மிடுக்கான காவல் அதிகாரி பாரி வெங்கட் என்னும் கதாபாத்திரத்தில் அருண்விஜய் காவல்துறை அதிகாரிக்கு உரிய உடல் தோற்ற மொழியுடன் சிறப்பாக நடித்துள்ளார், அழகான காதல் மனைவி,அன்பான குழந்தை என நிறைவான குடும்பத்தில் வாழும், ஹீரோவிற்கு ஏற்படும் சூழ்நிலையால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ,இந்த சமயத்தில் அவரது மனைவி மர்ம மரணம் என நிகழ்வுகள் நடந்தேற , தனது மனைவியின் கொலைக்கு காரணமானவர்களை தேடி கண்டுபிடிக்க நாயகன் முயற்சி செய்கிறார் அவரோட முயற்சிகள் வெற்றியில் முடிந்ததா? இல்லையா? என்ற வினாக்களுக்கு விடை தருகிறது ‘சினம்’ திரைப்படத்தின் கதை.
சிறந்த குடும்ப தலைவனாகவும் கடமை தவறாத காவல் அதிகாரியாகவும் ,எதிரிகளை பந்தாடும் அதிரடி நாயகனாகவும், வேறுபட்ட காட்சிகளில் தன்னோட மாறுபட்ட நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் முழு ஆக்ஷன் ஹீரோவாய் நிறைகிறார் அருண்விஜய் .
பாலக் லால்வானி இத்திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். குறைவான காட்சிகளே படத்தில் இவர் இடம் பெற்றாலும் தன் கதாபாத்திர்த்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளார் மேலும் ஏட்டைய்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள காளி வெங்கட் நாயகனுக்கு உதவும் ரோலில் நன்றாக நடித்துள்ளார்
குடும்பத்தின் அனைத்து வயதினரையும் ஈர்க்க கூடிய வகையில் சென்டிமென்ட், ஆக்ஷன் என எல்லா அம்ச ங்களும் நிறைந்த காட்சிகளுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் GNR. குமரவேலன்.இவருக்கு பக்கபலமாய் ஷபீர் தபேரே ஆலம் இசையினையும் , கோபிநாத் ஒளிப்பதிவையும் வழங்கி ஆக்ஷன் படத்தின் வேகத்திற்க்கு மேலும் வலு சேர்க்கிறார்கள் .
த்ரில்லர் மற்றும் எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்த அம்சங்கள் நிறைந்த இந்த ‘சினம்’ எல்லா தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும்