செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” – ஏப்ரல் 10 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியீடு!
செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” – ஏப்ரல் 10 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியீடு!
திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான நடிப்பால் ரசிகர்களிடம் தனித்த இடத்தைப் பெற்றவர். அவர் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
சமீபத்தில், செல்வராகவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டார். இந்த சிறப்பு வெளியீடு சினிமா ரசிகர்கள் மற்றும் திரைப்பட வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து, படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்தது.
70 விநாடிகள் கொண்ட இந்த டீசர், படத்தின் சுவாரஸ்யமான உலகை ஒரு சிறிய பார்வையாகக் காட்டுகிறது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த டீசரில், ஒரு சிறுமி, ஒரு ஆசிரியர் ...









