Tuesday, May 26

Author: admin

இயக்குனர் ஷார்வி இயக்கத்தில், மானவ், மரியா பின்டோ நடித்த திரைப்படம், ஐந்து மொழிகளில் தயாராகிறது.

இயக்குனர் ஷார்வி இயக்கத்தில், மானவ், மரியா பின்டோ நடித்த திரைப்படம், ஐந்து மொழிகளில் தயாராகிறது.

சினிமா
நடிகர் பிரசாந்த் வெளியிட்ட டைட்டில் "டூ ஓவர்" நடிகர் பிரசாந்த் 'டூ ஓவர்' படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் போஸ்டரை வெளியிட்டார். ரியல் இமேஜ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், எஸ் சரவணன் "டூ ஓவர்" திரைப்படத்தை தயாரித்துள்ளார். ஷார்வி எழுதி இயக்கிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பான திரைப்படம் டூ ஓவர். படித்தவர் ஆனால் வேலையில்லாதவர் என்பதை அடிப்படையாகக் கொண்ட கதை. ஒரு மனிதனின் வேலையுடனான உறவை அடிப்படையாகக் கொண்டது. மரியா பின்டோ, நெஃபி அமெலியா மற்றும் பலர் நடிகர்களின் ஒரு பகுதியாக உள்ளனர். குமாரசாமி பிரபாகரன் இசையமைக்க, பிஜி வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு கே.வி.செந்தில் இணை இயக்கம் ஏ.பி.சிவா. மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். சோர்ந்து போனவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் படமாக உருவாகிறது 'டூ ஓவர்'!...
 ஆர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன

 ஆர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன

சினிமா
நடிகர்-இயக்குநர் ஆர் பார்த்திபனின் வெற்றிப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, அவரது இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக இந்த கவுரவம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரவின் நிழல் படத்திற்கு ஆஸ்கார்-கிராமி விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பார்த்திபன், தனது தனித்துவமான முயற்சியை அங்கீகரித்த இரு அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.  ...
நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” படத்தின் பாடல் படப்பிடிப்பு கோதாவரிக்கானியில் நடைபெற்று வருகிறது !

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” படத்தின் பாடல் படப்பிடிப்பு கோதாவரிக்கானியில் நடைபெற்று வருகிறது !

சினிமா
நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் கதை சொல்லலில் தனித்துவமானவையாக இருந்தன. அந்த வகையில் எல்லாவற்றையும் தாண்டும் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் நானியின் முதல் பான் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பெ...
 இந்தக் கோடை விடுமுறை பெரியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்காகவும், குடும்பத்தினரின்  பொழுதுபோக்கிற்காகவும் ப்ரைம் வீடியோ “ஓ மை டாக்” பட டிரெய்லரை வெளியிடுகிறது

 இந்தக் கோடை விடுமுறை பெரியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்காகவும், குடும்பத்தினரின்  பொழுதுபோக்கிற்காகவும் ப்ரைம் வீடியோ “ஓ மை டாக்” பட டிரெய்லரை வெளியிடுகிறது

சினிமா
"ஓ மை டாக்” குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தரும் இந்த படம்,  ஏப்ரல் 21 அன்று இந்தியாவிலும்,  240 உலக நாடுகளிலும் மற்றும் பல பிரதேசங்களிலும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. சரோவ் சண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ள 2D என்டர்டெய்ன்மென்ட் ‘ஓ மை டாக்’ படம், மூன்று தலைமுறைகளைப் பற்றியது. குடும்பப் பாங்கான இப்படத்தில் நிஜத்தில் மூன்று தலைமுறை நடிகர்களான விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அமேசான் பிரைம் நம்பமுடியாத அளவிற்கு புத்தம் புதிய, எண்ணற்ற பிரத்யேகப் படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல், விளம்பரம் இல்லாமல், அமேசான் மியூசிக் மூலமாக இசை, இந்தியாவின் முக்கிய தயாரிப்புகளை துரிதமாக வெளியிட்டும், பெரிய வியாபார பேரங்கள், பிரைம் ரீடிங் மூலமாக எல்லையற்ற கல்வி விஷயங்கள்,  பிரைம் கேமிங்கில் மொபைல் கேமிங் இவை அனைத்தும்...
Giant Music வழங்கும் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடல் “ஆசை அலை மீறுதே” !

Giant Music வழங்கும் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடல் “ஆசை அலை மீறுதே” !

சினிமா
இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடல்கள் சமீப காலங்களில் ரசிகர்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்று வருகிறது. பல பாடல்கள் சார்ட்பஸ்டர் ஹிட்களாக மாறிய நிலையில், ‘ஆசை அலை மீறுதே’ அந்த வரிசையில் தற்போது  இணைந்துள்ளது.  இந்தப் பாடலுக்கு பரத் ராகவன் இசையமைத்துள்ளார், கல்பனாவின் வரிகளில்  ரக்‌ஷிதா சுரேஷ் இப்பாடலை பாடியுள்ளார், 'அடங்கமறு புகழ்' ராஜா ருத்ரகோடி மற்றும் சதரூப நஹா ஆகியோர் பாடலில் முதன்மை கலைஞர்களாக இடம்பெற்றுள்ளனர். இஷான் இப்பாடலை உருவாக்கி இயக்கியுள்ளார். வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார். ஒரு பெண் தன் காதலன்  இல்லாத தருணத்தில் அடையும் உணர்ச்சிக் கொந்தளிப்பை இந்தப் பாடல் ஆழமாகச் சொல்கிறது. காதலன் மீதான அதீத அன்பாகத் தொடங்குவது, பேரழிவு தரும் உச்சமாக மாறுகிறது.காதர் சரஸ்வதி இப்பாடலுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் இஷான் சன் மியூசிக் மற்றும் பெப்பர்ஸ் டிவியில் விஜேவாகவும், அதன் பி...
இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘கம்பெனி’ டிரைலர் மற்றும் இசை  வெளியீட்டு விழா

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘கம்பெனி’ டிரைலர் மற்றும் இசை  வெளியீட்டு விழா

சினிமா
ஸ்ரீ மகானந்தா சினிமஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா  சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். பாரதிராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயா...
நடிகர் ஸ்ரீராம் கலந்துகொண்ட ஸ்ரீராமநவமி விழா.

