Monday, May 25

Author: admin

மிர்ச்சி மியூசிக் விருதை வென்று, மாற்று திறனாளிகளுக்கு சமர்பித்த ‘சைக்கோ ’பட தயாரிப்பாளர்

மிர்ச்சி மியூசிக் விருதை வென்று, மாற்று திறனாளிகளுக்கு சமர்பித்த ‘சைக்கோ ’பட தயாரிப்பாளர்

சினிமா
டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் வெளியான ‘சைக்கோ’ படத்திற்கு, ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’,‘ 2021 ஆம் ஆண்டிற்கான பாடலாசிரியர்’, ‘2021 ஆம் ஆண்டிற்கான பாடல்’ என மூன்று பிரிவுகளில் மிர்ச்சி மியூசிக் விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. மிர்ச்சி மியூசிக் நிறுவனம் ஆண்டுதோறும் தென்னிந்திய திரையிசையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் வெற்றிப்பெற்ற கலைஞர்களுக்கு, விருது வழங்கி கௌரவித்து வருகிறது. ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’ என்ற பிரிவில் ‘சைக்கோ’ படத்திற்கு இசையமைத்ததற்காக ‘இசைஞானி இளையராஜா’வுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடலாசிரியர் ’பிரிவில், ‘சைக்கோ’ படத்தில் இடம்பெற்ற ‘உன்ன நெனச்சு.’ எனத் தொடங்கும் பாடலை எழுதியதற்காக பாடலாசிரியர் கபிலனுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடல்’ பிரிவில், ‘சைக்கோ’ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் ...
நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில், “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி, சிறப்பு டீசருடன் 2022 ஏப்ரல் 2 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது !

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில், “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி, சிறப்பு டீசருடன் 2022 ஏப்ரல் 2 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது !

சினிமா
பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில்   3-D  அட்வென்ச்சர், மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள, “விக்ராந்த் ரோணா” திரைப்படம், இந்த ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படங்களுள் ஒன்றாகும். எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், 2022 ஏப்ரல் 2 ஆம் தேதி படத்தின் வெளியீட்டு தேதியுடன் சிறப்பு டீசரை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்துள்ளனர், பெரிய திரையில் விக்ராந்த் ரோணா படத்தை பெரிய திரையில் காண ஆவலுடன் இருக்கும் கிச்சா சுதீப்  ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கிச்சாவின் பிறந்தநாளான செப்டம்பர் 2 அன்று, படத்திற்கான எதிர்பார்ப்பை உயர்த்திய முதல் கிளிம்ப்ஸே காட்சியை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர், இது விக்ராந்த் ரோனா என்ற எதிரிகளை பயமுறுத்தும் இருளின் அரசனுடைய அறிமுகத்தை தருவதாக அமைந்திருந்தது. பான் வேர்ல்ட் 3டி படமான ‘விக்ராந்த் ரோணா’ இ...
தீ இவன் படத்திற்கு நான்கு சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்திய நவரச நாயகன் கார்த்திக்.

தீ இவன் படத்திற்கு நான்கு சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்திய நவரச நாயகன் கார்த்திக்.

சினிமா
  மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில்" தீ இவன் " நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதா ரவி, சுமன்.j, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கி தயாரித்த T. M. ஜெயமுருகன் இப் படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு Y. N. முரளி, படத்தொகுப்பு மொகமத் இத்ரிஸ், பின்னணி இசை A. J. அலி மிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை M. அப்பு கவனிக்க, பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலாதேவி ஜெயமுருகன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு டப்பிங் பேசி முடித்த பிறகு படத்தை பற்றி நவரச நாயகன் கார்த்திக் நம்மிடம் பகிர்ந்தவை.... ஜெயமுருகன் .T. M அவர்கள் " தீ இவன் " கதையை சொன்ன போதே கதையில் உள்ள ஆழத்தை நான் உணர்ந்தேன். த...
‘பாட்னர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘பாட்னர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா
நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘பாட்னர்’ பட ஃபர்ஸ்ட் லுக் ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் 'பாட்னர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மொத்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராகவ் படதொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அமைத்திருக்கிறார். ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில்...
Sony Pictures Entertainment நிறுவனத்தின் அடுத்த பிரமாண்டம்,  வருகிறது “மோர்பியஸ்” ( Morbius )  வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் !

Sony Pictures Entertainment நிறுவனத்தின் அடுத்த பிரமாண்டம்,  வருகிறது “மோர்பியஸ்” ( Morbius )  வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் !

