Wednesday, September 23

’ஜி.டி.என்’- திரைப்பட விமர்சனம்

இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் இன்றைய மற்றும் நாளைய சமூகத்தினருக்கு அவரைப் பற்றிய ஒரு ஆவணத்தை பதிவாக்கியுள்ளது.

புரட்சிகரமான தொழிலதிபர் கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை கொண்டாடும் வாழ்க்கை வரலாற்று படமாக இந்த படம் அமைந்துள்ளது .ஜி .டி.நாயுடு கதாபாத்திரத்தில் முதன்மை நாயகனாக மாதவன் நடித்துள்ளார்.ஜிடி நாயுடு ஆரம்பத்தில் விவசாயிகளுக்கான சிறு உபகரணங்களை கண்டுபிடித்து ,அவற்றை மக்கள் உபயோகப்படுத்தும் வகையில் வடிவமைக்கிறார் கோவையைச் சேர்ந்த அவரின் கண்டுபிடிப்புகளையும், வளர்ச்சியையும் விரும்பாத ஆங்கிலேயர்கள் வருமான வரித்துறை மூலம் அவருக்கு நெருக்கடிகளை தருகின்றார்கள் .அதன் பிறகு என்ன நடந்தது ? தனக்கு வந்த இடையூறுகளை GD N எவ்வாறாக எதிர்கொண்டார் என்பதே படத்தின் மீதி கதை .

கதையின் நாயகனாக ஜிடி நாயுடு என்னும் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார், மாறுபட்ட வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக இந்த படத்தில் மாதவன் பதிவு செய்திருக்கிறார் .அவருக்குப் பிறகு வருமான வரித்துறை அதிகாரியாக ஜெயராமன், ஜிடி நாயுடுவின் நண்பராக சத்யராஜ் தங்களுடைய அனுபவ நடிப்பின் வாயிலாக தாங்கள் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு பெரும் பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள் .மேலும் துஷாரா விஜயன், அதிதி பாலன்,பிரியாமணி ,தம்பி ராமையா, விஜய் யேசுதாஸ், ஷீலா ராஜ்குமார் போன்ற ஏனைய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் குறைவில்லாத நடிப்பினை படம் முழுவதும் வழங்கி இருக்கிறார்கள்.

இந்த பயோபிக் திரைப்படத்திற்கு ,சம்பந்தப்பட்டவர் வாழும் கால சூழ்நிலையை மீண்டும் பிரதிபலிக்கும் வகையில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதனின் பங்களிப்பு படத்திற்கு பெரும் பலமாக உள்ளது .அதேபோல கோவிந்த் வசந்தாவின் இசையும் கதாபாத்திரங்களின் தன்மைக்கு மேலும் வலு சேர்த்து உள்ளது.

பெயர் மட்டுமே மக்களுக்கு ஓரளவிற்கு அறிமுகமாகியுள்ள ஒரு மாபெரும் சாதனையாளரின் வாழ்க்கையில் இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றனவா ?என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அருமையான ஒரு பயோபிக் திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் ரசிகர்களுக்கு வழங்கி உள்ளார் .

மொத்தத்தில் இந்த ஜி. டி. என் பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய அறிவியலும் வரலாறும் இணைந்த ஒரு திரை பதிவு.

Spread the love