Wednesday, April 15

‘TN 2026’- திரைப்பட விமர்சனம்

வெள்ளித்திரையில் இருந்து அரசியல் களம் காண விரும்பும் நாயகனின் கதையில் அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் கலந்து தேர்தல் காலத்திற்கு பொருத்தமான சூழலில் வெளிவந்திருக்க கூடிய படம் இந்த  ‘TN 2026’.

கதையின் நாயகன் குல்கந்த் குமார்( நட்டி நட்ராஜ்) வட இந்தியாவில் இருந்து வாழ்வாதாரத்துக்காக தமிழகத்திற்கு வருகிறார் .வந்த இடத்தில் வெள்ளித்திரையில் கிடைக்கும் வாய்ப்பு அவரை மிகப் பெரிய நாயகனாக மாற்றுகிறது. எம்ஜிஆர் அவர்களின் தீவிரமான அபிமானியும், பெரும் செல்வந்தருமான ஜமீன்தார் தம்பி ராமையா குல்கந்த் குமாரை உயரிய நிலைக்கு கொண்டு செல்ல பல வகைகளில் உதவி செய்கிறார் அதன்படியே வெள்ளித்திரையில் மிக உயர்ந்த நிலையை அடையும் குல்கந்த் குமாருக்கு அரசியல் ஆர்வத்தினையும் தம்பி ராமையா ஏற்படுத்துகிறார். இதனால் பல தடைகள் ஏற்பட்டாலும் அத்தனையும் மீறி புதிய அரசியல் கட்சி ஒன்றிணையும் குல்கந்து குமார் தொடங்குகிறார் .பலரின் உதவியோட 2020இல் முதல்வராகி விட வேண்டும் என்ற ஆசைக்கனவுடன் அவர் பயணிக்கிறார் .ஆனால் இப்படிப்பட்ட சூழலில் குல்கந்த் குமார் திடீரென்று ஒரு முக்கியமான முடிவினை எடுக்கிறார் .அதற்கான காரணம் என்ன? அதன் பின் நடந்தது என்ன இவை பற்றி விரிவாக சொல்வதுதான் படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக குல்கந்து குமார் என்னும் கதாபாத்திரத்தில் நட்டி நடராஜ் இந்த படத்தில் நடித்துள்ளார் .வாழ வந்த இடத்தில் கலை உலகிலும் பிரகாசித்து ,அரசியல் உலகிலும் பிரகாசிக்க நினைக்கும் நபராக அமைந்துள்ள கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு இதுவரை அவர் ஏற்றி இருந்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சிறப்பான முறையில் அமைந்திருந்தது. மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் கதையின் நாயகனுக்கு அரசியல் ஆலோசனைகள் கூறும் ஒரு ஆலோசகராக நடித்துள்ள தம்பி ராமையாவின் கதாபாத்திரமும் அதை அவர் சிறப்பாக ஏற்று நடித்திருந்த விதமும் ரசிக்கும்படி இருந்தது. மேலும் நெல்லை தமிழ் பேசி நடித்த எம் .எஸ் .பாஸ்கர்,, இளவரசு ,ஷிரித்தாராவ் ,சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் ரெடின் கிங்சிலி ஆதித்யா கதிர், விஜி சந்திரசேகர் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ரசிக்கும்படி இருக்கும் வகையில் தர்புகா சிவாவின் இசை அமைந்திருக்கிறது. பின்ண்ணி இசையினை பொருத்தமட்டில் காட்சிகளுடன் பயணித்து அதன் பின்புலத்தை நன்கு வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பி. ஜி. முத்தையாவின் கேமரா கோணங்களும், ஒளி அமைப்புகளும் கதையோட்டத்துடன் பயணித்து காட்சிகளுக்கு வலிமை சேர்த்துள்ளது.

குல்கந்து குமார் என்னும் தனி மனிதனின் வாழ்க்கையினை கதைக்களமாக எடுத்துக்கொண்டு அதனுடன் தற்கால அரசியல் நிகழ்வுகளையும் இணைத்து நகைச்சுவையுடன் பயணிக்கும் திரைக்கதை மூலம் சுவாரசியமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் உமாபதி ராமையா.

மொத்தத்தில் இந்த டிஎன் 2026 தேர்தல் கால நேரத்தில் அரசியலை அலசும் பொலிடிகல், காமெடி கமர்ஷியல் திரைப்பதிவு.

Spread the love