Monday, May 25

Author: admin

விறுவிறுப்பான படப்பிடிப்பில்,  P.S.மித்ரன் இயக்கத்தில், இரு வேடங்களில் கார்த்தி நடிக்கும் சர்தார் படம்

விறுவிறுப்பான படப்பிடிப்பில், P.S.மித்ரன் இயக்கத்தில், இரு வேடங்களில் கார்த்தி நடிக்கும் சர்தார் படம்

சினிமா
P.S.மித்ரன் இயக்கத்தில், இரு வேடங்களில் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமடைந்துள்ளது. தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் “சர்தார்” படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.சென்னையை தொடர்ந்து கொடைக்கானல் காட்டுப்பகுதிகளிலும், மைசூர் காட்டுப்பகுதியிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இதில், ஸ்டண்ட் காட்சிகளை பிரமாண்ட அளவில் எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் திட்டமிட்டுள்ளார். பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு குடும்பங்களை கவரும் மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் #சர்தார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமடைந்துள்ளது. ‘சர்தார்’ படத்திலிருந்து சமீபத்தில் வெளியான கார்த்தியின் தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிய ந...
சௌத் இந்தியன் சினி , டிவி, ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 2022 – 2024 ஆண்டிற்கான பதவி ஏற்பு விழா!

சௌத் இந்தியன் சினி , டிவி, ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 2022 – 2024 ஆண்டிற்கான பதவி ஏற்பு விழா!

சினிமா, செய்திகள்
சௌத் இந்தியன் சினி , டிவி, ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 2022 - 2024 ஆண்டிற்கான பதவி ஏற்பு விழா! சௌத் இந்தியன் சினி , டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் தேர்தலில் நடிகர் "டத்தோ" ராதாரவி தலைமையிலான 23 பேர் கொண்ட குழு மாபெரும் வெற்றி பெற்றது, இதனையடுத்து இன்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள், பெப்சி தலைவர் செல்வமணி தலைமையில் பதவியேற்று கொண்டனர். தலைவர் - ராதாரவி பொதுச்செயலாளர் -T.N B கதிரவன் பொருளாளர் - A. சீனிவாசமூர்த்தி ஆகியோருக்கு இயக்குநர் செல்வமணி பதவியேற்பு செய்து வைத்தார். துணைத்தலைவர் பதவிகளுக்கு - K மாலா, M.ராஜேந்திரன், M.நாராயணபாபு இணை செயலாளர் பதவிகளுக்கு- T கோபி, துர்கா சுந்தர்ராஜன், MSK குமரன் செயற்குழு உறிப்பினர் பதவிகளுக்கு ஷாஜிதா, டி பிரமிளா, யோகேஷ்வரி, பிரதீப், பாரதிராஜா, ஹெச்.ஆர். முரளிதரன்,ஈ.எம்.எஸ்.முரளி, விஜயலக்‌ஷ்மி, ...
கவிஞர் வைரமுத்து புத்தகக் காட்சிக்கு வருகை தந்து தம் படைப்புகளில் வாசகர்களுக்குக் கையொப்பமிடுகிறார்*

கவிஞர் வைரமுத்து புத்தகக் காட்சிக்கு வருகை தந்து தம் படைப்புகளில் வாசகர்களுக்குக் கையொப்பமிடுகிறார்*

சினிமா, செய்திகள்
*பிப்ரவரி 27 ஞாயிறு மாலை 4 மணிக்கு கவிஞர் வைரமுத்து புத்தகக் காட்சிக்கு வருகிறார் தம் படைப்புகளில் வாசகர்களுக்குக் கையொப்பமிடுகிறார்* 2022 கவிஞர் வைரமுத்துவின் இலக்கியத்திற்குப் பொன்விழா ஆண்டாகும். அவரது முதல் புத்தகமான ‘வைகறை மேகங்கள்’ 1972இல் வெளிவந்தது. இதுவரை 38 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் 17 புத்தகங்களை முத்தமிழறிஞர் கலைஞர் வெளியிட்டிருக்கிறார். அண்மையில் கவிஞர் வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழா இலட்சினையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 22 இந்தியமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. ‘வைரமுத்து இலக்கியம் 50’ ஐ வாசகர்களோடு கொண்டாட, கவிஞர் வைரமுத்து பிப்ரவரி 27 ஞாயிறு மாலை 4 மணிக்கு சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருகை தருகிறார்; வாசகர்கள் வாங்கும் தம் படைப்புகளில் கையொப்பமிடுகிறார். ...
“மழை பிடிக்காத மனிதன்” என் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படைப்பு – இயக்குநர் விஜய் மில்டன் !

