Friday, May 1

’வெளவல்ஸ்’ (Vowels)- திரைப்பட விமர்சனம்

’வெளவல்ஸ்’ (Vowels) திரைப்பட விமர்சனம்

ஐந்து கதைகளை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குனர்கள் இயக்கியுள்ள திரைப்படம் ’வெளவல்ஸ்’

இந்தப் படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது கற்பனையிலிருந்து குற்றம் வரை, காதலிலிருந்து ஆசை வரை, உணர்வுகளிலிருந்து அதற்கு அடிபணிவது வரை என இனிமை- ஆபத்து தியாகம் -கொடூரம் மாயை -இருள் ஆகிய காதலின் இரு பக்கங்களையும் இந்த திரைப்படம் பேசுகின்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது .VOWELS’ திரைப்படம் ஐந்து தனித்துவமான கதைகள் மூலம் காதலை வெளிப்படுத்தும். ஒவ்வொரு கதையும் ஒரு உயிரெழுத்தை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட உணர்வை பிரதிபலிக்கும் வண்ணம் உள்ளது .

யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ், நந்து பரத் போபண்ணா, ஷரத் ரவி, விஜயஸ்ரீ, காஜல் சௌத்ரி, சித்து குமரேசன், விஜ்யேதா வசிஸ்ட், பீட்டர் கே, அக்ஷிதா போபையா, மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் அவரவர் ஏற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான வகையில் நிறைவான நடிப்பினை வெளிபடித்தியுள்ளார்கள்.அதிலும் குறிப்பாக யூகி சேது, சின்னி ஜெயந்த் என்னும் இரு கலைஞர்களின் அனுபவ நடிப்பு மிகவும் ரசிக்கத்தகுந்த வகையில் உள்ளது

ஒளிப்பதிவாளர்கள் கீர்தன் பூஜாரி சந்தீப் அல்லூரி என்னும் ஒளிப்பதிவாளர்கள் இந்த படத்தில் இடம்பெற் றுள்ள ஐந்து கதைகளையும் நேர்த்தியான கோணங்கள் மற்றும் ஒளி அமைப்பு மூலம் அழகுற காட்சிப்படுத்தியுள்ளார்கள் .

இயக்குனர்கள் வேறாக இருந்தாலும் இசையமைப்பாளர் சரவணன் சுப்பிரமணியம் ஒருவர்தான். அவர் ,அனைத்து கதைகளுக்கும் பல வகையான இசை அம்சங்களை கொண்டு கதைக்கும், காட்சிகளுக்கும் இணக்கமான முறையில் சிறப்பான இசை வடிவம் கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு படத்துக்கு படத்தொகுப்பாளர் ஹரிஷ் கொம்மே ,இவர் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளுக்கும் தேவையான அனைத்து அம்சங்களையும், திறம்பட இணைத்து பட கதைகளை தொய்வின்றி நகர்த்திச் செல்ல பெரிதும் உதவி இருக்கிறார்.

காதலின் பல பரிமாணங்களை பேசும் ஐந்து கதைகளை,ஐந்து இயக்குனர்களும் தங்களது தனித்தன்மையுடன் படமாக்கி உள்ளார்கள் .

ஆழமான ஐந்து காதல் கதைகளை பேசும் இந்த ’வெளவல்ஸ்’ புதுமையான முயற்சி மட்டுமல்ல, நேர்த்தியான முயற்சியும் கூட ..

Spread the love