*லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!*
*லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!*
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் டிசம்பர் 23, 2025 அன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறுகையில், “ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததில் மகிழ்ச்சி. படமாக்குவது குறித்து ஜேசன் சஞ்சயின் தெளிவும், திட்டமிட்டபடி முழு படப்பிடிப்பையும் அவர் முடித்...









