இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’.
கிராமத்தில் இருக்கிற மக்கள் ரொம்ப மதிப்பும் மரியாதையும் வைச்சு இருக்குற ஒரு பெரியவரை பெருசு அப்படின்னு அன்போட கூப்பிடுறாங்க ,அந்த பெரியவருக்கு இரண்டு மகன்கள் மூத்த மகனோட பேரு சாமிக்கண்ணு (சுனில் ),சின்ன மகனோட பேரு துரைக்கண்ணு (வைபவ் )ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆயிடுச்சு, அவங்களோட மனைவி சாந்தி (நிஹாரிகா) ராணி (சாந்தினி ) யோட ஒரே கூட்டு குடும்பமா வாழ்ந்துட்டு வராங்க, ஒரு நாள் திடீர்னு பெருசுன்னு அழைக்கப்படுற அந்த பெரியவர் இறந்து போயிருறாரு, ஆனா பெருசோட பிரேதத்தை மத்தவங்க கிட்ட காட்ட முடியாத மாதிரி பெரிசா ஒரு பிரச்சனை ஏற்படுது ,அதனால அந்த மொத்த குடும்பமுமே அதிர்ச்சி அடையுறாங்க, இந்த சிக்கல வெளியே தெரியாம மறைக்கணும்னு நினைக்கிறாங்க ,அதுக்கப்புறம் என்ன நடந்தது அப்படிங்கறதுதான் பெருசு படத்தோட மீதி கதை.
படத்தோட கதையே நாயகனா இருக்கிற இந்த படத்துல, முக்கியமான மையக்கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்கிற ரெண்டு சகோதரர்களில அண்ணனா நடிச்சிருக்கிற சுனில் தம்பியா நடித்திருக்கிற வைபவ் ரெண்டு பேருமே அந்தந்த கேரக்டர்ல ரொம்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க ,குறிப்பா குடிகாரரா நடிச்சுருக்கிற வைபவ் தன்னோட காட்சிகள்ல இயல்பா நடிச்சு கேரக்டருக்கு பலம் சேர்த்து இருக்காரு ,சாந்தினி ,நிகாரிக்கா ரெண்டு பேரும் நாயகிகளாவும், அம்மா கதாபாத்திரத்துல தனலட்சுமியும் நல்லா நடிச்சு இருக்காங்க , மேலும் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி,பாலசரவணன் ,விடிவி கணேஷ், கருணாகரன் ,சுவாமிநாதன் அப்படின்னு பெரிய நகைச்சுவை நட்சத்திர பட்டாளமே படம் முழுக்க தங்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில நல்ல நகைச்சுவை விருந்து கொடுத்திருக்காங்க .
பொதுவா இந்த மாதிரி நகைச்சுவை குடும்ப திரைப்படங்கள்ல நிறைய கேரக்டர் இருப்பாங்க, உட்புற படபிடிப்பு பெரும்பாலும் இருக்கிற மாதிரி காட்சிகள் அமைக்கப்படும் அதுக்கெல்லாம் பொருத்தமான ஒளி கேமரா கோணங்கள அமைச்சு இருக்காரு ஒளிப்பதிவாளர் சத்யா திலகம். இசையமைப்பாளர் அருண் ராஜின் பின்னணி இசை கதையோடவே பயணிக்கிற வகையில் நல்ல அமைஞ்சி இருந்துச்சு.
அடல்ட் காமெடி என்னும் பாணியில கதைக்களத்தை அமைச்சு என்னதான் டீசென்ட்ட திரைக்கதைய நகர்த்திக்கொண்டு போனாலும் சிலகாட்சிகளில கொஞ்சம் எல்லையை மீறி போறத தவிர்த்து இருக்கலாம். இருந்தாலும் ,எடுத்துக்கொண்ட கதைக்கு ,நல்ல நடிகர்களின் பட்டாள கூட்டணியோட நேர்த்தியான படமாக இயக்கியிருக்காரு இயக்குனர் இளங்கோ ராம்.
மொத்தத்தில பெரிசு, ரசிகர்களுக்கு தரும் நகைச்சுவை பரிசு.