நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் தண்டேல் படத்தினை சந்து மொண்டேட்டி இயக்கியிருக்கிறார்.இந்த படத்துக்கு இசை தேவிஸ்ரீ பிரசாத்.கதையின் நாயகன் ராஜுவும் (நாக சைதன்யா) நாயகி சத்யாவும் (சாய் பல்லவி) காதலர்கள்.அங்குள்ள மீனா குழுவுக்கு தண்டேல் (தலைவன் )ஆக அவர் உள்ளார். மீனவ குடும்பத்தைச் சேர்ந்த நாக சைதன்யா கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக ஒன்பது மாதம் குஜராத் தாண்டி மீன்பிடிக்க செல்கிறார் மீதமுள்ள மூன்று மாதம் சொந்த ஊருக்கு வருகிறார் பின்னொரு சமயம் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாக அவர் கூற சாய் பல்லவி அதனை தடுக்கிறார் ஆனால் அதனையும் மீறி அவர் கடலுக்குச் செல்கிறார் அப்பொழுது ஏற்படும் இடறினால் அவர்கள் செல்லும் படகானது வழி தெரியாமல் ,திசை மாறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விடுகிறது .மீனவர்களை பாகிஸ்தான் அரசாங்கம் சிறை பிடிக்கிறது அங்கிருந்து அவர் தப்பித்து வந்து மீண்டும் சாய்பல்லவியுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
காதல், சென்டிமெண்ட், ஆக்சன் என பலதரப்பட்ட பரிமாணங்களில் மீனவர் தலைவனாக நாகசைதன்யா ராஜு என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் அவர் படத்தில் தான் ஏற்று கொண்டுள்ள கதாபாத்திரத்திற்கு உரிய தோற்றம், உடல் மொழியுடன் நன்கு நடித்துள்ளார் ..அவருக்கு பொருத்தமான இணையாக சாய் பல்லவி ,சத்யா என்னும் கதாபாத்திரத்தில் நாயகியாக நன்கு நடித்துள்ளார்.மற்றும் ஆடுகளம் நரேன் ,கருணாகரன்,பப்லு பிருத்விராஜ் போன்றவர்களின் கதாபாத்திரங்களும், அதில் அவர்கள் அதை அவர்கள் ஏற்று நடித்துள்ளதும் குறைவில்லாமல், நிறைவாக உள்ளது.
படத்தின் கதையானது விசாகப்பட்டினத்தின் அருகே உள்ள ஸ்ரீ காகுளத்திலிருந்து பயணித்து, குஜராத்திற்கு சென்று, பின் அங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று, அங்குள்ள சிறைக்கு சென்று, அதன் பிறகு மறுபடியும் சொந்த மண்ணுக்கு திரும்புவது போன்ற நீண்ட பயணம்.கொண்டது அந்த பயணத்தின் வழியே . உணர்வுபூர்வமான காதலின் ஆழத்தினையும்,உன்னதமான நாட்டுப்பற்றின் மேன்மையினையும் சித்தரிக்கும் கதையினை, சிறப்பான காட்சிகளோடு உருவாக்கி நல்லதொரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் சந்து மொண்டேட்டி., அவருக்கு பக்கபலமாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் , ஒளிப்பதிவாளர் ஷ்யாம் தத்தும் பணியாற்றியுள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ரசிக்க வைக்கும் பாடல்களும், காட்சிகளின் பின்புலத்திற்கு பலம் சேர்க்கும் பின்னணி இசையும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
தண்டேல்-கடலும், காதலும்- நேசமும், தேசமும் கை கோர்க்கும் கதை.