“மழை பிடிக்காத மனிதன்” என் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படைப்பு – இயக்குநர் விஜய் மில்டன் !

சினிமா
“மழை பிடிக்காத மனிதன்” என் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படைப்பு - இயக்குநர் விஜய் மில்டன் ! ஒளிப்பதிவாளராக 37 படங்கள் இயக்குநராக 8 படங்கள் என, திரைத்துறையில் ஒரு நீண்ட பயணத்தை நிகழ்த்தியிருக்கிறார் விஜய் மில்டன். இயக்கமாக இருந்தாலும், ஒளிப்பதிவாக இருந்தாலும் அவரது திறமை  தனித்து கொண்டாடப்படும். தன் திரைப்பயணத்தில் மிக முக்கிய படைப்பாக நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கி வருகிறார். INFINITI FILM VENTURES வழங்க,விஜய் ஆண்டனி நடிக்கும்,  இப்படத்தில்“மழை பிடிக்காத மனிதன்” படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சரத்குமார் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். புரட்சி கலைஞர் விஜயகாந்த் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் பரப்பரப்பான படப்பிடிப்பில் இருக்கும் “மழை பிடிக்காத மனிதன்”  ப...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எம்.எஸ்.தோனி நடித்த  புதிய யுக கிராஃபிக் நாவலான ‘அதர்வா – தி ஆரிஜின்’ அறிமுக பிரதியை வெளியிட்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எம்.எஸ்.தோனி நடித்த  புதிய யுக கிராஃபிக் நாவலான ‘அதர்வா – தி ஆரிஜின்’ அறிமுக பிரதியை வெளியிட்டார்

சினிமா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எம்.எஸ்.தோனி நடித்த  புதிய யுக கிராஃபிக் நாவலான ‘அதர்வா - தி ஆரிஜின்’ அறிமுக பிரதியை வெளியிட்டார் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கிராஃபிக் நாவலின் அறிமுக பிரதியை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  வெளியிட்டார். புத்தக வெளியீட்டாளர்கள் தற்போது இப்புத்தகம் முன்பதிவு மூலம் Amazon.in தளத்தில் கிடைக்குமென அறிவித்துள்ளனர். சென்னை, 23 பிப்ரவரி 2022:  ரசிகர்களின் ஆர்வமிகு எதிர்பார்ப்பு நிறைவுக்கு வந்தது. எம்.எஸ் தோனியின் பிரம்மாண்டமான புதிய யுக கிராஃபிக் நாவலான ‘அதர்வா: தி ஆரிஜின்’ முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். இன்று முதல் Amazon.in தளத்தில் புத்தகத்தை ரசிகர்கள் முன்பதிவு மூலம்  ஆர்டர் செய்யலாம் என்று புத்தக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். சிறப்பு முன்பதிவு ஆர்டரில்  புத்தகத்தின் விலை ரூ.1499 ஆகும். அதர்வா: தி ஆரிஜின் புத்தகத்தின்  தயாரிப்ப...
வலிமையுடன் பவுடர் கிளிம்ப்ஸ் வெளீயீடு

வலிமையுடன் பவுடர் கிளிம்ப்ஸ் வெளீயீடு

சினிமா
நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பப்ஜி படத்தின் இயக்குநரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை விரைவில் தொடங்கவிருப்பவருமான விஜய் ஸ்ரீ ஜி, வித்யா பிரதீப், நிகில் முருகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பவுடர் படத்தை இயக்கியுள்ளார். கடந்த 26 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் பவுடர் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பலரது பாராட்டை பெற்றிருந்த நிலையில், சிறப்பு காணொலி (கிளிம்ப்ஸ்) இன்று வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள வலிமை படத்தை திரையிடும் அரங்குகளில் பவுடர் கிளிம்ப்ஸ் திரையிடப்பட்டது. கண்டிப்பான போலீஸ் அதிகாரி ராகவன் என்.எம் ஆக நிகில் முருகன் இ...
வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம் -ஹூமா குரேஷி

வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம் -ஹூமா குரேஷி

சினிமா
அஜித் குமார் சாரும் நானும், வலிமை படத்தில் நிறைய காட்சிகளில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளோம், அந்த காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் - நடிகை ஹூமா குரேஷி ! நடிகை ஹூமா குரேஷி, அஜித் குமாருடன் இணைந்து நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். பிப்ரவரி 24, 2022 அன்று உலகம் முழுவதும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக உள்ள நிலையில், இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது அற்புதமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து ஹூமா குரேஷி கூறும்போது, “வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம், எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வினோத் சார் என்னுடைய கேரக்டரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட பாத்திரமாக உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு முறையும், நாங்கள் ...
15வருடம் திரை பயணம்! அனைவருக்கும் நன்றி சொன்ன நடிகர் கார்த்தி !!

15வருடம் திரை பயணம்! அனைவருக்கும் நன்றி சொன்ன நடிகர் கார்த்தி !!

சினிமா
தமிழ் சினிமாவில் ஒரு நாயகனின் அறிமுக படமே மிகப்பெரிய வரலாற்று வெற்றி என்பது மிகவும் அபூர்வம். அதனை 2007-ம் ஆண்டு இதே நாளில் நிகழ்த்திய படம் தான் ‘பருத்தி வீரன்’. இந்தப் படத்தின் மூலமாகவே கார்த்தி நாயகனாக அறிமுகமானார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தினை அமீர் இயக்கியிருந்தார். இந்தப் படம் செய்த சாதனை, கடுமையாக உழைத்த ஒரு அறிமுக நாயகனுக்கு கிடைத்த வெற்றி. உலகமெங்கும் மாபெரும் வரவேற்பைப் பெற்று, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகர்களின் பட்டியலில் கார்த்தியையும் இணைத்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ச்சியாகத் தனது அடுத்தடுத்த படங்களிலும் தக்க வைத்தார் கார்த்தி. ‘பையா’, ‘நான் மகான் அல்ல’,‘சிறுத்தை’, ‘மெட்ராஸ்’, ‘கொம்பன்’, ‘தீரன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘கைதி’ என மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்து தென்னிந்திய முன்னணி நாயகர்களின் பட்டியலில் ஒருவரானார். ...
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் 150வது பிரமாண்ட திரைப்படம் “தி ஸ்மைல் மேன்” (The Smile Man) !

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் 150வது பிரமாண்ட திரைப்படம் “தி ஸ்மைல் மேன்” (The Smile Man) !

சினிமா
மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் அவரது 150வது சிறப்பு திரைப்படமாக உருவாகிறது  “தி ஸ்மைல் மேன்” (The Smile Man). தமிழ் சினிமாவில் 100 படங்களை கடந்து முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் வெகு சில நடிகர்களில் ஒருவரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் திரைவாழ்வில், சாதனை படைப்பாக பிரமாண்ட பட்ஜெட்டில், அவரது 150 வது படமாக இப்படம் உருவாகிறது. அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற  ஒரு முன்னாள் காவல் அதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில் இப்படம் உருவாகவுள்ளது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத...
சல்லியர்கள் டீஸரை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்

சல்லியர்கள் டீஸரை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்

சினிமா
சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘சல்லியர்கள்’.மேதகு (பார்ட்-1) படத்தின் மூலமாக முதன்முறையாக ஈழ தமிழர் வரலாற்றை தெளிவாக படம்பிடித்து உலக தமிழர்களின் பாராட்டுக்களை பெற்ற இயக்குநர் கிட்டு. தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் கருணாஸ் தயாரித்துள்ள முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இந்தப்படத்தின் டீஸரை இன்று மாலை ஆறு மணிக்கு கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார். போர்க்களத்தில் காயம்பட்ட தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றி, போரில் கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவ பின்னணியில் இந்தப்படம் உருவாகியுள்ளது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லன் களவாணி புகழ்...