நடிகர் ஸ்ரீராம் கலந்துகொண்ட ஸ்ரீராமநவமி விழா.

ஆன்மீகம், சினிமா
ஸ்ரீ ராம நவமி விழாவை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் அமைந்திருக்கும் அருள்மிகு துவாரகமாயி லட்சுமி சாய்பாபா ஆலயத்தில், பாபாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 1008 சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் வழங்கும் வைபவம் நடைபெற்றது. இந்த சுப விழாவில் 'பசங்க', 'கோலிசோடா' படப் புகழ் நடிகர் ஸ்ரீராம் மற்றும் நடிகர் பாண்டி ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் வழங்கி கௌரவித்தனர். இவ்விழாவில் நடிகர் ஸ்ரீராம் பேசுகையில், '' எங்களுடைய வீட்டில் ஒன்றரை அடி உயர சாய்பாபா சிலை ஒன்று உள்ளது. என்னுடைய பெற்றோர்கள் அதற்கு ஆரத்தி காட்டும் பொழுது, காண்பதற்கு வித்தியாசமாக இருக்கும். நான் அதை ஆவலுடன் பார்த்துக்கொண்டே இருப்பேன். தற்போது வளர்ந்து நடிகனான பிறகும் இன்றும் எங்களுடைய வீட்டில் சாய்பாபா சிலைக்கு பூஜையும், பிரார்த்தனையும் நடைபெறுகிறது. வாழ்க்கையில் பல அற்பு...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெருமையுடன் வழங்கும்,  புதிய ரொமான்டிக் காமெடி தொடர் ‘மை3’ தலைப்பு,  பிக்பாஸ் ஹவுஸில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டது ! 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெருமையுடன் வழங்கும்,  புதிய ரொமான்டிக் காமெடி தொடர் ‘மை3’ தலைப்பு,  பிக்பாஸ் ஹவுஸில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டது ! 

சினிமா
சென்னை இந்தியா 2022 : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் தனது அடுத்த தமிழ் இணைய தொடரான “மை3” தொடரை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. தமிழில் வித்தியாசமான முயற்சியாக, ஒரு ரோபோடிக் காதல் கதையாக உருவாகும் இந்த தொடர் ரொமான்ஸ் காமெடி வகையில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. ட்ரெண்ட்லவுட் தயாரிக்கும் இந்த இணைய தொடரை தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ராஜேஷ் M இயக்குகிறார். பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேசன் இசையமைக்கிறார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள இந்த தொடரின் “மை3” தலைப்பை  நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ் பிக்பாஸ் ஹவுஸில் போட்டியாளர்களுடன் இணைந்து வார இறுதி நிகழ்ச்சியில் வெளியிட்டனர். இது குறித்து நடிகை ஹ...
 இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ்  “பேப்பர் ராக்கெட்” ,  ‘ஒரு ஆசம் தொடக்கம்’ கொண்டாட்ட நிகழ்வில் அறிவிக்கப்பட்டது !

 இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ்  “பேப்பர் ராக்கெட்” ,  ‘ஒரு ஆசம் தொடக்கம்’ கொண்டாட்ட நிகழ்வில் அறிவிக்கப்பட்டது !

சினிமா
ஜீ5 நிறுவனம் தமிழ் மொழியில், தனது வெற்றியை கொண்டாடும் வகையில், ‘ஜீ5 தளத்தில் இந்த  அடுத்தடுத்து வெளிவரவுள்ள பிரமாண்ட படைப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடும் நிகழ்வாக “ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வின் போது பிரபல இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்,  'பேப்பர்  ராக்கெட்' எனும் வெப் சீரிஸ் பிரபலங்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் முதல் வெப் சீரிஸ் இதுவென்பது குறிப்பிடதக்கது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரிக்கிறார். காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இந்த தொடரில் K.ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாழி, கௌரி G.கிஷன், தீரஜ், நாகிநீடு, V. சின்னி ஜெயந்த், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோருடன் G.M.குமார், அபிஷேக், பிரியதர்ஷினி மற்றும் பல பெரிய நட...
மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்” ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டார் !

மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்” ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டார் !

சினிமா
க்ரிஷ் இன்டர்நேஷனல் பிலிம் கிரியேசன், சீட்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் சண்முகம் கிரியேசன் இணைந்து தயாரிக்க, நடிகர் சதீஷ் நடிக்கும் திரில்லர் திரைப்படம் “சட்டம் என் கையில்”. இப்படத்தை ‘சிக்சர்’ படப்புகழ் இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டார். படம் குறித்து இயக்குநர் சாச்சி கூறியதாவது… பிரபல காமெடி நடிகர் சதீஷை மாறுபட்ட தோற்றத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். நடிகர் சதீஷ் காமெடி மட்டுமே செய்யக் கூடியவர் அல்ல, அவரின் திறமையை, அவரது வேறொரு பரிமாணத்தை “சட்டம் என் கையில்” படத்தில் பார்க்கலாம். அவரது தனித்துவமான நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். என் முதல் படம் முழுக்க காமெடியை சுற்றியதாக இருக்கும், ஆனால் இந்த படம் அதிலிருந்து மாறுபட்டு பரபர திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஒரு இரவில் ...