Monday, April 20

கொம்பு சீவி- திரை விமர்சனம்

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அணை ஒன்று கட்டுவதற்காக தேனி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சில கிராமங்களை அரசாங்கம் கையகப்படுத்துவதால், அந்த கிராமத்தில் உள்ள மக்கள் வாழ்வாதாரம் இன்றி கஞ்சா கடத்துவது போன்ற குற்ற நடவடிக்கைகளை செய்கிறார்கள், அந்தப் பகுதியில் வசிப்பவர் ரொக்கப்புலி சரத்குமார் ஊரின் மிக முக்கியபுள்ளி , அவருக்கு கொம்பு சீவி பாண்டி, சண்முக பாண்டியன் உதவியாக வந்து சேர்கிறார், அதன் பின்பு இருவரும் அந்த வட்டார பகுதிகளில் கஞ்சா விநியோகத்தை செய்கிறார்கள், பெண் காவல்துறை அதிகாரி லைலா இவர்களை நீதிக்கு முன்பாக நிறுத்துவதற்கு முனைப்பு காட்டுகிறார் ,இதன்பின்பு என்ன நடந்தது ?என்பதுதான் படத்தினுடைய மீதி கதை.

கொம்பு சீவி பாண்டி,பாண்டியன் என்னும் கதாப்பாத்திரத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ளார் ,அதிரடி ஆக்சன் காட்சிகளில் சிறப்பான உடல் மொழியால் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறார் ,சண்முக பாண்டியனுக்கு அடுத்ததாக ரொக்கப்புலி என்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமார் தனக்கே உரித்தான பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்,மற்றும் நாயகி தரணிகா காவல் அதிகாரியாக ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு குறைவில்லாத நடிப்பு வழங்கி இருக்கிறார். மற்றும் காளி வெங்கட், மரியம் ஜார்ஜ், முனிஷ்காந்த் , கல்கி ராஜா போன்றவர்களும் அவரவர்கள் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை நன்கு வழங்கி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ,இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இருவரும் இயக்குனருக்கு பக்கபலமாக நின்று ஒளி ,ஒலி வழியில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்கிறார்கள். ,,இயக்குனர் பொன்ராம் நகைச்சுவை ஆக்சன் செண்டிமெண்ட் போன்ற அம்சங்களை கலந்து ஜனரஞ்சகமான படங்களை கொடுப்பதில் ஏற்கனவே நிரூபணம் செய்தவர், இந்த படத்திலும் அதற்கான முழு முயற்சியுடன் இந்தப்படத்திதையும் இயக்கி உள்ளார், மொத்தத்தில் இந்த கொம்பு சீவி கேப்டன் ரசிகர்களை மட்டுமின்றி மற்ற திரை ரசிகர்களையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது.

Spread the love