Monday, May 25

Author: admin

*மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!*

*மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!*

சினிமா
*மிரட்டலான போஸ்டருடன் வெளியான 'காளிதாஸ் 2' ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!* 2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான 'காளிதாஸ் 2' உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், மற்றுமொரு முதன்மை கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார்.  'பூவே உனக்காக' புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதன...
” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு “- திரைப்பட விமர்சனம்

” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு “- திரைப்பட விமர்சனம்

சினிமா
படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "என்று பெயர் வைத்துள்ளார்கள் . அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் ஸ்வேதாவும் ரக்சிதாவும் நண்பர்களாக உள்ளார்கள். இதில் ரக்சிதா 66 ஆவது எண்ணில் தனது கணவர் சபரியுடனும் .99 ஆவது எண்ணில் ஸ்வேதாவும் வசிக்கிறார்கள் ,ரக்சிதாவை அவரது கணவர் பலமுறை கொலை செய்யும் முயற்சிகளில் அவர் தப்பித்துவிடுகிறார் .இந்த சூழலில் ஒரு சமயம் ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்வதை அறிந்த ரக்சிதா அங்குள்ள பிற நபர்களுடன் சேர்ந்து காப்பாற்ற செல்லும் பொழுது ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டார் குறிப்பிட்ட அந்த 99 ஆவது வீட்டில் யாருமே தற்பொழுது வசிக்கவில்லை என்பது தெரிகிறது அப்படி என்றால் ஸ்வேதா யார் ? அவர் ஏன் ரக்சிதாவுக்கு மட்டும் தெரிந்தார் ? அவர்கள...
‘காதல் ரீசெட் ரிப்பீட்’- திரைப்பட விமர்சனம்

‘காதல் ரீசெட் ரிப்பீட்’- திரைப்பட விமர்சனம்

சினிமா
தமிழ் சினிமா வெள்ளித்திரையில் பல முக்கோண காதல் கதைகளை சந்தித்து இருந்தாலும்,ஒரு புதிய கோணத்தில் இயக்குனர் விஜய் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் காதலை சொல்லுகிறது இந்த காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படம். கதையின் நாயகி ஜியா சங்கரை ,நாயகன் மதும் கேஷ் ஒருதலையாக காதலிக்கிறார், ஆனால் ஜியா சங்கரோ அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார் , இப்படிப்பட்ட சூழ்நிலையில் மறதி நோயினால் ஜியா சங்கர் பாதிக்கப்படுவதனால் அவருக்கு எல்லாமே மறந்துவிடும் நிலை ஏற்படுகிறது தன்னையே அறியாமல் தவிக்கும் அவரிடம் தன்னை காதலனாக மதும்கேஷ் அறிமுகப்படுத்தி கொள்கிறார், உண்மைக்கு மாறாக மதும்கேஷ் சொல்லக்கூடிய இந்தப் பொய்யினால் அதன் பின் என்ன நடக்கிறது ?என்பதுதான் படத்தின் மீதி கதை . கதையின் நாயகனாக மதும்கேஷ் ,சித்தார்த் என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகப்படத்தில் இளம் காதல் நாயகனாக  வலம் வருகிறார். நாயகியாக நடித்துள்ள ஜியா சங்...
‘அனோமி’ திரைப்பட விமர்சனம்  

‘அனோமி’ திரைப்பட விமர்சனம்  

சினிமா
விஞ்ஞானம் மற்றும் அறிவியல் சார்ந்த ஒரு விஷயத்தை கதையின் கருவாக எடுத்து, திரில்லர் மற்றும் க்ரைம் ஸ்டோரி ஆக மாறுபட்ட கோணத்தில்  சொல்லும் படம் ‘அனோமி’ மர்மமான முறையில சில பேர் கொலை செய்யப்படறாங்க யார் ?எதற்காக? இந்த தொடர்கொலைகளை பண்ணிட்டு இருக்காங்கன்னு போலீஸ் ஆபீஸராக இருக்கிற ரகுமான் கண்டுபிடிக்க முயற்சி பண்றாரு. விசாரணை நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்குது.தடயவியல் நிபுணராய் இருக்கிற பாவனா கொலை நடந்த இடத்தில கிடைக்கிற சிலவற்றை வைத்து ஏதாவது ஒரு க்ளூ கிடைக்குதான்னு கொலையாளியே தேட முயற்சி பண்றாங்க. இந்த சூழ்நிலையில அவரோட அப்பா அம்மாவும் ஒரு விபத்துல ,இறந்து போக அதனால மனநலம் பாதிக்கப்பட்டு அவருடைய தம்பி சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் அவருடைய தம்பியும் இறந்து போறாரு . அதிர்ச்சி அடைந்த பாவனா கொலையாளியை கண்டுபிடிக்கணும்னு தனக்கு கிடைக்கிற ஆதாரங்களை வ...
‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்கு பாராட்டு விழா நடத்திய சகாயம் ஐஏஎஸ்

‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்கு பாராட்டு விழா நடத்திய சகாயம் ஐஏஎஸ்

சினிமா
‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்கு பாராட்டு விழா நடத்திய சகாயம் ஐஏஎஸ் CW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்த ‘சல்லியர்கள்’ படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக முடியாத சூழலில் நேரடியாக ஒடிடி பிளஸ் தளத்தில் வெளியானது. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவான இப்படத்தில் சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஈழத்தில் நம் தமிழ் ராணுவத்தினர். குறிப்பாக மருத்துவர் அணி, போர் தக்குதலுக்கு ஆளான எதிரி வீரர்கள் மீது கூட எந்த அளவுக்கு கருணை காட்டி அவர்களது உயிரை காக்கவும் போராடினார்கள் என்கிற தமிழரின் அறத்தை சொல்லும்...
*ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!*

*ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!*

சினிமா
*ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!* இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்.., ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது...
ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்

ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்

சினிமா
ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு! Ravi Mohan Studios தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “An Ordinary Man”, நேற்று சிறப்பு பூஜையுடன்  அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கெனீஷா தயாரிக்கும் இந்தத் திரைப்படம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். ஏனெனில் நடிகர் ரவி மோகன் தனது திரைப்படப் பயணத்தில் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். சினிமாவுக்கான அவரது ஆர்வமும் தனித்துவமான படைப்புத் திறனும் இந்தப் புதிய முயற்சியில் பிரதிபலிக்க உள்ளது. நகைச்சுவை மற்றும் சமூகக் கருத்துக்களை இணைக்கும் நையாண்டித்தனம் கொண்ட காமெடி-டிராமாவாக இந்தப் படம் உருவாகிறது. இதில் பிரபல நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது தனித்துவமான நகைச்சுவை பாணி மற்றும் திர...
9-வது பதிப்பு ‘ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026’ கொண்டாட்டம்

9-வது பதிப்பு ‘ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026’ கொண்டாட்டம்

சினிமா
9-வது பதிப்பு 'ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026' கொண்டாட்டம் மரபு, அறிவுத்திறன் மற்றும் நவீன காலத்தின் சிறப்புகளை எல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வாக, ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய விழாவான 9-வது பதிப்பு 'ஜேப்பியார் ஐகான் விருதுகள்' இன்று அதன் பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்றது. தேசிய கலாச்சார வரைபடத்தில் ஒரு மைல்கல்லாக மாறியுள்ள இந்த விழா, புதுமை, தன்னலமற்ற தியாகம் மற்றும் தொழில்முனைவோர் மன உறுதி ஆகியவற்றின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய "சான்றோர்களையும்" "சாதனையாளர்களையும்" கௌரவிக்கிறது. பல்கலைக்கழகத்தின் அசுர வளர்ச்சிக்குக் காரணமான தொலைநோக்கு பார்வையாளர்களான ஜேப்பியார் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ரெஜினா ஜே முரளி மற்றும் ஜேப்பியார் பல்கலைக்கழகத் தலைவர் திரு. முரளி சுப்பிரமணியன் ஆகியோர் இந்த விழாவிற்குத் தலைமை தாங்கினர். தத்தமது துறைகளில் புத...
கௌதம் ராம் கார்த்திக்கின் அதிரடி அரசியல்  களத்தில் வெளியான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டைட்டில் டீசர்!

கௌதம் ராம் கார்த்திக்கின் அதிரடி அரசியல்  களத்தில் வெளியான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டைட்டில் டீசர்!

சினிமா
‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் அதிரடி டைட்டில் டீசரை நடிகர் ஆர்யா மற்றும் மாரி செல்வராஜ் வெளியிட்டனர்! “மனமே அனைத்திற்கும் காரணம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம்.” என்று கவுதம புத்தர் சொன்ன பொன்மொழியுடன் Bloody Politics படத்தின் டைட்டில் டீசர் தொடங்குகிறது. தீனா ராகவன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம்,  ஒரு வலுவான அரசியல் மனோபாவத்தை உருவாக்குகிறது. டீசர் மெதுவாக தனது உலகத்திற்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. இதில் மூத்த நடிகர் ஜெயபாலன் நடித்துள்ள முதியவருக்கான கதாபாத்திரத்துக்கும், கதாநாயகனின் குரலுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் முக்கிய அம்சமாக உள்ளது. ஒரு கொடிக்கம்பத்தின் அர்த்தமும் அதன் அரசியல் அடையாளமும் குறித்து அவர்கள் பேசும் இந்த உரையாடல், C. N. அண்ணாதுரை முதல் நடிகர் விஜய் வரை உள்ள அரசியல் குறிப்புகளை நுட்பமாக இணைக்கிறது. இந்தக் காட்சிகளை எல்லாம் சமூக இயக்கு...
‘வடம்’ -திரைவிமர்சனம்

‘வடம்’ -திரைவிமர்சனம்

சினிமா
வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில் விமல் நாயகனாய் நடித்துள்ள படம். கதையின் நாயகன் விமல் பாண்டி முனி என்னும் மாட்டை சிறு வயதிலிருந்து பாசத்துடன் வளர்த்து வருகிறார்,அவருடைய தந்தையான நரேன் ,அந்த ஊரின் மதிப்புமிக்க பெரியவர் ,அவர் அடிமாடுகளை காப்பாற்றி தன் கோசாலையில் பேணிப் பாதுகாக்கும் நல்ல மனம் படைத்தவர். நட்டியால் விரட்டி அடிக்கப்பட்ட அந்த பாண்டி முனி என்னும் மாட்டிற்கு ஒரு கண் பார்வை கிடையாது, பாசத்துடன் பாண்டி முனியை விமல் வளர்த்து மஞ்சுவிரட்டு போட்டிகளுக்காக ,அந்த காளைக்கு நன்கு பயிற்சிகளை கொடுத்து அதனை போட்டிகளில் வெற்றி பெறவும் வைக்கிறார். இதற்குப் பிறகு அந்த மாட்டை நட்டி கேட்க, இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது. அதன் பிறகு விமல் மீது கொலை வழக்கு, ஜாமீன் ,அவரையே கொலை செய்ய நடக்கும் முயற்சிகள் ,அவரது காதலினால் ஏற்படும் எதிர்பாராத தி...