Thursday, December 5

வெந்து தணிந்தது காடு- திரைவிமர்சனம்

இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சிம்பு இணைந்து தந்த மாநாடு படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்த படம் வெந்து தணிந்தது காடு இந்த படத்திற்காக சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து வெளியான புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர் ளுக்கும் நிறைய எதிர்பார்ப்புகளை தந்திருந்தது விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இருபடங்களுக்கு பிறகு மீண்டும் கௌதம் வாசுதேவ் மேனன் சிம்பு கூட்டணி இணைந்தது எதிர்பார்ப்பை இன்னுமும் எகிற வைத்தது

நெல்லைசீமையிலிருந்து பிழைப்பிற்காக மும்பைக்கு செல்லும் முத்துவீரன் என்ற இளைஞனாக சிம்பு நடி த்துள்ளார் அவர், ஹோட்டல் ஒன்றில் அடைக்கலமாகும் முத்து அங்கு கேங்ஸ்டார்களிடம் மாட்டிக் கொண்டு பல பிரச்சனைகளை சந்திக்கிறார் , அவற்றை நேரிடையாக களம் கண்டு தானே கேங்ஸ்டர் ஆக அவர் வளரும் கதையோட்டத்தை கொண்டதே இந்த படம்..

21 வயது இளைஞனாக அறிமுகம் கொடுக்கும் கொடுக்கும் சிம்பு, கிராமத்து இளைஞர்களுக்குரிய உடல்மொழியுடன் . வட்டார வழக்கு மொழி பேசுவதிலும் சிறப்பாக நடித்து கதாபாத்திரமாகவே மாறியு ள்ளார் இவரது படபட்டியலில் இந்த வெந்து தணிந்தது காடு முக்கியமான படமாகவே இருக்கும் .

இந்த படத்தின் கதாநாயகியாக சித்தி இத்னானி, Gvmன் பட நாயகிகளை பிரதிபலிக்கிறார் .குறைவான காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நிறைவான நடிப்பை தந்துள்ளார் ராதிகா சரத்குமார்.இது தவிர நடிகர்கள் சித்திக், நீரஜ் மாதவ் மற்றும் அப்புக்குட்டி என பலரும் கொடுத்த பாத்திரங்களில் தங்கள் பங்களிப்பை நிறைவாய் தந்துள்ளனர் .
படத்தின் பெரிய ப்ளஸ்களில் முக்கியமானது ஏஆர் ரகுமானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என்று சொல்லலாம் குறிப்பாக ‘மறக்குமா நெஞ்சம்’, ‘மல்லிப்பூ’ பாடல்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்க்கும் பாடல்களாய் அமைந்துள்ளன.பாடல்களில் கவிஞர் தாமரையின் வரிகள், வார்த்தைஜாலங்களாய் மிளிர்ந்துள்ளன . எழுத்தாளர் ஜெயமோகன் ,கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் முதல் முறையாக வந்துள்ள படம் .சித்தார்த்தாவின் ஒளிப்பதிவும் , ஆண்டனியின் படத்தொகுப்பும் இயக்குனர் Gvmக்கு முழு  பங்களிப்பை தந்துள்ளது

மாஸ், காட்சிகள் பஞ்ச் வசனங்கள்இல்லாத வித்தியாசமான சிம்புவை அவரது ரசிகர்களுக்கு தந்து புதிய பரிமாணத்தில் அவர் பயணித்துள்ளார் இந்த புதிய பரிமாணம் ,அவரது ரசிகர்களை தாண்டி அனைத்து சினிமா ரசிகர்களையும் கவரும் வகையில் உள்ளது என்றே சொல்லலாம்

ஐசரி கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள இந்த படம் முத்து என்கிற இளைஞனின் வாழ்வியலை சொல்லும் படமாய் உள்ளது, இந்த படத்தின் வெற்றி இந்த படக்குழுவின் கூட்டணியை பல படங்களுக்கு தொடர்ந்து பயணிக்க வைக்கும் என்று உறுதியாக கூறலாம்.

Spread the love