Sunday, April 20

ஸ்வீட் ஹார்ட்- திரைவிமர்சனம்

யுவன் சங்கர் ராஜா தயாரித்தும் இசைஅமைத்தும் உள்ள ஸ்வீட் ஹார்ட். படத்தில் ரியோ, கோபிகா ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள், இயக்கம் -ஸ்வினீத் எஸ்.சுகுமார்

சின்ன வயசிலேயே தன்னுடைய பெற்றோரை இழந்துட்ட கதையின் நாயகன் வாசு (ரியோராஜ் ) எந்த உறவு முறையை மேலேயுமே பெரிய நம்பிக்கையும் ,ஈடுபாடும் இல்லாமல் இருக்கிற இளைஞன்,ஒரு சூழல்ல, கதையின் நாயகியான மனுவை வாசு ( கோபிகா ரமேஷ் ) சந்திக்கிறாரு, ரெண்டு பேருக்கும் காதலும் ஏற்படுது ,இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனு கர்ப்பம் ஆகுறாங்க, இந்த சூழ்நிலைக்கு அப்புறம் குழந்தை தனக்கு வேணும்னு மனுவும், இந்த குழந்தையை அபார்ட் பண்ணிடலாம் அப்படின்னு வாசுவும் நினைக்கிறாங்க, இதன் பிறகு என்ன நடந்துச்சு அப்படிங்கிறது தான் ஸ்வீட்ஹார்ட் படத்தோட மீதிக்கதை.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களோட வரிசையில, நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருக்கற ,ரியோராஜ் இந்த படத்தில கதையின் நாயகனாக வாசு என்னும் கதாபாத்திரத்தில நடிச்சு இருக்குறாரு, காதல் ,மோதல், பிரிவு என பல பரிமாணங்களில தன்னோட நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய காட்சிகளில நல்லா நடிச்சு,அந்த கேரக்டருக்கு முற்றிலும் பொருத்தமானவராக திரையில் தோன்றுறாரு,கதையின் நாயகியாக மனு என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கோபிகாரமேஷ்  அறிமுகப்படம் என்று தோன்றாத வண்ணம் இயல்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ,கதாபாத்திரத்தோட ஒன்றிணைந்து நடிச்சு இருக்காங்க.. நாயகனுக்கு இணையா படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில தன்னோட நிறைவான நடிப்ப வெளிப்படுத்தி இருக்காங்க , மற்ற கதாபாத்திரங்களை பற்றி சொல்லும் பொழுது ரியோவின் நண்பரான வரும் அருணாச்சலேஸ்வரன் படத்தின் நகைச்சுவை காட்சிகள்ல நல்லா ஸ்கோர் பண்ணியிருக்காரு ,மற்றும் ரஞ்சிப் பணிக்கர், ரெடின்கிங்ஸ்டலி ,பௌசி போன்றவர்களும் தங்களோட கதாபாத்திரங்களில நல்லா நடிச்சு இருக்காங்க.

இளம் காதலர்களின் வாழ்வியல் காதல் கதையினை பேசுற கதைகளுக்கு, படத்தின் ஒளிப்பதிவும், இசையும் பெரியதொரு உறுதுணையாக இருக்க வேண்டும் ,அந்த வகையில இந்த படத்தோட ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியத்தின் காட்சி அமைப்புகள் கதை ஓட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துருக்கு , அதேபோல யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் மாந்தர்களின் உணர்வுகளை இசையால் பேச வைக்கற வகையில இருக்கு, காதலை களமாக கொண்ட கதைக்கு பொருத்தமான கலைஞர்களை நடிக்க வைச்சு , அதோட வலுவான கதாபாத்திர பின்னணியும் அமைச்சு ,கூடவே சிறப்பான திரைக்கதையோட நல்லதொரு படத்தை இயக்குனர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் கொடுத்துருக்காரு ,

இன்றைய இளைஞர்களின் உணர்வுகளையும், வாழ்வியலையும் பேசுற இந்த ஸ்வீட் ஹார்ட் இளம் ரசிகர்களின் இதயங்களில் நிச்சயமா இடம் பிடிக்கும் .

Spread the love