சினிமா
Sony நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான “ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் மற்றும் அன்சார்டட்”  படங்கள் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட தயாரிப்பாக, ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த  “மோர்பியஸ்” Morbius திரைப்படம் வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. மார்வல் கதாப்பாத்திரங்களில் மிக முக்கியமான, மிக சிக்கலான, மார்வலிலேயே மிக பலமிகுந்த எதிர் பாத்திரமான மோர்பியஸ் பாத்திரம் முதல் முறையாக திரையில் வருகிறது. மிகச்சிறந்த டாக்டரான மோர்பியஸ் மிக வித்தியாசாமான இரத்தம் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்படுகிறார் அவருக்குள் புகும் இருள் சக்தியை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் இந்தப்படத்தின் திரைக்கதை. உலகம் முழுக்க மோர்பியஸ் கதாப்பாத்திரத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. என்பது குறிப்பிடதக்கது. தான் ஏற்கும் கதாப்பாத்திரங்களில...
நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகன்நாத் இணைந்து வழங்கும், பிரம்மாண்ட ஆக்சன் டிராமா ‘JGM’!

நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகன்நாத் இணைந்து வழங்கும், பிரம்மாண்ட ஆக்சன் டிராமா ‘JGM’!

சினிமா
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சரித்திரம் படைக்கும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் நடந்த ஒரு உற்சாகமான நிகழ்வில், தங்கள் அடுத்த திரைப்படமான “JGM”  படத்தை இன்று அறிவித்தனர். இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் டிராமா, பன் மொழி இந்திய பொழுதுபோக்கு திரைப்படம், நடிகர்  விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத  பாத்திரத்தில் காண்பிக்கும், இது அவரது திரைப்பயணத்தில் அடுத்த திருப்புமுனையாக இருக்கும்! JGM திரைப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து  தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்  பூரி ஜெகன்நாத். இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம்,  இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும், ...
சிபி சத்யராஜ்  நடிக்கும் மாயோன்”யு’ சான்றிதழ்  பெற்றுள்ளது

சிபி சத்யராஜ் நடிக்கும் மாயோன்”யு’ சான்றிதழ் பெற்றுள்ளது

சினிமா
தமிழ் திரை உலகில் வலுவான கதைகளை மையப்படுத்தி சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிடுவதில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அடுத்ததாக 'மாயோன்' எனும் புதிய திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள். 'மாயோன்' படத்தின் டீசர் வெளியாகி, அதில் இடம்பெற்ற புதிரான புராண இதிகாச கதையால், ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டு மயக்கும் மெட்டுகளுடனான பாடல்கள் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான சைக்கோ திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது, அதிலிருந்து மாறுபட்டு, 'மாயோன்' படம் 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படம் சென்சாரில் எந்த ஒரு காட்சியும் வெட்டப்படாமல் முழுப்...
கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்

கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்

சினிமா
18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது பெருமை மிக்க படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார். 'நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும். சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா. மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிர...
இரு மொழிகளில் உருவாகும், நடிகர் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, பிரமாண்டமாக வெளியாகிறது !

இரு மொழிகளில் உருவாகும், நடிகர் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, பிரமாண்டமாக வெளியாகிறது !

சினிமா
நடிகர் ராம் பொதினேனி நடிப்பில், பிரபல இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், உருவாகி வரும் “தி வாரியர்” திரைப்படம், வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.   கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டு திரைத்துறைகளிலும் பிரபலமான நடிகர் ஆதி பினிசெட்டி, “தி வாரியர்” படத்தில் வில்லனாக நடிக்கிறார், தென்னிந்திய திரையுலகின் இளம் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதற்காக தயாரிப்பாளர்கள் ஒரு அற்புதமான போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் ராம் பொதினேனி ஒரு ரயில் நிலையத்தின் நடைமேடையில், வெடிபொருட்கள் அடங்கிய பெட்டியின் மீது, கையில் காயத்துடன், அமர்ந்திருக்கிறார். கோபமான முகத்துடன் துப்பாக்கியை வைத்து கொண்டிருக்கிறார், அதே நேரத்தில் குண்டர்கள் கூட்டம் அவரை கண்டு ஓடுவதைக் காணலாம். முன்னதாக RAPO19 என அழைக்கப்...
“வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை படைத்துள்ளது.

“வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை படைத்துள்ளது.

சினிமா
2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய  பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு, ஆக்‌ஷன் திரைப்படமான ‘வலிமை’ நேற்று ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான வேகத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை பெற்று, ஓடிடி உலகில் மிகப்பெரிய ஓபனிங் சாதனை படைத்துள்ளது. படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஜீ5 தளத்தில் தற்போது  காண கிடைக்கின்றன. “வலிமை” திரைப்படம், தமிழ், கன்னடம்,தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழ்  ஓடிடி இயங்கு தளங்களின் மறுக்கமுடியாத வெற்றியாளரான ஜீ5, பல ஆண்டுகளாக அனைத்து வகையான கதைகள்  மற்றும் மொழிகளில் எப்போதும் அருமையான திரைப்படங்களையும், அசல் உள்ளடக்கங்களையும் வழங்கி வருகிறது. நடிகர் அஜித் குமார் அவர்களை கௌரவபடுத்தும் வகையில், ‘வலிமை’  திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஆனதை தொடர்ந்து, டிஜிட்டலில்  ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளதாக அறிவிக்கும்...