இரண்டு வருட தவிப்பு, தவம் ,ஏக்கம், எதிர்பார்ப்புடன் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு திரை விருந்தாய் வந்துள்ள படம் விடா முயற்சி.
அஜர்பைஜான் நாட்டில் வாழும் அர்ஜுன் (அஜித்) கயல் (திரிஷா) தம்பதியினரிடையே ,சில வருடங்களுக்கு பிறகு அவர்களின் உறவில் விரிசல் ஏற்படுகிறது, .அதனால் இருவரும் பிரிந்து விடலாம் என்று முடிவு எடுக்கிறார்கள் இதையொட்டி தனது மனைவியை அவருடைய வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வருவதற்காக தன்னுடன் காரில் அழைத்துச் செல்கிறார் அர்ஜுன். அப்படி அவர்கள் சென்று கொண்டிருக்கும் வழியில் அவர்கள் பயணிக்கும் கார் பழுது அடைகிறது ,அந்த சமயத்தில் அவர்களுக்கு உதவி செய்ய ரக்ஷித் (அர்ஜுன்) தீபிகா(ரெஜினா )தம்பதியினர் முற்படுகிறார்கள் ,அதன்படி திரிஷாவை தன்னுடன் அழைத்துச் சென்று அருகாமையில் இருக்கும் ஒரு கஃபேயில் பாதுகாப்பாக இறக்கி விட்டு செல்வதாக உறுதியளிக்கின்றனர். தன்னுடைய கார் பழுது சரியான பிறகு அர்ஜுன் அந்த கஃபேக்கு மனைவியைத் தேடிச் செல்கிறார் ஆனால் அங்கு அவர் மனைவி இல்லாததை கண்டு குழப்பமும் அதிர்ச்சியும் அடைகிறார் ,பல இடங்களில் தனது மனைவியை தேடும் அவரால் மனைவியை கண்டுபிடிக்க முடிந்ததா ?அதன் பின் நடைபெறும் நடைபெறும் சம்பவங்கள் என்ன என்பதே விடா முயற்சியின் மீதிக்கதை.,கதையின் நாயகன் அர்ஜுனாக அஜித்குமார் நடித்துள்ளார். நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்கள் நடிக்கக்கூடிய படங்களில் இருக்கக்கூடிய வர்த்தக ரீதியான அம்சங்கள் பெரிதாக இல்லாத படத்தில், தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்றதொரு உடல் மொழியினை சிறப்பாக கொடுத்து செவ்வனே அஜித் நடித்துள்ளார்.
கயல் என்னும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ள திரிஷா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பாந்தமாக பொருந்தும் அளவிற்கு நன்கு நடித்துள்ளார். புதிய பரிணாமத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனை விடாமுயற்சியில் பார்க்கலாம், தனக்கே உரிய பாணியில் புதிய பொலிவுடன் நன்கு நடித்து, கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் சிறப்பாக அர்ஜுன் நடித்துள்ளார். மற்றும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் ரெஜினா மற்றும் ஆரவ் நடித்துள்ளார்கள் . கிடைத்திருக்கக்கூடிய கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப தங்களது நடிப்புத் திறனை ஒவ்வொரு காட்சியிலும் அவர்கள் நன்கு வெளிப்படுத்தி உள்ளார்கள். படத்தின் சிறப்பு தன்மைக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருப்பது ஒளிப்பதிவாளரின் பங்களிப்புதான். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் அஜர்பைஜான் நாட்டின் சுற்றுப்புறங்களை சிறப்பான முறையில் படமாக்கி பதிவு செய்துள்ளார்.
படத்தின் பாடல்களை விட அனிருத்தின் பின்னணி இசை குறிப்பிட்டுச் சொல்லத் தக்க வகையில் நன்குள்ளது. ஆக்சன் காட்சிகளுக்கு ஏற்றதொரு பின்புலத்தை, அவரது பின்னணி இசை வலுவாக கொடுத்துள்ளது.குடும்பம் ,பயணம் ,பிரிவு, சிக்கல் ,தவிப்பு ,தேடல் என செல்லும் கதைக்களத்திற்கு தேவையான விறுவிறுப்புடன் கூடிய திரைக்கதையினை நன்கு அமைத்து நல்லதொரு ஆக்சன் படத்தை புதிய பாணியில் இயக்குனர் மகிழ் திருமேனி உருவாக்கியுள்ளார்.
விடா முயற்சி-புதியபாணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் கதை .