்தினுடைய கதையின் நாயகனாக சத்யா என்னும் கதாபாத்திரத்தில் விது நடித்திருக்கிறார் ,இவர் ஏற்கனவே ’ரெட்ரோ’ படத்தில் அசத்தலான வில்லன் நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் பெயர் வாங்கியவர் .இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் ,சாதாரணமாக நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் இளைஞர்கள...









