connecting dots production நிறுவன தயாரிப்பில் இந்த வாரம் வெளியாகி உள்ள படம் டூடி .
இந்த படத்தில் கார்த்திக் மதுசூதன் ,ஷ்ரிதா சிவதாஸ், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்,ஒளிப்பதிவை மதன் சுந்தர்ராஜ்,சுனில் G N என்ற இருவரும், இசையை K.C. பாலசாரங்கனும் படத்தொகுப்பை சாம் RD.X யும் செய்துஇருக்கிறார்கள் .
கதையை எழுதியதோடு ஹீரோவாகவும் நடித்துஇருக்கிறார் கார்த்திக் மதுசூதன்,அதேபோல் எடிட்டர் சாமுடன் சேர்ந்து படைத்தை இயக்கியும் உள்ளார்,PLAYBOYயாக ,கல்யாணத்தின்மீது சிறிதும் நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு காதல் ஏற்படுகிறது.இதுதான் படத்தின் one line என்று சொல்லலாம்,
மது மற்றும் மதுவுடன் சந்தோசமாக எந்த கவலையும் இன்றி கார்த்திக் இருக்கிறார், பணத்திற்க்கு எந்த தட்டுப்பாடும் இல்லாத காரணத்தால் தனக்கு பிடித்த பல பெண்களுடன் ஜாலியாக இருக்கிறார்,இந்த நிலையில்தான் நாயகி ஷ்ரிதா ,சென்னியிலிருந்து ஒரு Functionக்காக பெங்களூருக்கு வருகிறார், அங்கு ஹீரோவை சந்திக்கிறார், தன்னை அறியாமலே அவரை காதலிக்கிறார், அவரை பற்றி தெரிந்திருந்தும் 7 நாட்கள் அவருடன் தங்குகின்றார் பின்பு ஷ்ரிதா 5 வருடமாக சென்னயில் ஒருவரை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் காதலில் பிரிவு ஏற்படுகிறது,மீண்டும் சென்னைக்கு ஷ்ரிதா வருகிறார் .கடைசியில் அவர் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டாரா ?இல்லை யாருடன் அவருக்கு திருமணம் நடந்தது? என்பதே மீதி கதை.
இன்றைய காலகட்ட இளம் வயதினர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கேரக்டர்ல கதாநாயகனாகவும்,நடித்ததோடு படைத்தை தயாரித்து இயக்கியும் இருக்கிறார் கார்த்திக் மதுசூதன், நவீன இன்றைய காலகட்ட சூழ்நிலையை பிரதிபலிக்கும் living together, pickup ,drop, Escape என் மாடர்ன் Relationship கான்செப்ட்ல கதை களத்தை அமைத்திருக்கிறார்,அனால் அது எல்லா தரப்பு மக்களுக்கும் பிடி க்குமா? என்பது பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும் ,படத்துக்கு பக்க பலமாய் எடிட்டர் சாம் இருந்துள்ளார் அனைவருக்கும் இது அறிமுகப்படம் என்று சொன்னாலும் கூட கதையில் இன்னமும் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம் என்ற ஒரு குறை தவிர, மற்றபடி தொழில்நுட்பங்களில் நம்மை ஆச்சரியப்பட வைத்திருக் கிறார்கள்,அறிமுக நடிகர்களின் நடிப்பும் ,அதிலும் குறிப்பாக நாயகியின் நடிப்பும் குறை சொல்ல முடியாத வகையில் உள்ளது இந்தடூடியில் .
டூடி இன்றைய காலசூழலின் பிரதிபலிப்பு